ஜாதக யோகங்கள்
சுனபா யோகம்
சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.
பலன்
சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர்.
அனபா யோகம்
சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.
பலன்
சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர்,
துருதுரா யோகம்
சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது.
பலன்
கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.
கேம துர்ம யோகம்
சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அணுபவிக்கின்றனர்.
அதி யோகம்
சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது.\
பலன்
நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர்.
அமல யோகம்
லக்னம் அல்லது சந்திரனுக்கு 10ல் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் இருக்க அமல யோகம் உண்டாகிறது.
பலன்
அன்பும் ஆற்றலும் பெற்றவர், வற்றாத புகழும் வடியாத செல்வமும் உடையவர். நல்லவர். வல்லவர் என எல்லோராலும் புகழப்படுபவர். கலை சினிமா, அரசியல் துறைகளில் புகழ் பெற்று வாழ்வார்கள்.
வேசி யோகம்
சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வேசி யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும், மகிழ்ச்சி உடையவராகவும், அதிஷ்டம் உடையவராகவும் இருப்பார்கள்.
வாசி யோகம்
சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர்.
உபய சாரி யோகம்
சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.
அம்ச யோகம்
லக்னத்திற்கு குரு 4,7,10 ல் இருக்க, குரு அமர்ந்த இடம் தனுசு, மீனம், கடகம் எனில் அம்ச யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல உடல்வாகு உடையவர். அன்பும் நற்குணமும் உடையவர். சகலகலா வல்லவராக திகழ்பவர், யாரையும் தன்வசம் கவரும் ஆற்றல் மிக்கவர்.
சச யோகம்
சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது.
பலன்
நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து இன்பம் காண்பவர்.
பத்ர யோகம்
லக்னத்திற்கு 4,7,10 ல் புதன் வீற்றிருக்க அந்த வீடு புதனுக்கு ஆட்சி உச்சமாகில் பத்ர யோகம் உண்டாகிறது.
பலன்
பலம் மிக்கவர். தாய் வர்கத்தால் நன்மை அடைபவர். பந்தபாசம் மிக்கவர். விளையாட்டு துறையில் சிறப்புடையவர்.
ருச்சிக யோகம்
செவ்வாய் 4,7,10 ல் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருக்க ருச்சிக யோகம் உண்டாகிறது. இது பஞ்சமகா யோகமாக கருதப்படுகிறது.
பலன்
உடல் பலம் மிக்கவர்கள். பெரும் புகழும் மிக்கவர்கள். அரசாலும் பெருமைக்குரியவர், தயாள குணம் மிக்கவர், மதபற்றுதல் உடையவர்.
ஜெய யோகம்
6 ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும்.
பலன்
பகைவரை வெல்லக் கூடியவர். போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார். நீண்ட ஆயுள் உடையவர். நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்.
கஜகேசரி யோகம்
சந்திரனுக்கு 4,7,10 ல் குரு இருக்க கஜகேசரி யோகம் உண்டாகிறது.
பலன்
உறவினரால் உயர்வு அடைவார். பெரும் புகழும் உடையவர். இறந்த பின்பும் புகழ் மிக்கவர். அரசருக்கு நிகரான தொழில் புரிவர்.
பந்தன யோகம்
லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும்.
பலன்
சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.
சகட யோகம்
குரு விற்கு 6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது.
பலன்
இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார். வளமிழந்து தவிப்பார். உயர்வு அடைய இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன் இல்லை.
மாதுரு நாச யோகம்
சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு நாசம் யோகம் உண்டாகிறது.
பலன்
தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.
நள யோகம்
ராகு கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும்.
பலன்
இந்த யோகம் உடையவர் அகோர வடிவமானவராகவும், தீயவராகவும், ஒதுக்க்பட்டவரகவும், நிலையான் இடத்தில வாழ வகையர்ரவராகவும் இருப்பார்.
முசல யோகம்
ராகு கேது நீங்கலாக 7 கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர். செல்வம் செல்வாக்கால் செழிப்பு பெறுகின்றனர். தனமான் உணர்வு மிக்கவர். கல்வி ஞானத்தால் புகழ் பெறுபவர்.
வல்லகி யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம்.
