தமிழ் ஜோதிடம்

யுகம்

பொதுவாக ஜோதிடம் பூமியின் இயக்கத்தை நான்கு யுகங்களாக பிரித்திருகின்றது. அவை பின்வருமாறு

க்ருதாயுகம் - 1728000 வருடங்கள்
த்ரேதாயுகம் - 1296000 வருடங்கள்
த்வாபரயுகம் - 864000 வருடங்கள்
கலியுகம் - 432000 வருடங்கள்

நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றோம்.

தமிழ் மாதங்கள்

தமிழ் ஜோதிடம் பணிரெண்டு தமிழ் மாதங்களை கொண்டது. முதல் தமிழ் மாதமானது சித்திரை என்று அழைக்கப் படுகின்றது. இந்த சித்திரை மாதம் ஏப்ரல் 14 ஆம் ஆங்கில தேதியில் பொதுவாக ஆரம்பிக்கும். பணிரெண்டு தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:

  • சித்திரை
  • வைகாசி
  • ஆணி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாசி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி
  • தை
  • மாசி
  • பங்குனி

தமிழ் வருடங்கள்

சித்திரை தொடங்கி பங்குனி வரை முடியும் ஒவ்வொரு தமிழ் வருடத்தையும் ஒரு பெயர் சூட்டி அழைக்கின்றோம். மொத்தம் 6௦ வருடங்களின் பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வருடத்தின் பெயர் பிரபவ (1987-88). கடைசி வருடத்தின் பெயர் க்ஷய (2047-48). 6௦ வருடங்களின் சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் பிரபவ வருடத்தில் இருந்து சுழற்சி ஆரம்பிக்கும். 6௦ வருடங்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்படுள்ளது.

  • பிரபவ
  • விபவ
  • சுக்ல
  • ப்ரமோத
  • ப்ரஜோத்பத்தி
  • ஆங்கிரஸ
  • ஸ்ரீமுக
  • பவ
  • யுவ
  • தாத்ரு
  • ஈசுவர
  • பஹுதான்ய
  • ப்ரமாதி
  • விக்ரம
  • வ்ருஸ
  • சித்ரபானு
  • சுபானு
  • தாரண
  • பார்த்திவ
  • வ்யய
  • ஸர்வஜித்
  • ஸர்வதாரி
  • விரோதி
  • விக்ருதி
  • கர
  • நந்தன
  • விஜய
  • ஜய
  • மன்மத
  • துர்முக
  • ஹேமலம்ப
  • விளம்பி
  • விகாரி
  • ஸார்வரி
  • ப்லவ
  • சுபக்ருத
  • சோபக்ருத்
  • க்ரோதி
  • விசுவாவஸு
  • பராபவ
  • ப்லவங்க
  • கீலக
  • ஸௌம்ய
  • ஸாதாரண
  • விரோதக்ருத்
  • பரிதாவி
  • ப்ரமாதீச
  • ஆனந்த
  • ராக்ஷஸ
  • அநல
  • பிங்கல
  • காளயுக்த
  • ஸித்தார்த்த
  • ரௌத்ர
  • துர்மதி
  • துந்துபி
  • ருத்ரோத்காரி
  • ரக்தாக்ஷ
  • குரோதன
  • க்ஷய

தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ஒன்பது கோள்கள்

சூரியன் - Sun
சந்திரன் - Moon
குரு -  Jupitar
செவ்வாய் - Mars
புதன் - Mercury
சுக்ரன் - Venus
சனி - Saturn
ராகு - Raghu (ascending lunar node)
கேது - Kethu (descending lunar node)

மேற்சொன்ன ஒன்பது கிரகங்களையும் நாம் நவக்கிரகங்கள் என்றும் அழைக்க்கின்றோம். தமிழ் ஜோதிடம் யுரேனஸ், புளுட்டோ, நெப்டியூன் முதலான கிரகங்களைப் பயன் படுத்துவது இல்லை.

சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்தே, அதாவது வாண் மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களை சந்திரன் கடந்து செல்லும் கணக்கை வைத்தே  தமிழ் ஜோதிடம் கணிக்கப்படுகின்றது.

தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ராசிகள்

நமது பூமிக்கு மேல் இருக்கின்ற வானமண்டலத்தை ௦-36௦ டிகிரி கொண்ட ஒரு வட்டமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வட்டத்தை 3௦ டிகிரிகளாக (பாகைகள்) பிரித்தல் 12 பாகங்கள் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கின்ற ஒவ்வொரு பாகமும் ஒரு ராசி ஆகும்.

