வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக எந்த வேட்பாளர் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் உண்டு என்ற கணிப்பு செய்து வெளியிட நமது மென்பொருளில் ஒரு புது செயலியின் உருவாக்கம் நடந்துகொண்டு இருக்கின்றது. இது முழுக்க முழுக்க ஜோதிட விதிகளை பின்பற்றி எழுதப்பட்டு கொண்டிருக்கும் மென்பொருள். எந்த தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும் இங்கு இடமில்லை.

தொடந்து இணைத்திருங்கள். இந்த பக்கத்தில் கணிப்புகள் இடம் பெரும்.

மேலும் தமிழகம் எப்படி மாற்றம் பெறவேண்டும் என்ற எமது ஆசையினையும் இந்த பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றோம். இது நமது தனி மனித விருப்பம். இந்த கருத்துக்கள் உங்களுக்கு பிடித்தால் இணைத்து செயல்படலாம். நன்றி.

நாங்கள் யார்?

அரசு இயந்திரத்தை நிர்வகிப்பது யாராக இருந்தாலும், அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து, நடக்கும் தவறுகளை கண்ணியத்துடன் சுட்டி காட்டி தவறுகளை திருத்த முயற்சி செய்வதும்,

மக்களின் கவனிக்கப்படாத தேவைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அவற்றை நிறைவேற்றி தர முயற்சிப்பதும்,

நாட்டிற்க்கு தேவையான நல்ல திட்டங்களை கருத்துருவாக்கம் செய்து அதனை அரசின் பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சிப்பதும் எமது தன்னார்வ பனி.

CONTINUAL IMPROVEMENT PREOCESS எனும் தர முன்னேற்ற கொள்கை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்.

தொடர் பயிற்சிகளின் மற்றும் முயற்சிகளின் மூலம் அரசு இயந்திரத்தை திறம்பட நடத்த விரும்பும் சாமானிய மக்கள்.

தினமும் மனதையும், உடலையும், வீட்டையும் கூடவே நாட்டையும் சுத்தப்படுத்தி, ஒழுக்கத்துடனும், சொந்த உழைப்பினிலும் வாழ முற்படும் எளிய மனிதர்கள்,

Back to Exactpredictions

நாங்கள் விரும்புவது என்ன?


உண்ண தரமான உணவு, உடுக்க தரமான உடை, இருக்க வசதியான இடம் ஆகிய மூன்றும் தமிழகத்தின் எல்லைக்குள் வாழும் அனைவருக்கும் 100 சதவிகிதம் பூர்த்தி செய்தல்

மக்கள் அனைவரும் கடன், நோய், பகை அற்ற வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி பராமரித்தல்எந்த வேலையும், மதமும், ஜாதியும், மொழியும், நாடும் உயர்ந்தோ, தாழ்ந்ததோ இல்லை, மாறாக அனைத்தும் சமம் என்ற மனப்பான்மையை, அணைத்து மக்களும் உணர்ந்து வாழும்படியான சூழ்நிலையை உருவாக்கி பராமரித்தல்.


Back to Exactpredictions

எமது கொள்கை


ஊக்கமுடைமை


உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து


திருக்குறள் 596

எப்பொழுதும் (ஒரு அரசன்) எண்ணுவது எல்லாம் உயர்ந்த எண்ணங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த எண்ணங்கள் சில நேரம் கை கூடி பலன் அளிக்க கூடும். சில நேரம் செயலற்று, பயனளிக்காமல் போக கூடும். அது கை கூடாத தருணங்களில் கூட, நாம் ஊக்கத்தோடு, உயர்வாக எண்ணுவதை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.


எண்ணங்கள் உயர்வாக உள்ள பொழுது அது நம் செயலில் பிரதிபலிக்கும். அது நம்மிடமும், நம்மை சுற்றி உள்ளோரிடமும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். அதுவே நம் வெற்றிக்கும் அடிக்கோளாக அமையும். சில சூழ்நிலைகளில் வெற்றி கை கூடாமல் போகும் பொழுது,நாம் தளர்வடையாமல் எதிர்மறை சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளாமல், உயர்ந்த எண்ணங்கள் நீர்த்துப் போகாமல் காக்க வேண்டும்.. இதுவே எமது கொள்கை

அன்போடு அழைக்கின்றோம்...

எங்கள் கருத்துக்கள் மற்றும் தன்னார்வ பங்கெடுப்பு முறை உங்களுக்கும் பிடித்து இருந்தால், எங்களோடு சேர்ந்து நீங்களும் பயணிக்க விரும்பினால், பின்வரும் படிவத்தை முழுமனதுடன் பூர்த்தி செய்யுங்கள். நாமும் இந்த நாட்டுக்கு சிறிய பங்களிப்பை கொடுத்து உதவுவோம்.


Back to Exactpredictions

எமது இலக்கு


பணக்காரனை பார்த்து பொறாமை படாத, நன்றாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் கெட்டு போக விரும்பாத, அடுத்தவனுக்கு கிடைத்த வாய்ப்பை பார்த்து பொறாமை படாத சமுதாயம் படைத்தது, அதில் ஏழைகளும், நடுத்தர மக்களும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைந்து, அடுத்த அடுத்த வாழ்க்கை தரத்திற்கு உயர்ந்து, அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 2031 ஆம் வருடத்தில் ஏழைகளும், நடுத்தர மக்களும் இல்லாத, அனைவருமே உயர் நடுத்தர வழக்கை வாழ வழி செய்தல்.

Back to Exactpredictions

மக்களின் வாழ்கை தரம்


மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.