பலன்
சுக போகத்தை அனுபவிக்கின்றனர், சங்கீத தொழில் மூலம் பெருமை அடைவர். நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர்.
ரஜ்ஜு யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும்.
பலன்
பேரரசை மிக்கவர். பொருள் ஈட்டுவதில் வல்லவர். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவர்.
பாச யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 5 ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும்.
பலன்
நீதி நெறியை மதிபவராகவும், நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார். செல்வம் செல்வாக்கு உடையவர். செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்.
தாமினி யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது.
பலன்
அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம் செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர்.
கேதார யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும்.
பலன்
நாற்கால் ஜீவனத்தாலும், விவசாயத்தாலும், நன்மை பெறுவார். வாகனம், பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார்.
சூல யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும்.
பலன்
வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்ப்படுவார்.
யுக யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 2 ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும்.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர். நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று சீரழிவார்.
கோல யோகம்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 1 ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும்.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர், சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும், ஏழ்மையாலும், இன்னல்களாலும் இழிவடைவார்.
கால சர்ப்ப யோகம்
ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது .
பலன்
32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது. திருமணம் தாமதப்படுகிறது. நல்ல தொழில் வருவாய் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கணவன் மனைவி உறவில் மனகசப்பு உண்டாகிறது.
விபரீத ராஜயோகம்
6 ஆம் அதிபதி 8 அல்லது 12 ல் இருப்பின் 8 ஆம் அதிபதி 6 அல்லது 12 ல் இருப்பின் 12 ஆம் அதிபதி 6 அல்லது 8 ல் இருப்பின் விபரீத ராஜயோகம் உண்டாகிறது.
பலன்
சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் ஒருவர் திடீரென் உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஆகிறார்.
சதுரஸ்ர யோகம்
எல்ல கிரகங்களும் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமைந்தால் சதுரஸ்ர யோகம் உண்டாகிறது.<
பலன்
ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு ஆகும். நல்ல பெரும் புகழும் பெறுவார்.
சந்திர மங்கள யோகம்
சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.
குரு சந்திர யோகம்
சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்க, குரு சந்திர யோகம் உண்டாகிறது.
பலன்
உயர்த கல்வியாளர்களாக திகழ்கிறார்கள்.ஆனால் கல்விக்கு தொடர்பில்லாத தொழில் அமைகிறது.
நீச பங்க ராஜ யோகம்
ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது.
பலன்
நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர்.
அகண்ட சாம்ராஜ்ய யோகம்
ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது.
பலன்
ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது.
தர்ம கர்மாதிபதி யோகம்
ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது.
பலன்
அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும் கிடைக்கிறது.
பரிவர்தனா யோகம்
இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வீட்டில் இருந்து மற்ற கிரகத்தின் வீட்டிலோ மற்ற கிரகம் தன் வீட்டிலோ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம் உண்டாகின்றது.
பலன்
பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறார். செல்வாக்கு புகழ் அனைத்தும் உண்டாகின்றது.
மாளவியா யோகம்
சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மாளவிய யோகம் உண்டாகிறது. இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
பலன்
நீண்ட ஆயுள் நிலையான செல்வம், நிலைத்த புகழ், வசதியான வாழ்கை அசையா சொத்துகள் சேர்கை ஆகியன உண்டாகின்றது.
தேனு யோகம்
ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.
புஷ்கல யோகம்
லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது.
பலன்
மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.
முக்தி யோகம்
லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள்.
பலன்
இறந்த பிறகு மீண்டும் பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படுகின்றது. பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.
ஸ்ரீநாத யோகம்
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது.
பலன்
செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
சக்ரவர்த்தி யோகம்
ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது.
பலன்
மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.
கனக யோகம்
லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.
ரவி யோகம்
சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள்.
விரின்சி யோகம்
லக்னாதிபதி, சனி, குரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது.
பலன்
வல்லமை, வலிமை, நீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.
வசுமதி யோகம்
3, 6, 11 க்கு உடையவர்கள் பலம் பெற்று காணப்படின் வசுமதி யோகம் உண்டாகின்றது.