12 ராசிகள் கொண்ட ராசி மண்டலத்தில் 1 ராசிக்கு = 3௦ பாகைகள் 3௦ x 6௦ = 1800 கலைகள் 30 x 60 x 60 = 108000 விகலைகள் 12 ராசிக்கு 108000 x 12 = 1296000 விகலைகள்

ஒரு ராசியில் 2¼ நட்சத்திரம் அடங்கியிருக்கும்

அதாவது ஒவ்வொரு ராசியிலும் 9 நட்சத்திர பாதங்கள் அடங்கியிருக்கும்.

ஒரு ராசிக்கு 3௦ பாகை அல்லது 1800 கலைகள்

ஒரு நட்சத்திரத்திற்கு 1800 / 2¼ = 800 கலைகள்

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்

ஒரு பாதத்திற்கு 2௦௦ கலைகள்

இனி எந்தெந்த ராசியில் எந்தெந்த நட்சத்திர பாதங்கள் அடங்கியிருகின்றது என்று பின்வரும் அட்டவணையில் காண்போம்.

Raasi Name Sign
Mesham (மேஷம்) அசுவினி 1,2,3,4 பாரணி 1,2,3,4 கிருத்திகை 1 பாதங்கள் மேஷ ராசியை சார்ந்தது ஆகும்.  mesham
Rishabam (ரிஷபம்) கிருத்திகை 2,3,4 ரோகினி 1,2,3,4 மிருகசீரஷம் 1,2 பாதங்கள் ரிஷப ராசியை சார்ந்தது ஆகும்.  rishabam
Mithunam (மிதுனம்) மிருகசீரஷம் 3,4 திருவாதிரை 1,2,3,4 புனர்பூசம் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியை சார்ந்தது ஆகும்.  mithunam
Kadagam (கடகம்) புனர்பூசம் 4 பூசம் 1,2,3,4 ஆயில்யம் 1,2,3,4 பாதங்கள் கடக ராசியை சார்ந்தது ஆகும்.  kadagam
Simmam (சிம்மம்) மகம் 1,2,3,4 பூரம் 1,2,3,4 உத்திரம் 1 ஆம் பாதங்கள் சிம்ம ராசியை சாந்தது ஆகும்.  simmam
Kanni (கன்னி) உத்திரம் 2,3,4 ஹஸ்தம் 1,2,3,4 சித்திரை 1,2 பாதங்கள் கன்னி ராசியை சார்ந்தது ஆகும்.  kanni
Thulam (துலாம்) சித்திரை 3,4 சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3 ஆகிய பாதங்கள் துலாம் ராசியை சார்ந்தது ஆகும்.  thulam
Viruchigam (விருச்சிகம்) விசாகம் 4 அனுஷம் 1,2,3,4 கேட்டை 1,2,3,4 ஆகிய பாதங்கள் விருச்சிகம் ராசியை சார்ந்தது ஆகும்.  viruchigam
Dhanusu (தனுசு) மூலம் 1,2,3,4 பூராடம் 1,2,3,4 உத்திராடம் 1 ஆகிய பாதங்கள் தனுசு ராசியை சார்ந்தது ஆகும்.  dhanusu
Magaram (மகரம்) உத்திராடம் 2,3,4 திருவோணம் 1,2,3,4 அவிட்டம் 1,2 பாதங்கள் மகர ராசியை சார்ந்தது ஆகும்.  magaram
Kumbam (கும்பம்) அவிட்டம் 3,4 சதயம் 1,2,3,4 பூரட்டாதி 1,2,3 ஆகிய பாதங்கள் கும்ப ராசியை சார்ந்தது ஆகும்.  kumbam
Meenam (மீனம்) பூரட்டாதி 4 உத்திரட்டாதி 1,2,3,4 ரேவதி 1,2,3,4 ஆகிய பாதங்கள் மீன ராசியை சார்ந்தது ஆகும்.  meenam