ஒவ்வொரு துறையிலும் நாமே ஒரு உயர்ந்த தரத்தை தேர்வு செய்து, இனிமேல் இந்த துறையில் இந்த தரம் தான் அடிப்படை தரமாக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்க வேண்டும்.


எடுத்துகாட்டிற்கு சில ....


1. வெளி மார்க்கெட்டில் தற்போது 50 ரூபாய்க்கு விற்கப்படும் தரமான அரிசியைத்தான், இனி ரேஷனில் வழங்க வேண்டும் என்ற தரதை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்


2. போக்குவரத்துக்கு கழகங்களில் இனி புதிதாக வாங்கப்படும் அணைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்ட, குண்டாக இருபவராகளும் அமர வசதியாக, நல்ல இடவசதி கொண்ட இருக்கைகளை கொண்ட பேரூந்துகளாக தான் இனி வாங்கவேண்டும் என்ற தரதை நிர்ணயித்து அதன் படி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்


3. ஆயிரக்கணக்கான மக்கள் கார் விபத்தில் இருக்கின்றனர். எனவே இனி ஆட்டோமேட்டிக் கியர் ட்ரான்ஸ்மிசன் கொண்ட, ஏர்பேக் அவசியம் இருக்கும் கார்கள் மட்டும் தான் தமிழகத்தில் புதிதாக விற்பனை செய்ய வேண்டும் என்ற தரதை நிர்ணயித்து அதன் படி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்


4. புதிதாக போடப்படும் சாலைகள் அனைத்தும் வளர்ந்த உலக நாடுகளில் உள்ள தரத்திற்கு தான் போடப்படவேண்டும் என்ற தரதை நிர்ணயித்து அதன் படி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்

இது போன்று எல்லா பொருட்களிலும், சேவைகளிலும் நாமே ஒரு உயர் தரத்தை நிர்ணயிக்காமல் இருந்தால், நிச்சயமாக அணைத்து மக்களும் உயந்த வாழ்க்கைக்கு சீக்கிரமாக மாற முடியாது.


இப்போது மெட்ரோ ரயிலை எடுத்து கொள்ளுங்கள். சிங்கப்பூரிலும் இதே ரயில் தான் ஓடுகின்றது, இந்தியாவிலும் அதே ரயில் தான் ஓடுகின்றது. உலகம் முழுவதும் ஒரே தரத்தில் தான் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன. இரயில் நிலையங்களும் நல்ல தரத்தில் உள்ளது. ஏழைக்கு தனி மெட்ரோ ரயில், பணக்காரனுக்கு தனி மெட்ரோ ரயில் என்று இல்லை. அதுபோல அணைத்து துறைகளிலும் புதிய தரக் கொள்கைகளை கொண்டு வரவேண்டும்


எனவே நமக்கு நாமே அடுத்து இலக்கை, அடுத்த தரத்தை நிர்ணயித்து, அதன் படி நடந்து, அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களுக்கு சிறந்த வழக்கை தரம் இருக்கின்றது என்று உலகிற்கு உணர்த்த வேண்டும்.


Back to Exactpredictions

தமிழகத்தில் நாம்
செயல்படுத்த விரும்பும் திட்டங்கள்

எமது அனைத்து திட்டங்களும் இந்தியப் பேரரசின் இறையாண்மைக்கு உட்பட்டது. தமிழகத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக, அமைதி பூங்காவாக மாற்றும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது.

தமிழ் நாடு அரசு இயந்திரம் முழுதும், முழுமையான கணினி மயமாக்கம்
தமிழகத்தில் பல அரசு துறைகள் இன்னும் கணினி மயமாகப் படவில்லை. இருப்பினும் சில அரசு துறைகள் தற்போது கணினி மயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த துறைகளின் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாமல் தனித்தனியாக இருக்கின்றது. உதாரணத்திற்க்கு


பள்ளி/கல்விதுறையில் மாணவர்களின் தகவல் உண்டு.

உணவு பொருள் வழங்கு துறையில் குடும்ப அட்டை தகவல்கள் உண்டு

தேர்தல் ஆணையத்தில் வாக்காளர்களின் தகவல் உண்டு

வருமான வரித்துறையில் வங்கி பரிவர்த்தனை தகவல் உண்டு

காவல் / நீதி துறையில் குற்ற வழங்குகள் தகவல் உண்டு


இது போன்ற அணைத்து துறைகளின் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று இணைத்து இல்லை.

அரசு இயந்திரத்தை திறமையாக நிர்வகிக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை போல அனைத்து துறைகளையும் இணைத்த முழுமையான கணினி மயமாக்குதல் அவசியம்.


ஆட்சியாளர்கள் விரும்பும் பட்சத்தில் அரசுக்கு இந்த திட்டம் குறித்து நேரடி செயல் விளக்கம் கொடுத்து. எளிதில் இதனை நிறைவேற்ற உதவி செய்யப்படும்.


இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் சில பின்வருமாறு


முதலமைச்சர் தான் அறையில் இருந்தே தமிழகம் முழுவதும் தற்போது என்ன துறைகளில் என்னென்ன நடக்கின்றது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

அணைத்து குடும்பத்திற்கும் பொங்கல் பரிசாக 2000 வழங்குவதாக வைத்து கொண்டால் ஒரு பொத்தான் அழுத்தத்தில் அதனை அத்தனை நபர்களின் வங்கி கணக்கிலும் ஒரே நாளில் சேர்க்க முடியும்

போக்குவரத்து காவலர் உங்களை தடுத்து நிறுத்தும் பொழுது, உங்கள் ஆதார் என்னை மட்டும் சொல்லி விட்டு நீங்கள் உடனே அடுத்த பார்க்க கிளம்ப முடியும்.