பலன்
செல்வம், செல்வாக்கு, நீண்ட புகழ் யாவும் உண்டாகிறது.
சரஸ்வதி யோகம்
குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது.
பலன்
மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை அடைவார்.
சங்க யோகம்
5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.
பலன்
உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.
ராஜ யோகம்
9 ஆம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் ராஜ யோகம் உண்டாகிறது.
பலன்
வீடு, வாகனம், செல்வம், செல்வாக்கு, யாவும் குறைவில்லாமல் அமைகிறது.
பூமி பாக்கிய யோகம்
4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும்.
பலன்
வீடு, நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும்.
லட்சுமி யோகம்
9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.
வரிஷ்ட யோகம்
ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.
கலாநிதி யோகம்
குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது.
பலன்
அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.
தரித்திர யோகம்
9 ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது.
பலன்
வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகின்றது.
அந்திய வயது யோகம்
1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது.
பலன்
இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.
திரிலோசனா யோகம்
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது.
பலன்
எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.
பாபகத்ரி யோகம்
லக்னமோ அல்லது சந்திரனோ இரு பாவ கிரகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்க பாப கத்ரி யோகம் உண்டாகிறது.
பலன்
செல்வந்தராயினும் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சந்திப்பார்கள்.
பர்வத யோகம்
லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.
அரச யோகம்
சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி. உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்ரன், குரு பார்வை பெற அரச யோகம் உண்டாகிறது.
பலன்
நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.
பிரம்மா யோகம்
குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும் மதிக்கப்படும் புகழ், பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள்.
வசீகர யோகம்
புதன், சுக்ரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோம் உண்டாகிறது/
பலன்
ஜாதகர் அழகு மிக்கவர். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உடையவர்.
காம யோகம்
7 ல் சுப கிரகம் இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும் காம யோகம் ஆகும்.
பலன்
நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
கௌரி யோகம்
லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.
மாருத யோகம்
3,6,11 ஆகிய ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு இருந்து சுபர் பார்வை பெறின் மாருத யோகம் உண்டாகிறது.
பலன்
அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமைகிறது. சகல பாக்கியங்களையும் அனுபவிப்பர்.
சுமந்திர யோகம்
லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது.
பலன்
கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.
அசுபர யோகம்
லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம் உண்டாகிறது.
பலன்
40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது.
யௌவன யோகம்
லக்னத்திற்கு 2 ல் சுப கிரகம் இருந்து 2 க்கு உரிய கிரகம் பலம் பெற்று இருக்க யௌவன யோகம் உண்டாகிறது.
பலன்
கல்வி அறிவு மிக்கவர், யோக சுகம் பெற்று மகிழ்வார்.
சாமர யோகம்
குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும்.
பலன்
நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு ஆகியன அமையும்.
நாக யோகம்
9ல் குருவும் 9க்கு உரியவர் 7லும் இருக்க சந்திரன் சுபர் சம்பந்தம் பெற நாக யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.
சுலபமாக சம்பாதிக்கும் யோகம்
லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது.
பலன்
அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும்.
குரு சண்டாள யோகம்
குருவும், ராகுவும் இனைந்து காணப்படினும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் குரு சண்டாள யோகம் உண்டாகிறது.
பலன்
செல்வம் செல்வாக்கு உண்டாகிறது, வாழ்வில் வெற்றிகள் குவியும்.
அஷ்டலட்சுமி யோகம்
6ல் ராகு இருக்க அச்டலட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.
கபட யோகம்
4 ஆம் அதிபதி பாபருடன் கூடினாலும் 4ல் 4ஆம் அதிபதி ஆட்சி பெற்று பாபருடன் கூடினாலும் இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
கபடம் செய்பவர் ஆவார்.
லட்சுமி யோகம்
சுக்ரன் 2, 11 ல் இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
செல்வந்தராய் வாழ்வர், சுக்ர தசையில் தான் இப்பலன் உண்டாகும்.
அவயோக காலசர்ப்ப யோகம்
1,4,7,1௦ ல் ராகு / கேது இருக்க, அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது.
பலன்
வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, அகால மரணம் ஆகியவற்றை சந்திக்கிறார்கள்.