27 நட்சத்திரங்களின் பெயர்கள்

மனிதன் பிறக்கும் பொழுது 27 நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் எதாவது ஒன்றில் தான் பிறக்கின்றான். மனிதன் எந்த நட்சத்திர பாதத்தில் பிரக்கின்றானோ அந்த பாதத்திற்க்குரிய எழுத்தில் தனது பெயரை வைத்துக் கொண்டால் அவன் வாழ்வு சிறக்கும். கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் நட்சத்திர பெயர்களும் அவற்றின் பாதங்களுக்கு உண்டான பெயர் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Star Name (நட்சத்திரம்) பாதம் (பெயர் முதல் எழுத்து பரிந்துரை)
Aswini (அசுவினி) 1 சு 2 கே 3 சோ 4 ல
Bharani (பரணி) 1 லி 2 லு 3 லே 4 லோ
Kiruthigai (கிருத்திகை) 1 அ 2 இ 3 உ 4 எ
Rogini (ரோகினி) 1 ஒ 2 வ 3 வி 4 வூ
Mirugaseerasam (மிருகசீர்ஷம்) 1 வே 2 வோ 3 க் 4 கி
Thiruvaadhirai (திருவாதிரை) 1 கு 2 த 3 ங் 4 ச
Punarpoosam (புனர்பூசம்) 1 கே 2 கோ 3 ஹ 4 ஹி
Poosam (பூசம்) 1 ஹூ 2 ஹே 3 ஹோ 4 ட
Aayilyam (ஆயில்யம்) 1 டி 2 டு 3 டே 4 டோ
Magam (மகம்) 1 ம 2 மி 3 மு 4 மே
Pooram (பூரம்) 1 மோ 2 ட 3 டி 4 டு
Utthiram (உத்திரம்) 1 டே 2 டோ 3 ப 4 பி
Hastham (ஹஸ்தம்) 1 பு 2 ஷ 3 ண 4 ட
Chithirai (சித்திரை) 1 பே 2 போ 3 ர 4 ரி
Suvathi (சுவாதி) 1 ரு 2 ரே 3 ரோ 4 தா
Visaagam (விசாகம்) 1 தி 2 து 3 தே 4 தோ
Anusam (அனுஷம்) 1 க 2 நி 3 து 4 நே
Kettai (கேட்டை) 1 நோ 2 யா 3 யீ 4 யு
Moolam (மூலம்) 1 யே 2 யோ 3 ப 4 பி
Pooradam (பூராடம்) 1 பு 2 த 3 ப 4 ட
Utthiradam (உத்திராடம்) 1 பே 2 போ 3 ஜ 4 ஜி
Thiruvonam (திருவோணம்) 1 கி 2 கு 3 கே 4 கோ
Avittam (அவிட்டம்) 1 க 2 கி 3 கு 4 கே
Sadhayam (சதயம்) 1 கோ 2 ஸ 3 ஸி 4 ஸே
Poorattadhi (பூரட்டாதி) 1 ஸோ 2 ஸோ 3 த 4 தி
Utthirataadhi (உத்திரட்டாதி) 1 து 2 ஸ்ரீ 3 ச 4 த
Revathi (ரேவதி) 1 தே 2 தோ 3 ச 4 சி

3 யோகங்கள்

  • அமிர்தயோகம்
  • சித்தயோகம்
  • மரணயோகம்

27 உபயோகங்கள்

  • விஷ்கம்பம்
  • பரீதி
  • ஆயுஸ்மான்
  • சௌபாக்கியம்
  • சோபனம்
  • அதிகண்டம்
  • சகர்மம்
  • திரிதி
  • சூலம்
  • கண்டம்
  • விருத்தி
  • த்ருவம்
  • வியகாதம்
  • ஹர்ஷணம்
  • வச்சிரம்
  • கித்தி
  • விதிபாதம்
  • வரியான்
  • பரிகம்
  • சிவம்
  • சித்தம்
  • ஸாயம்
  • சுபம்
  • சுப்ரம்
  • பிரமம்
  • மகேந்திரம்
  • வைகிருதி

11 கரணங்கள்

  • பவம்
  • பாலவம்
  • கௌலவம்
  • தைதுனை
  • கரசை
  • வணிசை
  • பந்திரை
  • சகுனி
  • சதுஷ் பாதம்
  • நாகவம்
  • கிம்துஷ்கினம்

ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் சஞ்சரிக்கும் காலம்

சூரியன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்

சந்திரன் ஒரு ராசியில் நிற்பது 2¼ நாள்

செவ்வாய் ஒரு ராசியில் நிற்பது 1½ மாதம்

புதன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்

குரு ஒரு ராசியில் நிற்பது 1 வருஷம்

சுக்கிரன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்

சனி ஒரு ராசியில் நிற்பது 2½ வருஷம்

ராகு ஒரு ராசியில் நிற்பது 1½ வருஷம்

கேது ஒரு ராசியில் நிற்பது 1½ வருஷம்

2 - பக்ஷங்கள்

சுக்கிலபக்ஷம - வளர்பிறை - அமாவாசை கழித்த மறுநாள் முதல் பௌர்ணமி வரையில் உள்ள 15 நாட்கள் வளர்பிறை

கிருஷ்ணபக்ஷம் - தேய்பிறை - பௌர்ணமி கழித்த மறுநாள் முதல் அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் தேய்பிறை

திதிகள்

திதி என்றால் நாள் அல்லது தினம் என்பது ஆகும்.

