சர்வாஷ்டவர்க பலன்கள்

சர்வாஷ்டக வர்கத்தின் மொத்த பரல்கள் 337. இதை 12 ஆல் வகுத்தால் ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் வரும். எனவே ஒரு ராசியில் 28 பரல்களுக்கு மேல் இருபது நல்லது.

ஒரு ராசியில் 30 க்கு மேல் பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலன்களை கொடுக்கும்.

ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் 25க்கு குறைவாக பரல்கள் இருந்து, அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் தீயபலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் மிக குறைவான பரல்களும், அதற்கு அடுத்த ராசியில் மிக அதிக அளவில் பரல்களும் இருந்தால் வாழ்கையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். 12 ராசிகளில் உள்ள பரல்கள்அதிக வித்தியாசமில்லாமல் சராசரியாக இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் வாழ்கையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை சீராக நகர்ந்து செல்லும்.

சந்திரன் நின்ற ராசிக்கு 12-1-2 ஆம்இடங்களில் எதாவது ஒரு இடத்தில் 30க்கு மேல் பரல்கள் இருந்தால் ஏழரை சனி காலத்தில் ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் நிகழாது, நன்மைகளே நடக்கும்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் சரிசமாக இருந்தால் ஜாதகருக்கு மத்திம ஆயுள்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு அற்ப ஆயுள்.

லக்னத்திற்கு 1-4-7-10, 5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். அதற்கு அகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-8-12, 3-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு புறம் என்று பெயர். புறப்பரல்களை விட அகப்பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எல்லா விதத்திலும் மனதிருப்தி உண்டாகும். புறப்பரல்களை விட அகப்பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எதிலும் திருப்தி உண்டாகாது.

லக்னத்திற்கு 1-2-4-9-10-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு ஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 164 க்கு மேல் இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும். 164 க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

லக்னத்திற்கு 6-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதறகு அஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 76 க்கு மேல் இருந்தால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 76 க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். எந்த ராசியில் குறைந்த பட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்களுடன் கூட்டு சேரகூடாது.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகங்களை ஒப்பிடும்போது, யாருடைய ஜாதகத்தில், லக்னத்தில் அதிக பட்ச பரல்கள் உள்ளதோ, அவரே அந்த குடும்பத்தை வழி நடத்தி செல்வார்.

தொழில் முறை கூட்டாளிகளின் ஜாதகங்களை ஒப்பிடும் போது யாருடைய ஜாதகத்தில், லக்னத்தில் அதிக பட்ச பரல்கள் உள்ளதோ, அவரே தலைமை ஏற்று அந்த தொழிலை நடத்தி செல்வார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து தொழில் செய்யும் பொழுது, அவர்களில் யாருடைய ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் அதிக பட்ச பரல்கள் இருக்கிறதோ, அவர் பெயரில் தொழில் நடத்துவது நன்மை பயக்கும்.

லக்னத்திற்கு 1-5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு பந்துகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-10 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு சேவகம் என்று பெயர். லக்னத்திற்கு 3-7-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டுவோம், இதற்கு போஷகம் என்று பெயர். லக்னத்திற்கு 1-4-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு காதகம் என்று பெயர். பந்துகம் என்பது உறவுகளை குறிக்கும். சேவகம் என்பது சேவை அல்லது தொழில் நிலையைக் குறிக்கும். போஷகம் என்பது பிறரை ஆதரிப்பதை குறிக்கும். காதகம் என்றால் பீடை என்று பொருள்படும். காதக பரல்களை விட போஷக பரல்கள் அதிகமாக இருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும். காதக பரல்களை விட போஷக பரல்கள் குறைவாக இருந்தால் தரித்திரம் உண்டாகும். செகவ பரல்களை விட பந்துக பரல்கள் அதிகமாக இருந்தால் சுற்றத்தாரால் நன்மை உண்டாகும். சேவக பரல்களை விட பந்துக பரல்கள் குறைவாக இருந்தால் அரசாங்க வேலை கிடைக்கும்.