வெளி நாடு செல்லும் யோகம்
9,12 அதிபதிகள் கடகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் இடம் பெறினும் 9,12 அதிபதிகள் பலம் பெற்று இருபினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
பலன்
9, 12 ஆகிய திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
குபேர யோகம்
2க்கு உரியவர் 9ல் இருப்பினும், ௨ல் 9,11 க்கு உரியவர் இருபினும் குபேர யோகம் உண்டாகிறது.
பலன்
கோடி, கோடியாக சம்பதிப்பர்
ஞாபக மறதி யோகம்
5க்கு உரியவர் 3, 6, 8, 12 ல் இருக்க அல்லது 5க்கு உரியோன் நீசம், அஸ்தங்கம் பெற்றாலும் ஞாபக மறதி யோகம் உண்டாகிறது.
பலன்
ஞாபக மறதி உடையவராய் இருபர்.
ஸ்ரீ கட யோகம்
அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும்.
பலன்
சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும் அமையும்.
விஷ கன்னிகா யோகம்
பெண் சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் பிறந்து ஆயில்யம், சதயம், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பின் விஷ கன்னிகா யோகம் உடையவள் ஆவாள்.
பலன்
இத்தகைய பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணின் உடல் நலம் பாதிக்கபடும். பெண்ணின் ஜாதகத்தில் 2, 8 பாதிக்கப்பட்டு இருக்குமானால் கணவன் உயிர் நீங்கும் நிலை பெறுவர்.
அமாவாசை யோகம்
சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும்.
பலன்
அன்றாட வாழ்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறின் சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப் பெறுகின்றார்கள்.
ரோககிரகஸ்தா யோகம்
லக்னாதிபதி பலம் இழந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தாலும் 6, 8, 12 க்குகுரியவர் லக்னத்தில் அமர்ந்திருந்தாலும் ரோககிரகஸ்தா யோகமாகும்.
பலன்
மெலிந்த தேகம் உடையவர்,
அரச கேந்திர யோகம்
லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும்.
பலன்
மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும்.
வீனா யோகம்
7 கிரகங்கள் 7 ராசிகளில் இருபது வீனா யோகம் ஆகும்.
பலன்
வாழ்கையில் வசதி வாய்ப்பு அடைகிறார்கள். சமுதாயத்தில் தலைவராக இருப்பார்கள. அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்.
கேதரா யோகம்
7 கிரகங்கள் 4 ராசிகளில் இருப்பது கேதரா யோகம் ஆகும்.
பலன்
சிறந்த விவசாயிகளாகவும் அனைவர்க்கும் உதவி செய்யும் மனமுடயவராகவும் உள்ளனர்.
அன்னதான யோகம்
2 ஆம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் பெற்றிருப்பது அன்னதான யோகமாகும்.
பலன்
பலருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அன்னதானம் செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.
விமலா யோகம்
12 ம் அதிபதி 12ல் இருபது விமலா யோகம்.
பலன்
தொண்டு செய்யும் எண்ணம் உடையவர். சுதந்திர பிரியர்.
சதுஸ்ர யோகம்
1,4,7,1௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல இல்வாழ்வு புத்திர பாக்கியம் அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.
ராஜயோகம்
1,4,7,1௦ ஆகிய வீட்டுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல மனைவி, வீடு யோகம், தொழில் யோகம், செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.
சாங்கியா யோகம்
லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சாங்கியா யோகம் உண்டாகிறது.
பலன்
உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று வசதியாக வாழ்வார்.
உபஜய யோகம்
உபஜய ஸ்தனங்களான 3,6,10,11 ஆகிய இடங்களில் குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருக்குமாயின் உபஜனயோகமாகும்.
பலன்
வசதி நிறைந்து வாழ்வார். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் பெறுவார்.
பாக்கிய யோகம்
லக்னத்திற்கு 1௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும்.
பலன்
அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர்.
அங்கஹீன யோகம்
12 ஆம் அதிபதி கேந்திர திரிகோணம் பெற்று ராகுவுடன் சம்பந்தம் பெறுவது.
பலன்
உடலில் ஏதாவது ஓர் உறுப்பில் குறை இருக்கும்.