பிரதமை
துவிதியை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரயோதசி
சதுர்த்தசி
பௌர்ணமி / அமாவாசை

இவற்றில் திவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி இவை எட்டும் வளர்பிறையில் சுப திதிகள்.

தேய்பிறையில் பிரதமை, துவிதியை, திரிதியை, பஞ்சமி இவை நாலும் சுபம் ஆகும். மற்ற திதிகள் அசுப திதிகள் ஆகும்.

தமிழ் ஜோதிடதில் பயன்படுத்தப்படும் கால அளவைகள்

1 கண்ணிமை 2 விகற்பரை
6௦ விகற்பரை அல்லது 3௦ கண்ணிமை 1 தற்பரை
2½ தற்பரை 1 செகிண்டு
4 செகிண்டு 1 கலை
6 கலை 1 வினாடி
2½ வினாடி 1 நிமிடம்
4 நிமிடம் 1 பாகை அல்லது டிகிரி
6 பாகை 1 நாழிகை
2½ நாழிகை 1 மணி அல்லது ஹோரை
2 மணி 1 ராசி
3¾ நாழிகை 1 முகூர்த்தம்
7½ நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் (24 மணி) 1 நாள்
7 நாள் 1 வாரம்
15 நாள் 1 பக்ஷம்
2 பக்ஷம் 1 மாதம்
2 மாதம் 1 ருது
2 அயனம் 1 வருஷம்

ராசிகளும் தொடர்புகளும்


பொருள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி
சமூகப் பிரிவு க்ஷத்திரியர் வியாபாரி தொழிலாளி பூசாரி க்ஷத்திரியர் வியாபாரி
பாலினம் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
இயக்கம் நகரகூடியது நிலையானது பொதுவானது நகரகூடியது நிலையானது பொதுவானது
இரவு/பகல் இரவு இரவு இரவு இரவு பகல் பகல்
ஊனம் குருடு செவிடு ஊமை குருடு செவிடு நொண்டி
அளவு கொஞ்சம் சமம் அதிகம் அதிகம் கொஞ்சம் கொஞ்சம்
வெப்பநிலை சூடு சூடு\ & குளிர் சூடு குளிர் சூடு சூடு
உடல் தலை முகம் மார்பு இதயம் வயிறு இடுப்பு
குணம் ரஜஸ் ரஜஸ் ரஜஸ் சாத்வீகம் சாத்வீகம் தாமஸம்
அதிபதி செவ்வாய் வெள்ளி புதன் சந்திரன் சூரியன் புதன்
நிறம் ரத்தச்சிவப்பு வெள்ளை பச்சை வெள்ளை வயலேட் பன்நிறம்
இயல்பு கொடூரம் இதம் கொடூரம் இதம் கொடூரம் இதம்
இனம் செம்மறியாடு காளை ஆண்-பெண் நண்டு சிங்கம் கன்னி


பொருள் துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
சமூகப் பிரிவு தொழிலாளி பூசாரி க்ஷத்திரியர் வியாபாரி தொழிலாளி பூசாரி
பாலினம் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
இயக்கம் நகரகூடியது நிலையானது பொதுவானது நகரகூடியது நிலையானது பொதுவானது
இரவு/பகல் பகல் பகல் இரவு இரவு பகல் இரவு, பகல்
ஊனம் ஊமை நொண்டி குருடு செவிடு ஊமை நொண்டி
அளவு அதிகம் சமம் சமம் சமம் சமம் அதிகம்
வெப்பநிலை சூடு குளிர் சூடு சூடு சூடு குளிர்
உடல் தொப்புள் பிறப்பு உறுப்பு தொடை முழங்கால் கணுக்கால் கால்
குணம் ராஜசம் ராஜசம் சாத்வீகம் தாமஸம் தாமஸம் சாத்வீகம்
அதிபதி வெள்ளி செவ்வாய் வியாழன் சனி சனி வியாழன்
நிறம் நீலம் தங்கநிறம் சாம்பல்நிறம் வெள்ளை கருமை பச்சை
இயல்பு கொடூரம் இதம் கொடூரம் இதம் கொடூரம் இதம்
இனம் துலாம் தேள் குதிரை-மனிதன் முதலை நீர்க்குடம் மீன்