எந்தேந்த பாவத்தில் எவ்வளவு பரல்கள் இருந்தால் நல்லது என்று கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாவம் பரல்கள் (இருந்தால் நல்லது)
1 25
2 22
3 29
4 24
5 25
6 34
7 19
8 24
9 29
10 36
11 54
12 16

லக்னம் முதல் நாலாம் பாவம் வரையுள்ள பரல்களை கூட்டவும். இது இளம் வயதை குறிக்கும். ஐந்தாம் பாவம் முதல் எட்டாம் பாவம் வரை உள்ள பரல்களை கூட்டவும். இது நடு வயதை குறிக்கும். ஒன்பதாம் பாவம் முதல் பன்னிரெண்டாம் பாவம் வரையில் உள்ள பரல்களை கூட்டவும். இது முது வயதை குறிக்கும். எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான்.

லக்னத்திற்கு 1-4-7-10 ஆம் இடங்களை ஒன்றாக கூட்டவும். இது இளம் வயதைக் குறிக்கும். லக்னத்திற்கு 2-5-8-11 ஆம் இடங்கள் நடு வயதைக் குறிக்கும். லக்னத்திற்கு 3-6-9-12 இடங்கள் முது வயதைக் குறிக்கும். எந்த வயதுக்குரிய பகுதியில் பரல்கள் கூட்டுத்தொகை அதிகமாக இருக்கின்றதோ அக்கால கட்டத்தில் ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான்.

லக்னத்தை பிறந்த வருடமாக பாவித்து கொண்டு அதிலிருந்து வரிசை கிரமமாக வருடங்களை ராசிகளில் எண்ணிக் கொண்டு போகவும். எந்த ராசியில் பரல்கள் அதிகம் உள்ளதோ அங்கு வருகிறனற வருடங்கள் அதிக நன்மை உள்ளதாக இருக்கும்.

லக்னத்தை பிறந்த மாதமாக கணக்கில் கொண்டு, வரிசையாக மாதங்களை எழுதுங்கள். எந்த ராசியில் பரல்கள் அதிகமாக உள்ளதோ அந்த ராசியில் வருகின்ற மாதங்களில் நற்பலன்கள் அதிகமாக நடக்கும்.

இதைபோலவே.தமிழ் மாதத்தையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

எந்த ராசியில் அதிக பரல்கள் உள்ளதோ, அந்த ராசியில் சனி, குரு போன்ற கிரகங்கள் வாழ்கையில் முக்கிய நிகழ்வுகள் அல்லது முக்கிய திருப்பங்கள் ஏற்படும்.

தாச-புத்தி நடத்தும் கிரகம் எந்த ராசியில் நிற்கின்றதோ, அந்த ராசியில் 28 பரல்கள் இருந்தால், அந்த கிரகம் சராசரியாக சுப-அசுப பலன்களை கொடுக்கும். 28 பரல்களுக்கு மேல் இருந்தால் சுப பலன்களையே தரும். 28 பரல்களுக்கு கீழ் இருந்தால், அசுப பலன்களையே தரும்.

தாச-புத்தி  நடத்தும் கிரகம் இராசி கட்டடத்தில் பெற்ற பரல்களை விட நவாம்ச கட்டத்தின் ராசியில் உள்ள கட்டடத்தில் உள்ள பரல்களை விட குறைவானதாக இருந்தால் அந்த கிரகம் தனது தசா – புத்தியில் நல்லது செய்யும். அதிகமாக இருந்தால் தீமையை செய்யும்.

7-9-12 பாவங்களில் உள்ள பரல்கள் தான் இருப்பதிலேயே குறைவான பரல்களை கொண்டிருக்குமானால் ஜாதகர் வெளி நாடு செல்வார்.

சர்வாஷ்டக வர்கத்தில் எந்த திசையில் அதிக பரல்கள் உள்ளதோ அந்த திசை அதிர்ஷ்ட திசை ஆகும். அந்த திசையை நோக்கி பயணம் செய்வதும், வீடு, நிலம் வாங்குவதும் நலம் பயக்கும்.

  • கிழக்கு (மேஷம் + சிம்மம் + தனுசு)
  • தெற்கு (ரிஷபம் + கன்னி + மகரம்)
  • மேற்கு (மிதுனம் + துலாம் + கும்பம்
  • வடக்கு (கடகம் + விருச்சிகம் + மீனம்)

இங்கு கொடுக்கப்பட்டுள்ள திசை ராசிககளை கூட்டி எந்த திசையில் பரல்கள் அதிகமாக வருகின்றதோ அந்த திசையையே அதிர்ஷ்ட திசையாக கொள்ள வேண்டும்.