நீங்கள் தனியார்/ அரசு மருத்தவமனைக்கு செல்லும் பொது உங்கள் முந்தைய மருத்துவ சிகிச்சை குறிப்புகள் பராமரிக்கப்படும்.

நூறு நாள் வேலை திட்டங்கள் முதலான அணைத்து அரசு திட்டங்களும் எத்தனை நபர்களுக்கு பலன் கொடுத்தன. இன்னும் தேவையில் இருப்பவர்கள் யார் யார் என எளிதாக அடையாளம் காணமுடியும்

இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம்

தரமான அரிசி. அனைவருக்கும் அவசியம்
உணவு பொருள் வழங்கல் மற்றும் பொது விநியோக துறை சீர்திருத்தங்கள்


தற்போது ரேஷனில் வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களின் தரம் நாம் அறிந்ததே. அனைத்து குடும்பத்திற்கும் மாதம் 25 கிலோ அரிசி மூட்டை, அதாவது வெளி மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசி, ரேஷனில் மானியத்தில் வழங்கவேண்டும்.


பாமயிலிற்கு பதிலாக ரீபைண்ட் கடலை என்னை / நல்லெண்ணெய் மிக மிக சகாய விலையில் வழங்கவேண்டும்


பெண்களுக்கு விஸ்பர் அல்ட்ரா தரத்தில் தரமான சானிட்டரி நாப்கின் மிக மிக சகாய விலையில் வழங்கவேண்டும்


வைட்டமின் A, B - Complex முதலான சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கவேண்டும்


இன்றும் ஏழைகள் மண்ணெண்ணெய் வாங்க அதி காலையில் இருந்தே வரிசையில் நிற்கும் அவலம் இருக்கவே செய்கின்றது.


ரேஷன்பொருட்கள் வீட்டிற்கு டெலிவரி வழங்கவேண்டும். டெலிவரி சார்ஜாக குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 20 வாங்க வேண்டும். இதன் மூலம் பல வேலை வாய்ப்புகள் உருவாகும்

எல்லா உயிரும் எமக்கு சமம் - மகத்தான மருத்துவம் மாந்தர் யாவர்க்கும்
தமிழ் நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அணைத்து குடும்பத்திற்கும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கவேண்டும்.


இதற்க்காக தனியான அடையாள அட்டைகள் வழங்க கூடாது. தமிழக அரசின் ஸ்மார்ட் ட் கார்டுடன் இணைத்த ஆதார் அட்டையே போதுமானது


இந்த மருத்துவ காப்பீடு அப்போலோ உள்பட அணைத்து மருத்துவ மனைகளிலும் பணமின்றி (cashless treatment) மருத்துவம் பார்க்க ஏதுவான வகையில் இருக்க வேண்டும்.


இதன் மூலம் கிராம புறங்களிலும்,, மாநிலத்தின் அணைத்து உட்பகுதிகளிலும் தரமான தனியார் மருத்துவ மனைகள் உருவாகும்


மாநிலத்தின் அணைத்து உட்பகுதிகளிலும் மருத்துவ மனைகள் கட்டுவதற்கு சிறப்பு சலுகைகள் வழங்கவேண்டும்


குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் 10 லட்சம் வரை காப்பீட்டை பயன் படுத்தி அனுமதிக்க வேண்டும்.


ஒரு வேலை, ஒரு வருடத்தில், குடுபத்தில் ஒருவருக்கே 10 லட்சமும் செலவாகி விட்டது என்றால், குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு மருத்துவ உதவி தேவை படும் போதும் அரசு அந்த தேவையை சந்திக்க வேண்டும்


ஆக நாட்டின் முதல் குடிமகனுக்கு கிடைக்கும் அணைத்து மருத்துவ வசதியும் அணைத்து குடி மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்


ஹெலிகாப்டர் ஆம்புலென்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்காக தனியாக ஹெலிகாப்டர்கள் வாங்க வேண்டும்


ராணுவத்தில் இருக்கின்ற ஹெலிகாப்டர்கள் இதற்காக பயன்படுத்த மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களுக்காக பயன்படாமல் ராணுவ தளவாடங்களை வைத்திருந்து என்ன பயன்.


அணைத்து பெரிய ஆஸ்பத்திரிகளின் தளத்தில் ஹெலிபேடுகள் அமைக்க வேண்டும்


கூடுமானவரை விபத்துகளில் / ஆபத்து / அவசர காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முயற்சிகள் எடுக்கப வேண்டும்


ஒரு உயிர் அலட்சியத்தினால் போனாலும் அது அரசின் தனிப்பட்டதோல்வியாகவே கருத வேண்டும்.


அதற்காக உடனே ராஜினாமா எல்லாம் செய்ய வேண்டாம். தவறுகளை திருத்தி ப்ராஸஸ் இம்ப்ரூவ் செய்தல் வேண்டும்.


அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும், மாலை வேலைகளிலும் out patient பார்க்க வேண்டும்


மலிவு விலை மருந்து கடை, மூன்று டாஸ்மாக் கடைக்கு ஒன்று என்ற அளவில் திறக்க வேண்டும். தற்போது புழக்கத்தில் இருக்கும் புதிய மருந்துகளும் இங்கு கிடைக்க வேண்டும். அந்த கடைகளில் சகாய விலையில் blood test எடுக்க வகை செய்ய வேண்டும். அதாவது லேப் ஆகவும் செயல்பட வேண்டும்


மருத்துவர்களை / செவிலியர்களை தனி மரியாதை ஸ்தானத்தில் வைத்து போற்ற வேண்டும்

கடன், வட்டி சீர்த்திருத்தங்கள்மாத சம்பளம் வாங்கும் அல்லது சிறு தொழில் / வியாபாரம் செய்யும் நடுத்தர மக்களின் தலையாய பிரச்சனை கடன் ஆகும்.