லக்ன கர்மாதிபதி யோகம்
லக்னதிபதியும் 1௦ ஆம் அதிபதியும் சம்பந்தம் பெறுவது (பார்வை அல்லது சேர்கை)
பலன்
தனது முயற்சியால் உயர்நிலை அடைவார்.
சரள யோகம்
8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும்.
பலன்
நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர்.
அசுர யோகம்
லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது.
பலன்
அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.
சுமத்திர யோகம்
லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது.
பலன்
முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள்.
பாதாள யோகம்
லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது.
பலன்
பிற்கால வாழ்கையில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர்.
வசுமதி யோகம்
லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 3, 6, 1௦, 11 ல் சுப கிரகங்கள் இருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது.
பலன்
சகல செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வார்.
தனயோகம்
லக்னத்திற்கு 2,9,1௦ அதிபதிகள் இணைவது லக்னத்திற்கு 2,5,6 அதிபதிகள் இணைவது லக்னத்திற்கு 6,7 ஆம் அதிபதிகள் பலம் பெற்று 2 ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது ஆகியன தனயோகம் ஆகும்.
பலன்
தொழில் முறையில் செல்வம் சேர்கின்றனர்.
சந்திர யோகம்
குருவும், சனியும், சந்திரனுக்கு 2ல் அமையப்பெறின் சந்திரயோகம் உண்டாகிறது.
பலன்
சுயநலமிக்கவர்கள்
கவுரி யோகம்
சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் கவுரியோகம் உண்டாகிறது.
பலன்
தெய்வீக வழிபாடு, நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது.
இந்திர யோகம்
5ல் சந்திரன் அமையப்பெற்று 5,11 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இந்திரயோகம் உண்டாகிறது.
பலன்
தைரியம் மிக்கவர், புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.
பிரபை யோகம்
லாபாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து 1,4,7,1௦ ஆகிய இடங்களில் இருக்க பிரபை யோகம் உண்டாகிறது.
பலன்
முன் பகுதி யோகம் உடையவர். அரசியல் ஈடுபாடு இருக்கும். செல்வாக்கு பெற்றவர். தீயாக உள்ளம் கொண்டவர்.
பாரிஜாத யோகம்
11 ஆம் அதிபதி ஆட்சி/உச்சம் பெறின் பாரிஜாத யோகம் உண்டாகிறது.
பலன்
நற்குணம் மிக்கவர், செல்வம் செல்வாக்கு பெற்று விளங்குபவர்.
மாலா யோகம்
சந்திரனுக்கு 1௦ல் குரு இருக்க மாலா யோகம் உண்டாகிறது.
பலன்
அரசு தொடர்புடைய பணியில் அமர்வர். செல்வ செழிப்புடன் வாழ்வர்.
காஹள யோகம்
நான்காம் வீட்டு அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து லக்னாதிபதி பாலமடைந்து இருக்க காஹள யோகம் உண்டாகிறது.
பலன்
பிடிவாதகாரராகவும், தைரியமிக்க்வராகவும் இருப்பார்.
மகாலட்சுமி யோகம்
ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
மனைவி வழியில் லாபம் உண்டாகும். அதிகாரம் செய்யும் பதவி அடைவர். வாகன வசதி உண்டு.
சதா சஞ்சார யோகம்
லக்னாதிபதி சரராசியில் இருப்பது சதா சஞ்சார யோகமாகும்.
பலன்
அதிக அலைச்சல், அதிகப்படியான பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகிறது.
மாதுரு மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டு அதிபதி உடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது.
பலன்
தாயாருடைய உதவியால் அதிக லாபம் கிட்டும்.
களத்திர மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதியை ஏழாம் வீட்டு அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் அமைகிறது.
பலன்
மனைவி வழியில் அதிக லாபங்கள் உண்டாகிறது.
அங்கிஸ யோகம்
குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு 5,7,9 ல் இருக்க அங்கிஸ யோகம் உண்டாகிறது.
பலன்
எல்லா வகை செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வர். நீண்ட வயது வாழ்வர்
வசீகர யோகம்
புதன், சுக்கிரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோகம் உண்டாகிறது.
பலன்
ஜாதகர் அழகும் மற்றவர்களை கவரும் முக வசீகரமும் உடையாராக இருபார்.