மேலும் மற்றுமொரு வழியாகவும் அதிர்ஷ்ட திசையைக் காணலாம்.

  • 1-12-11 (பாவங்கள் கிழக்கு திசையை குறிக்கும்)
  • 10-9-8 (பாவங்கள் தெற்கு திசையை குறிக்கும்)
  • 7-6-5 (பாவங்கள் மேற்கு திசையை குறிக்கும்)
  • 4-3-2 (பாவங்கள் வடக்கு திசையை குறிக்கும்)

சர்வாஷ்டக வர்கத்தில் சுக்ரன் நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குரு நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. சனி நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீன இராசி முதல் மிதுன இராசி வரை இளம் வயதைக் குறிக்கும். கடக இராசி முதல் துலாம் இராசி வரை நடு வயதைக் குறிக்கும். விருச்சிகம் முதல் கும்பம் வரை முது வயதைக் குறிக்கும். எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அப்பொழுது ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான்.

லக்னதில் உள்ள பரல்களைவிட ஏழாம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால், மனைவி ஜாதகனுக்கு அடங்கி நடப்பாள்.

நாலாம் வீட்டில் உள்ள பரல்களை விட ஆறாம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

பதினோராம் வீட்டில் உள்ள பரல்கள், பணிரெண்டாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால், வரவு அதிகம் செலவு குறைவு

பதினோராம் வீட்டில் உள்ள பரல்கள், பத்தாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால் உழைபுக்கேற்ப ஊதியம் கிடைக்கும்.

இரண்டாம் வீட்டிலும், நாலாம் வீட்டிலும் பரல்கள் குறைவாக இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்காது.

ஐந்தாம் வீட்டில் உள்ள பரல்கள், ஏழாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால் ஜாதகன் மனைவிக்கு அடங்கி நடப்பான்.

அதிகபட்ச பரல்கள் லக்னத்தில் இருந்தால் அல்லது லக்னாதிபதியின் வீட்டில் இருந்தால் ஜாதகன் தலைமைப்பண்பு கொண்டவானாக இருப்பான். ஜாதகனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுய முயற்சியில் ஜாதகன் முன்னேறுவான்.

அதிகபட்ச பரல்கள் இரண்டாம் இடத்தில இருந்தால் அல்லது இரண்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால்.ஜாதகன் சிறந்த பேச்சாளனாக திகழ்வான்.

அதிகபட்ச பரல்கள் மூன்றாம் வீட்டில் அல்லது மூன்றாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சிறந்த எழுத்தாளனாக திகழ்வான். நல்ல தைரியசாலியாக இருப்பான்.

அதிகபட்ச பரல்கள் நான்காம் வீட்டில் அல்லது நான்காம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் இளம் வயதிலேயே வீடு வாகனங்கள் அமையும்.ஜாதகன் சுகவான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்..

அதிகபட்ச பரல்கள் ஐந்தாம் வீட்டில் அல்லது ஐந்தாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சிறந்த கலைஞன் ஆகா திகழ்வான்.

அதிகபட்ச பரல்கள் ஆறாம் வீட்டில் அல்லது ஆறாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் அடிமை தொழில் செய்வான். எதிரிகள் / கடன் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

அதிகபட்ச பரல்கள் ஏழாம் வீட்டில் அல்லது ஏழாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் மனைவி தயவில் வாழ்க்கை நடத்துவான்.

அதிகபட்ச பரல்கள் எட்டாம் வீட்டில் அல்லது எட்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் வாழ்கையில் அவமானங்கள் தொடர்கதையாக இருக்கும்.

அதிகபட்ச பரல்கள் ஒன்பதாம் வீட்டில் அல்லது ஒன்பதாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் பெரும் பூர்வ புண்ணியம் பெற்றவன்.

அதிகபட்ச பரல்கள் பத்தாம் வீட்டில் அல்லது பத்தாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சொந்தமாக தொழில் செய்வான். அடிமை தொழில் செய்ய மாட்டான். கௌரவமாக வாழ்க்கை நடத்துவான்.

அதிகபட்ச பரல்கள் பதினோன்றாம் வீட்டில் அல்லது பதினோன்றாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அதிகபட்ச பரல்கள் பண்ணிரெண்டாம் வீட்டில் அல்லது பண்ணிரெண்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் செலவாளியாக இருப்பான்.