ஒட்டு அரசியலுக்காக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு அது செய்வோம் / இது செய்வோம் என கூறும் கட்சிகள் எதுவும் நடுத்தர உழைக்கும் மக்களை இதுவரை கண்டு கொண்டதே இல்லை.


ஏன் என்றால், எது எப்படியோ மானம், ரோசம் ஆகியவரை தோளில் போட்டுகொண்டு திரியும் இந்த அப்பாவி நடுத்தர வர்க்கம் விடிந்தால் பிழைப்பை பார்க்க சென்று விடும். அவனிடம் நேர்முக வரி மறைமுக வரி என்று சல்லி காசு மிச்சமில்லாமல் பிடுங்கி விடலாம். பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கின்றேன், மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கின்றேன் என்று தனது சக்திக்கு மீறி இந்த நடுத்தர வர்க்கம் கடன் சுமையில் மாட்டி தத்தளிக்கும்.


சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையில் வீட்டு கடன் வாங்கி, தன் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் வீட்டு கடனுக்கே வட்டியாக 20 வருடம் கொடுத்து விட்டு இதர செலவுகளுக்கு பணம் இல்லாமல் நடை பிணமாக வாழும் மக்கள் லட்சக்கணக்கில் உண்டு நம் நாட்டில்


நடுத்தர உழைக்கும் மக்களுக்கு என்று ஒரு அரசாங்கம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களுக்கு செய்யும் நியாமான கடன், வட்டி சீர்திருத்தங்கள் தான்


கந்து வட்டி, அல்லது கடன் பிரச்சனைகளில் சிக்கி, இனி சமாளிக்க முடியாது, தற்கொலை தான் ஒரே முடிவு என்று நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு முறைப்படி மஞ்சள் கடுதாசி கொடுத்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும்.


அதாவது புதிய கடன் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றி, அதனை அமல்படுத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும். 5 கோடி ரூபாய்க்கான கடன்களுக்கான வழக்குகள் இந்த ஆணையத்தின் மூலம் தீர்க்க வேண்டும்.


அங்கு அவர்கள் வழக்கை விசாரித்து அசலுக்கு மேல் வட்டி கட்டியவர்கள் இனி வட்டி கட்ட தேவை இல்லை. அசல் மட்டும் அடைத்தால் போதும் என்று உத்தரவு வழங்க வேண்டும். அதுவும் அவர்கள் செலுத்திய வட்டி தொகையானது அசலை விட இரண்டு மடங்கு இருப்பின் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.


மாத வட்டிக்கு தனி நபர் கடன் கொடுப்பவர்கள், 2% மேல் வட்டி வாங்க கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும்.


தற்போது சொந்த வீடு இல்லாத, புதிய சொந்த வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்திற்கு 5.5% வட்டியில் வீட்டு கடன் வழங்க வேண்டும்.


சிபில் என்றழைக்கப்படும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் ரிப்போர்டுகளை நிதி நிறுவனங்கள் பயன்படுத்துவது தடை செய்ய வேண்டும். இது ஒரு தனி மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதி


ஒவ்வொரு நிதி நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களின் திருப்பி செலுத்தும் திறனை அவர்களுடனான தனிப்பட்ட பரிவர்த்தனை மூலமாக மட்டுமே அளவிட வேண்டும்.


ஒரு மனிதன் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் நல்லவனாக இருக்க முடியாது அதே போல் எல்லோருக்கும் கெட்டவனாகவும் இருக்க முடியாது.


இன்று தனியார் துறையில் வேலை பார்க்கும் பல நபர்களுக்கு வேலை என்பது நிரந்தரமாக இல்லை. சில பல காரங்ககளினால் ஒரு வாடிக்கையாளர் தான் கடந்து வரும் கடினமான சூழ்நிலையில் தொடர்ச்சியாக சில மாதங்கள் தவணைகள் கட்ட முடியாமல் பொய் இருக்கலாம். அல்லது செட்டில்மென்ட் செய்து இருக்கலாம்.


தற்போது அவருக்கு பணப்புழக்கம் நனறாக இருக்கும் போதும் வேறு நிறுவனத்தின் பழைய ட்ரான்ஸாக்ஸ்ன் சரியில்லை என்பதற்காக புதிய நிறுவனம் கடன் கொடுக்க மறுப்பது ஏற்புடையது அல்ல.


வேண்டுமானால் சிறிய தொகைக்கான கடன்களை வழங்கி தமது நிறுவனத்துடனான பரிவர்த்தனையை அவர் தற்போது எப்படி செலுத்துகின்றார் என்று ஆராய்ந்து, படிப்படியாக பெரிய தொகைகளை வழங்கலாம்


ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையே ஒரு போர்க்களம். தான் எடுக்கும் பல வியாபார முயற்சிகளில் பல மனிதர்கள் தோராயமாக நூற்றுக்கு, என்பது சதவிகிதம் மக்கள் தோற்று போகின்றனர். அவரகள் வாழ்க்கையில் மீண்டு வர வேண்டாமா?


இந்த சிபில் போன்ற ரிபோர்டுகள் ஒரு தனி மனிதனின் அடிப்படை வாழும் உரிமையிலேயே கை வைக்கின்றன. அரசும், வட்டி கடை வைத்திருப்பவர் போன்ற மனநிலையில் ஆட்சி நடத்துவதால் மனிதாபிமானத்தை தொலைத்து நிற்கின்றது.