சௌரிய யோகம்
லக்னதிலோ அல்லது லக்னத்திற்கு 3ல் சுப கிரகம் இருப்பது சௌரிய யோகம் ஆகும். தனாதிபதி வலுவாக இருபினும். இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
சகல வசதிகளுடன் பலரும் போற்றும் வாழ்க்கை உண்டாகிறது.
உதாந்திரி யோகம்
லக்னத்திற்கு 2,5,9 ஆம் அதிபதிகள் லக்னத்தில் நிற்க உதாந்திரி யோகம் உண்டாகிறது.
பலன்
சட்டத்துறையில் வல்லவராக விளங்குவர். குடும்பம் மகிழ்ச்சியாக விளங்கும்.
ஆன்மீக யோகம்
குருவும், சனியும் எவ்விதத்திலாவது சம்பந்தம் பெறுவது (பார்வை / சேர்கை / பரிவர்த்தனை) ஆன்மீக யோகம் ஆகும்.
பலன்
தெய்வபக்தி மிக்கவர். ஆன்மிக வாழ்க்கை வாழ்பவர்.
இல்லற சந்நியாசி யோகம்
சனியின் வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சனி தன் இரு வீடுகளில் ஒரு வீட்டை பார்பது இல்லற சந்நியாசி யோகம் ஆகும்.
பலன்
பற்றற்ற வாழ்க்கை நடத்துவர். இல்லறத்தில் ஈடுபாடு குறைந்து இருக்கும். இதனால் இவர்கள் இல்லற சந்நியாசி ஆகின்றனர்.
புத ஆதித்ய யோகம்
சூரியனும், புதனும் இணைந்து காணப்படின் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. இது பெரும்பாலும் எல்லா ஜாதகங்களிலும் காணப்படும்.
பலன்
உயர்கல்வி பெறுகின்றனர். (டிப்ளோமா அல்லது டிகிரி)
பூமி லாப யோகம்
4 க்கு உரியவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி 4 ல் இருப்பின் அல்லது 4 க்கு உரியவன் பலம் பெற்று இருப்பின் பூமி லாப யோகம் உண்டாகிறது.
பலன்
தனது பெயரில் நிலம், மனை, வீடு அமையப் பெறுகின்றனர்.
படுக்கை சுக யோகம்
12 க்கு உரியவன் சுபர் சம்பந்தம் பெற்றிருக்க படுக்கை சுக யோகம் அமைகிறது.
பலன்
கட்டில் சுகம் உண்டு
பந்து பூஜ்ய யோகம்
4 ஆம் அதிபதி உச்சம் பெற்று அல்லது நட்பு பெற்று குரு பார்வை பெற்றிருக்க பந்து பூஜ்ய யோகம் உண்டாகிறது.
பலன்
பந்துகளால் புகழப்படுவான்.
வாகன லாப யோகம்
4க்கு உரியவன் சுப கிரகத்துடன் கூடி 9 ல் இருப்பினும், 9 க்கு உரியவனுடன் கூடியிருபினும் வாகன லாப யோகம் உண்டாகிறது.
பலன்
வீடு, வாகனம் நன்கு அமைகிறது.
ஸ்வீகார புத்திர யோகம்
மிதுனம் அல்லது கன்னி லக்னமாகி 5ல் செவ்வாய் சனி இருந்து, புதன் பார்வை அல்லது சேர்கை இருப்பின் ஸ்வீகார புத்திர யோகம் அமைகிறது.
பலன்
தனக்கு பிள்ளைகள் பிரப்பதில்லை. ஸ்வீகார புத்திர ப்ராப்தி உண்டாகிறது.
சூரனாகும் யோகம்
இரவில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய் லக்னதிலோ அல்லது 1௦ல் அமைந்திருக்க சூரனாகும் யோகம் உண்டாகிறது.
பலன்
வீர தீர பராகிரமசாலியாக திகழ்கிறார்கள்.
வீரிய குறைவு யோகம்
லக்னம் ஒற்றைப்படை ராசியாக இருந்து அங்கு சுக்ரன் இருக்க வீரிய குறைவு யோகம் உண்டாகிறது.
பலன்
குழந்தை பிறகும் தகுதி குறைவாக இருகின்றது.
