சென்னை ஜோதிட திருவிழா புகைப்படங்கள்

நமது https://exactpredictions.in/ இணையத்தளத்தின் 10வது ஆண்டு விழா, சென்னை ஜோதிட திருவிழா, புதிய ஜோதிட மென்பொருள்கள் வெளியிட்டு விழா மற்றும் ஜோதிட பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகியன வெகு சிறப்பாக 6-11-2022 அன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் நடந்தது.

இது கடத்த ஒரு வருடத்தில் திருமகள் தரிசனம் சேவை நமக்கு கொடுத்த நம்பிக்கை. அன்னை மகாலட்சுமியின் பெருங்கருணை. அதனை நம்மால் உணர்வு பூர்வமாக உணர முடிகின்றது.

விழாவில் பங்கேற்று நமது கலைமகள் தரிசனம், திருமகள் தரிசனம் மற்றும் உமையவள் தரிசனம் சேவைகளை துவக்கி வைத்து, ஜோதிட பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் திரு. PK சேகர் பாபு அவர்களுக்கு நமது நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்.

விழாவை தலைமை ஏற்று நடத்திய நமது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய திரு. திண்டுக்கல். பி. சின்னராஜ் ஐயா அவர்களும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.

விழாவில் கலந்து கொண்ட எல்லா சிறப்பு விருந்தினர்களுக்கும் நமது நன்றிகள்.

விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் இங்கு பகிரப்பட்டுள்ளது.

வேண்டும் புகைப்படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்

அன்புடன்
குரு பாக்கிய நாதன்
9840324409