வேலை வாய்ப்பையும் உருவாகாமல், தானே சுய தொழில் தொழில் செய்ய முனையும் நபர்களுக்கும் உதவாத நிலையில் தான் அரசு இருக்கின்றது. ஒருவன் ஒரே முயற்சியில் தொழிலில் / வாழ்க்கையில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று அரசு நினைத்தால் சிபில் போன்ற ரிபோர்டுகளளை அரசு ஆதரிக்கலாம்.


ஆனால் எந்த மனிதனும் ஒரே முயற்சியில் தொழிலில் / வாழ்க்கையில் வெற்றி பெற்று விட முடியாது என்று இருக்கும் ஒரு கடினமான சூழ்நிலையில் சிபில் போன்ற ரிபோர்டுகள் அர்த்தமற்றவைகளாகவே இருக்கின்றன.


இதையும் மீறி சிபில் வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்க்கையில் தோற்று கடனாளியாக வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.


சாலைகள் பராமரிப்பு


தமிழ் நாட்டின் அணைத்து சாலைகளும் சிங்கப்பூரில் உள்ளது போன்ற தரமான சாலைகளாக போடப்பட்டு சுத்தமாக பராமரிக்க வேண்டும்


சாலைகளில் பள்ளங்கள் இருக்க கூடாது


சாலைகளில் தூசி இருக்க கூடாது


சாலைகளில் குப்பை இருக்க கூடாது


சாலைகளில் அசுத்தம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும்


முன் அனுமதி பெறாமல் சாலைகளை யாரும் தோண்ட கூடாது. முன் அனுமதி பெறாமல் யாராவது சாலைகளை தோண்டுவதாக சந்தேகம் வந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். காவல் துறை அதிகாரி அடுத்த 5 ஆவது நிமிடத்தில் அங்கு இருக்கவேண்டும்

தமிழகத்திற்கு உகந்த மது கொள்கை
பூரண மது விலக்கை நாங்கள் ஆதரிக்க வில்லை.


மது அருந்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஆகும்.


ஆயினும் தனி மனித உடல் நலம், குடும்ப / சமூக பாதுகாப்பு பேணுதலும் அவசியமாகிறது.


அனைத்து மதுபான விற்பனையும் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சர்வர் அக்கௌண்டில் பதியப்பட வேண்டும். அனைத்து விற்பனைகளுக்கும் கம்ப்யூட்டர் பில் தரப்படவேண்டும்.


21 வயதுக்கு குறைந்த நபருக்கு மது விற்பனை செய்யப்பட கூடாது.


21 வயதுக்கு குறைந்த நபர் மது அருந்துவது கண்டுபிடிக்கப் பட்டால். அவர் எச்சரிக்கை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் படுவார். இதன் மூலம் இளங்கலை கல்லூரி மாணவர்கள் வரை மது அருந்துதல் தடுத்து நிறுத்தப்படும்


தரம் குறைந்த மது வகைகள் அனைத்தும் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். க்கு விற்கப்படு 200 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படும் குவாட்டர் மது வகைகள் யாவும் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்


தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படும் ஓரளவு தரமான குவாட்டர் மது வகை, 100 ரூபாய்க்கு விற்க வேண்டும்.


கர்நாடகாவில் தற்போது உள்ளது போல் அனைத்து மது வகைகளும், வெளி நாட்டு மது வகைகள் உள்பட, சூப்பர் மார்க்கெட் வகையில் தனியாரால் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.


பார்களில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கும், கண்ணாடி க்ளாஸ் இலவசமாகவும் வழங்க வேண்டும்.


அப்பளம், சிப்ஸ் முதலான சைடு டிஸ் அனைத்தும் MRP விலையில் விற்க வேண்டும்.


அதிகமாக குடித்து குடி நோயாளியாக இருக்கும் நபர்களுக்கு சிறப்பு சிகிச்சைகளை அரசே முன் முயற்சி எடுத்து வழங்க வேண்டும்.


தினமும் குடித்து குடும்பத்தில் தகராறு செய்து / சமுகத்தில் தகராறு செய்யும் நபர்கள் காவல் துறை இனம் கண்டு, கைது செய்து வழக்கு தொடுக்க வேண்டும்.


குடி நோயாளியின், மனைவி / தந்தை விரும்பினால் அவர்கள் மது வாங்கும் போது sms அனுப்ப வேண்டும்


குடித்து விட்டு வாகனம் ஒட்டி காவல் துறையால் பிடிபட்டால். அடுத்த 6 மாதத்திற்கு அந்த நபருக்கு மது விற்பனை செய்ய பட கூடாது


சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகள், பிணக்கிடங்கில் வேலை செய்யும் தொழிலாளிகள் என சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களுக்கு தினமும் 1 குவார்ட்டர் இலவசமாக வழங்க வேண்டும்


தமிழகத்தில் பனங்கள், தென்னங்கள் இறக்க சோதனை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். பாதிப்புகள் இல்லாத பட்சத்தில் தொடர்ச்சியாக அனுமதி வழங்க வேண்டும்.


மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி சீர்திருத்தங்கள்பிறப்பு சான்றிதழ் / இறப்பு சான்றிதழ் வீடு தேடி வர வேண்டும்.


இறுதி சடங்கு எல்லா மதத்திற்கும் முற்றிலும் இலவசமாக வேண்டும் . எரிப்பது ஆனாலும் சரி, புதைப்பது ஆனாலும் சரி.