சோம்பல் உண்டாகும் யோகம்
லக்னாதிபதியுடன் சனி கூடி இருக்க சோம்பல் உண்டாகும் யோகம் அமைகிறது.
பலன்
உடலில் சோம்பல் அதிகம் உண்டு.
சர்ப்ப கண்ட யோகம்
2ல் ராகு மாந்தியுடன் கூடி இருப்பின் சர்ப்ப கண்ட யோகம் உண்டாகும்.
பலன்
பாம்பு கடியால் மரணம் உண்டாகும்.
விமலா யோகம்
12 ம் அதிபதி 12ல் இருப்பது விமலா யோகம் ஆகும்.
பலன்
சுதந்திரமாக வாழ்வர். பிறருக்கு நன்மையே செய்வர். தொண்டு செய்வதற்கென்றே பிறந்தவர் எனலாம்.
பூமி விருத்தி யோகம்
4க்கு உடையவன் தனது உச்ச வீட்டிலோ சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ இருந்து அவனை சுபர் பர்ர்க்க பூமி விருத்தி யோகம் உண்டாகிறது.
பலன்
சொந்த வீடு அமைகிறது. வீட்டின் மூலம் வருமானம் அமைகிறது.
சகோதர லாப யோகம்
3 ஆம் இடம் வலுத்து மூன்றுக்கு உரியவன் பலம் பெற்று 3ல் சுபர் அமையப் பெறின் சகோதர யோகம் அமைகிறது.
பலன்
சகோதர்களுடன் உறவு நீடிக்கிறது. சகோதர்களால் உதவிகள் கிட்டும்.
மஹா பாக்கியயோகம்
ஆணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் ஆண் ராசியிலும் பெண்ணாக பிறந்தவர்களுக்கு சூரியன் சந்திரன் பெண் ராசியிலும் அமர்ந்தால் மஹா பாக்கியயோகம் உண்டாகிறது.
பலன்
ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு நிவாகத்தையோ நடத்தும் யோகம் உண்டாகிறது.
சன்யாச யோகம்
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1௦ ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பின் சன்யாச யோகம் உண்டாகிறது.
பலன்
ஒரு மதத்தின் தலைவராகவோ அல்லது ஆன்மீக தலைவராகவோ ஆகும் அமைப்பு உண்டாகிறது. புத்தர் ஜாதகம், சங்கராச்சாரியார் சுவாமிகள், ராமானுஜர் ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்துள்ளதை காணலாம்.
தீர்க்க தேக யோகம்
புதனுக்கு 7 ல் செவ்வாய் இருக்க தீர்க்க தேக யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல உடல் கட்டு உடையவர் ஆவார்.
திரவிய நாச யோகம்
9ல் ராகு அமையபெரின் திரவிய நாச யோகம் உண்டாகிறது.
பலன்
பெண்ணால் பொருள் நஷ்டம் உண்டாகிறது.
மாதுரு சாப புத்ர தோசம்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ல்பாபர் இருக்க சந்திரன் பாபர் நடுவிலோ அல்லது நீசம் பெற்றோ இருக்க, மாதுரு சாபத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.
பலன்
மாதுரு சாபத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.
கிரஹ மாலிகா யோகம்
7 கிரகமும் 7 பாவங்களில் இடைவிடாது அமர்ந்திருப்பது கிரஹ மாலிகா யோகம் ஆகும்.
பலன்
லக்னம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் அரசாளும் யோகம் அமைகிறது. 2 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் லட்சாதிபதி ஆவார். 3 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் தான தர்மம் செய்வார். 4 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் தான தர்மம் செய்வார். 5 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் புகழ் பெறுவார். 6 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் நற்பலன் இல்லை. 7 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் பெண்ணாசை மிக்கவர்கள். பெண்களை வைத்து தொழில் நடத்தி லாபம் பெறுவர். 8 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் நற்பலன் இல்லை. 9 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் ஆன்மீக ஈடுபாடு மிகும். 1௦ ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் தனது செய்கையால் புகழ் பெறுகின்றனர். 11 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் திறமை மிக்கவர். 12 ஆம் இடம் முதல் கிரஹ மாலிகா யோகம் ஏற்படின் அணைவராலும் போற்றப்படுபவர் புகளுடையவர்.