குடும்பத்திற்கு ஒரு கல்லறை இலவசமாக வழங்க வேண்டும்.


மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் வழங்கபடும் குடிநீர் மினரல் வாட்டர் தரத்தில் இருக்க வேண்டும். யாரும் இனி மினரல் வாட்டர் தனியாக வாங்க வேண்டியது இல்லை என்ற நிலை வேண்டும்.


விளையாட்டுஒட்டப்பந்தயம், நீளம் தண்டுதல், என அனைத்து தடகள விளையாட்டுகளிலும் இதுவரை நிகழ்த்தப்பட்ட அனைத்து உலக ரெக்கார்டுகளை மிஞ்சும் வகையில் வீரர்கள் உருவாக்க வேண்டும்.


ஒலிம்பிக் மற்றும் உலக தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் குறைந்த பட்சம் 50 தங்க பதக்கங்கள் பெரும் அளவிற்க்கு தமிழ்நாட்டில் வீரர்களை உருவாக்க வேண்டும்.


சிபாரிசு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல், தகுதி மாறும் ஆர்வம் அடிப்படியில் வீரர்கள் மாநிலம் முழுதும் தேர்தெடுக்கப்பட்டு உலக தரம் வாய்ந்த பயிற்சிகள் அரசின் செலவில் கொடுக்க வேண்டும்.


அணைத்து சமய திருப்பணிகள்

12 வருடங்கள் ஆகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடதப்படாத அனைத்து சைவ / வைணவ கோவில்களுக்கும் உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.


உலகின் மிக பெரிய ஜோதிட ஆராய்ச்சி மையம் கும்பகோணத்தில் அமைக்க வேண்டும்.


பராமரிக்கப்படாத பழைய சைவ / வைணவ கோவில்கள் அனைத்திலும் ஆறுகால பூஜை நடத்த வேண்டும்.


நவகிரக சுற்றுலா செல்ல சிறப்பு வசதிகள் செய்ய வேண்டும்


இஸ்லாமியர்கள் 1 லட்சம் பேர் திரண்டு தொழுகும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க படும் அளவிற்கு பெரும் நில பகுதி கையகப்படுத்தி கொடுக்கப்பட வேண்டும். கூட்டு பிரார்த்தனைகளின் மூலம் மக்கள் ஒருமித்த கருத்துக்காக இறைவனிடம் வேண்ட வழி வகை செய்ய வேண்டும்.


அதேபோல் கிறிஸ்தவ அமைப்புகளும், இந்து அமைப்புகளும் மத பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த 1 லட்சம் பேர் திரண்டு ஜெபிக்க, யாகங்கள் செய்ய விளையாட்டு அரங்கங்கள் அமைக்க படும் அளவிற்கு பெரும் நில பகுதி கையகப்படுத்தி தனித்தானியாக கொடுக்க வேண்டும். எந்த மதமானாலும் அவர்கள் ஒருமித்த மனதுடன் கூடி ஜெபிக்க வழி வகை செய்ய வேண்டும்.


சென்னை மெரினா கடற்கரையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்


தற்போது கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் நில பிரச்சனைகள் ஏதும் இருப்பின் அவை அனைத்தும் சுமுகமாக பேசி வேண்டும்.


தமிழகத்தின் வருமானத்தை பெருக்க

புதிய தமிழக அரசு நிறுவனங்கள் தேவை

டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பாமல் தமிழகத்தின் வருமானத்தை பெருக்க, டாஸ்மாக்கைப் போலவே பெரும் வருமானம் தரக்கூடிய, அதே நேரத்தில் பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய பல தமிழக அரசு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்படும் தமிழக அரசு நிறுவனங்களில் 51 சதவிகித பங்குகள் தமிழக அரசிடம் இருக்க வேண்டும். அப்போது தான் அது தமிழக அரசு நிறுவனம் ஆகும். மீதமுள்ள பங்குகள் தமிழக மக்களிடம் இருந்து (தமிழ் மொழி பேசும் மக்களிடம் இருந்து, அவர்கள் தாய்மொழி வேறாக இருந்தாலும்) பங்குகளாக மூலதனம் பெற வேண்டும . இதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் தாங்களே தொழிலாளிகளாகவும், தாங்களே முதலாளிகளாகவும் விளங்குவர்.

தமிழ்நாடு காப்பீட்டு நிறுவனம்.


தமிழகத்தின் அணைத்து இயற்கை பேரிடர்களையும் சமாளிக்க, நாமே மீண்டு எழ, தமிழ்நாடு காப்பீட்டு நிறுவனம் துவங்க வேண்டும்.


அணைத்து விவசாய பயிர்களும் காப்பீடு செய்யப்பட வேண்டும். குறு, சிறு, பெரிய சாகுபடி என்று வித்தியாசம் இல்லாமல் பயிர் காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும்.


தமிழ்நாட்டில் பதியப்படும் அனைத்து வாகனங்களின் இன்சூரன்சும் இனி இந்த காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட வேண்டும்.


தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு இந்த நிறுவனத்தில் செய்யப்பட வேண்டும்.


தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் விபத்து காப்பீடு இந்த நிறுவனத்தில் செய்யப்பட வேண்டும்.


தமிழ்நாடு வெளிநாட்டு மது உற்பத்தி தொழிற்சாலை

தற்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அணைத்து மதுபானங்களும் யாருடைய மது ஆலைகளில் உற்பத்தியாகின்றன என்று அனைவருக்கும் தெரியும். பல ஆயிரம் கோடி வருமானம் சில தனி நபர்களுக்கு செல்கின்றது.


எனவே தமிழ்நாடு வெளிநாட்டு மது உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்து அணைத்து வெளி நாட்டு மது வகைகளும் மிக சிறந்த தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த லாபத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் சில தனி நபர்களுக்கு செல்லும் பல ஆயிரம் கோடி வருமானம் தமிழக அரசின் கஜானாவிற்கு வரும்.


தற்போது இயங்கும் மது ஆலைகளை நாம் மூட போவதில்லை. அவர்களும் தமிழ்நாடு வெளிநாட்டு மது உற்பத்தி தொழிற்சாலையின் தரத்திலும், சேவையிலும் போட்டி போட்டு கொள்ளட்டும். மற்ற மாநிலங்களிலும் அவர்களின் தயாரிப்புகளை விற்று கொள்ளட்டும்.


தமிழ்நாடு உள்நாட்டு கள் உற்பத்தி கூட்டுறவு நிறுவனம்


தமிழ்நாட்டில் பனைமரங்கள் அதிகம். பனைமரத்தில் இருந்து கல் உற்பத்தி செய்து அதனை சுத்திகரித்து, அதன் தரம் தினமும் சோதிக்கப்பட்டு டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும்..


இதனை தமிழகம் முழுவதும் முறைப்படி செய்ய தமிழ்நாடு உள்நாட்டு கள் உற்பத்தி கூட்டுறவு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் வருமானம் பெறுவார்.


தமிழ்நாடு அதி நவீன கப்பல் கட்டும் தொழிற்சாலை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் படை அமைத்து தெற்காசியாவை வெண்று ஆட்சி நடத்தியவர்கள் தமிழர்கள்.


நாம் உலகின் எந்த இனத்திற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த தமிழ்நாடு அதி நவீன கப்பல் கட்டும் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும்.


மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மிக பெரிய கடற்கரைகளும், மனித வளமும் நிறைந்து இருக்கின்றது. நம்மிடம் அதற்கான திறமையும் இருக்கின்றது. லட்சக்கணக்கான வேலைகளை இதன் மூலம் உருவாக்க முடியும்.


இதில் சொகுசு கப்பல்கள், போர் கப்பல்கள், அணுசக்தி கப்பல்கள் என மிகப்பெரிய கப்பல்களை கட்டி உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு விற்கலாம். பல லட்சம் டாலர்கள் அந்நிய செலவாணியை ஈட்ட முடியும்.


தமிழ்நாடு அதி நவீன விமானம் கட்டும் தொழிற்சாலை

போயிங் மற்றும் ஏர்பஸ் முதலான நிறுவனங்களை விட சிறந்த விமானங்களை உருவாக்கும் தமிழ்நாடு அதி நவீன விமானம் கட்டும் தொழிற்சாலை தமிழகத்தில் ஆரம்பிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களுக்கு தரமான விமானங்கள் செய்து விற்க வேண்டும்.


மேலும் ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களும் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.


பல லட்சம் கோடி அந்நிய செலவாணி வருமானமும் வேலை வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கும்


தமிழ்நாடு தானியங்கி இயந்திரங்கள் (ரோபோடிக் டிவைஸ்) உற்பத்தி நிறுவனம்

இன்றைய நவீன உலகில் தானியங்கி இயந்திரங்களின் தேவைகள் உலகம் முழுவதும் அபரிவிதமான அதிகரித்து இருக்கின்றது.


அணைத்து அசெம்பிளி லைன் தொழிற்சாலைகளும், அதாவது எடுத்துகாட்டிற்கு கார் தொழிற்சாலையை எடுத்து கொண்டால் அவை முழுவதும் ரோபோடிக் எந்திரங்கள் மூலம் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.


இது போன்ற எண்ணற்ற தேவைகளுக்கு ஏற்றாற் போல் தானியங்கி ரோபோடிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும்.


எந்திரன், 2.0 படங்களில் காண்பிக்க பட்டது போல் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்டுகளை தயாரிப்பதில் தமிழகம் முந்தி கொள்ள வேண்டும்.


தமிழ்நாடு செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனம்

மைக்ரோ ப்ரோஸ்ஸ்ஸர் என்றழைக்கப்படும் சிப்புகள் மற்றும் மதர் போர்டு என்றழைக்கப்படும் அணைத்து வகையான சர்கியுட் போர்டுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, இன்டெல் நிறுவனத்தின் தரத்தில் உருவாக்கப்பட வேண்டும்


தைவான், கொரிய முதலிய தெற்காசிய நாடுகள் இந்த துறையில் கொடி கட்டி பறக்கின்றன. நாமும் அவர்களை மிஞ்சும் வகையில் உற்பத்தியை பெருக்க வேண்டும்.


இன்று இந்தியாவில் எத்தனை கோடி செல் போன்கள் புழக்கத்தில் உள்ளன என்று நமக்கு தெரியும். அவை அனைத்திலும் இத்தகைய சிப்புகளும், போர்டுகளும் தான் பயன்படுத்த படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இந்தியாவில் இருக்கும் மொத்த கணினிகளின் என்னிக்கையையும் நினைவில் கொள்ளுங்கள்


தமிழ்நாடு தொலை தொடர்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

ரேடியோ தொழில்நுட்பம், மற்றும் சாட்டிலைட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப் படவேண்டும்.


அமெரிக்காவில் எப்படி நாசா இருந்தாலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாசாவை விட குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புகின்றதோ, அதேபோல் இஸ்ரோ வைவிட குறைந்த செலவில் சாட்டிலைட் உற்பத்தி செய்யும் நிறூவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட வேண்டும்


தமிழாடு வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனம்

அன்றாடம் வீட்டில் உபயோகிக்கப்படும் பேன், லைட், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் முதலான அனைத்தும் வீட்டு உபயோக பொருட்களையும் உற்பத்தி செய்யும் பிலிப்ஸ், எல்.ஜி முதலான நிறுவங்களை போல் ஒரு நிறுவனம் உருவாக்க பட வேண்டும். இதன் மூலம் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.


இவற்றின் தேவைகள் என்றும் குறையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


தமிழ்நாடு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் நிச்சயம் ஒன்று தமிழ்நாடு அரசினால் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் எதிர்கால பெட்ரோலிய தேவைகளை நம்மால் திறமையாக சமாளிக்க முடியும். தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் பல்லாயிரம் கோடி இந்த துறையில் சம்பாதிக்க முடியும் என்ற பொது அந்த வருவாயை நம்மால் ஈட்ட முடியாதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


நம்மிடம் துறைமுகம் இருக்கின்றது. எளிதில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து உற்பத்தியை ஆரம்பிக்க முடியும்.


தமிழ்நாடு மென்பொருள் உற்பத்தி நிறுவனம்

மைக்ரோசாப்ட், கூகுள், இன்போசிஸ் முதலானவற்றை மிஞ்சும் அளவிற்க்கு ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை முதலில் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.


உலகத்திலேயே மிக திறமையான மென்பொருள் அறிஞ்சர்கள் நாம் தான் என்று அனைவருக்கும் தெரியும்.


ஆனால் நம்மிடம் கோடிகளை குவிக்கும் சொந்த மென்பொருள் நிறுவனங்கள் இன்னும் இல்லை என்பது வெட்கக்கேடு.


OPERATING SYSTEM, தொடங்கி அணைத்து பயன்பாடுகளுக்கும், சேவைகளுக்கும் மென்பொருள்களை உருவாக்கி உலகம் முழுவதும் விற்க வேண்டும்.


தமிழ்நாடு பி பி ஓ நிறுவனம்

பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.எ என படிக்கும் அணைத்து இளங்கலை பட்டதாரிகளுக்கும் வேலை கொடுக்கும் வகையில் தமிழ்நாடு பி பி ஓ நிறுவனம் உடனடியாக தொடங்க பட வேண்டும் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து நகரங்களிலும் நகரத்திற்கு 3000 மூன்று ஆயிரம் சீட்டர் கொள்ளளவு கொண்ட அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட் என்ற வகையில் ஒவ்வொரு நகரத்திலும் 9000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப் வேண்டும்


வெளி நாடுகளில் இருந்து பி.பி.ஓ ஆர்டர்களை பெற்று இந்த நிறுவனங்கள் இயங்க வேண்டும்.


தமிழ்நாடு கட்டுமான நிறுவனம்

தமிழக அரசே பல ஆயிரம் கோடிக்கு கன்ஸ்ட்ரக்சன் ஆர்டர்களை தனியார் நிறுவங்ககளுக்கு கொடுக்கின்றது. லாபம் இல்லாமலா தனியார் நிறுவனங்கள் வேலை செய்கின்றன.


தமிழக அரசும் ஒரு தனி கட்டுமான நிறுவனத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். முதல் முயற்சியாக தமிழக அரசின் பாதி கான்ட்ராக்ட்கள் இந்த நிறுவனத்தின் மூலம் செயல்பட வேண்டும் .


நிச்சயம் இது ஒரு பணம் கொழிக்கும் நிறுவனமாக செயல்பட முடியும் .


படிக்காத மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த நிறுவனம் பயன்படும்


தமிழ்நாடு தங்க வாணிப கழகம்

தங்க நகை கடை அதிபர்கள் நாளுக்கு நாள் மிகப்பெரும் கோடீஸ்வரர்களாக மாறுவதை கண்கூடாக காண்கின்றோம்.


தமிழ்நாடு தங்க வாணிப கழகம் ஒன்றை ஆரம்பித்து மாநிலம் முழுவதும் தங்க நகை கடைகளை ஆரம்பித்து நடத்த வேண்டும். தமிழக மக்கள் நிச்சயம் பெரும் ஆதரவு அளித்து இந்த நிறுவனத்தை மிக சிறப்பாக வளர்க்க உதவுவார்கள்


இதன் மூலம் தமிழ்நாடு அரசிடம் தங்க இருப்பும் கூடும் என்பது ஒரு கூடுதல் நண்மை


தமிழநாடு மார்க்கெட்டிங் கழகம்

அணைத்து தொழில்களும் வளர வேண்டும் எனில் மார்க்கெட்டிங் செய்து ஆர்டர்களை பெற வேண்டும்.


நாம் உருவாக்கும் அணைத்து நிறுவனங்களும் உலகம் முழுவதிலும் இருந்து ஆர்டர்களை பெற்றிட, அணைத்து வெளிநாடுகளிலும் மார்க்கெட்டிங் ஆபிஸ் திறந்து பல நூறு ஆர்டர்களை தமிழகத்திற்க்கு கொண்டு வர தமிழநாடு மார்க்கெட்டிங் கழகம் என்று ஒரு நிறுவனம் ஒன்று வேண்டும்


இந்த நிறுவனம் பல ஆயிரம் சேல்ஸ் பைப்லைன்களை உருவாக்கி தொடர்ந்து கண்காணித்து பல மில்லியன் டாலர் அளவிற்கு அணைத்து தமிழக அரசு நிறுவங்ககளுக்கும் ஆர்டர்களை பெற்று கொண்டு வர வேண்டும்.Back to Exactpredictions