கிரகங்களும் தொடர்புகளும்


பொருள் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
சமுகப்பிரிவு க்ஷத்திரியன் வியாபாரி க்ஷத்திரியன் தொழிலாளி
பாலினம் ஆண் பெண் ஆண் அலி
நிறம் சிவப்பு-நீலம் வெள்ளை சிவப்பு-வெள்ளை பச்சை
குணம் சாத்வீகம் சாத்வீகம் தாமஸம் ராஜசம்
தொழில் அரசர் அரசர் சேனாபதி இளவரசர்
அதிதேவதை அக்னி ஈஸ்வரர் சுப்பிரமணியர் விஷ்ணு
ப்ரத்யதிதேவதை ருத்ரர் கௌரி பூமி புருஷோத்தமர்
திசை கிழக்கு வடமேற்கு தெற்கு வடக்கு
வித்யா சமஸ்கிருதம் தமிழ் மந்திரம் ஜோதிடம்
வாகனம் இரதம் முத்துவானூர்தி அன்னம் குதிரை
சுவை கசப்பு, காரம் உப்பு கசப்பு அறுசுவைகள்
இயல்பு கொடூரம் இடமானது கொடூரம் இடமானது
உச்சநிலை மேஷம் ரிஷபம் மகரம் கன்னி
நீச்சநிலை துலாம் விருசிகம் கடகம் மீனம்
சொந்தவீடு சிம்மம் கடகம் மேஷம், விருச்சிகம் மிதுனம், கன்னி
பார்வை 7 7 4,7,8 7
நண்பன் சந்திரன், செவ்வாய், வியாழன் சூரியன், புதன் சூரியன், சந்திரன், வியாழன் சூரியன், வெள்ளி
தான்யம் கோதுமை நெல் துவரம் பருப்பு பச்சைப்பயிறு
சமித்து எருக்கு பலாசு நூக்கமரம் நாயுருவி
புஷ்பம் சிவப்புதாமரை வெள்ளை, லில்லி செண்பகப்பூ வெண்பூ
உலோகம் தாமிரம் வெண்கலம் தாமிரகூட்டு உலோகம் பித்தளை
மணிக்கற்கள் மாணிக்கம் முத்து பவளம் மரகதம்
துணி சிவப்புப்பட்டு வெண்பட்டு சிவப்புப்பட்டு பச்சைப்பட்டு
இருப்பிடம் எண்கோணம் சதுரம் முக்கோணம் அம்பு உருவம்
தரம் அசுபன் அசுபன் அசுபன் சுபன்
 
பொருள் குரு சுக்ரன் சனி ராகு கேது
சமுகப்பிரிவு ஆசாரியார் ஆசாரியார் சண்டாளன் நீசன் நீசன்
பாலினம் ஆண் பெண் அலி அலி அலி
நிறம் மஞ்சள் வெள்ளை கருமை கருமை பல நிறம்
குணம் சாத்வீகம் ராஜசம் தாமஸம் தாமஸம் தாமஸம்
தொழில் மந்திரி மந்திரி பணியாள் சமையற்காரர் சமையற்காரர்
அதிதேவதை இந்திரன் இந்திரன் யமன் காலன் பிரம்மா
ப்ரத்யதிதேவதை பிரம்மா இந்திராணி பிரஜாபதி சர்ப்பராஜா சித்ரகுப்தன்
திசை வடகிழக்கு தென்கிழக்கு மேற்கு தென்மேற்கு -
வித்யா சமஸ்கிருதம் சமஸ்கிருதம் நீசபாஷை நீசபாஷை நீசபாஷை
வாகனம் யானை பருந்து காகம் ஆடு சிங்கம்
சுவை இனிப்பு புளிப்பு புளிப்பு புளிப்பு புளிப்பு
இயல்பு இதம் இதம் கொடூரம் கொடூரம் கொடூரம்
உச்சநிலை கடகம் மீனம் துலாம் விருச்சிகம் விருச்சிகம்
நீச்சநிலை மகரம் கன்னி மேஷம் ரிஷபம் ரிஷபம்
சொந்தவீடு தனுசு, மீனம் ரிஷபம், துலாம் மகரம், கும்பம் கன்னி மீனம்
பார்வை 5,7,9 7 3,7,1௦ 7 7
நண்பன் சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், சனி புதன், சந்திரன் - -
தான்யம் கடலை அவரை எள்ளு உளுந்து கொள்ளு
சமித்து அரசமரம் அத்தி வன்னி அருகம்புல் குசப்ப்புல்
புஷ்பம் மல்லிகை வெண்தாமரை கருநீலலில்லி மந்தாரை சிவப்புலில்லி
உலோகம் தங்கம் முத்துகள் இரும்பு கருங்கல் உலோகத்தாது
மணிக்கற்கள் புஸ்பராகம் வைரம் நீலக்கல் கண்ணாடிக்கல் வைடூரியம்
துணி மஞ்சள்பட்டு வெண்பட்டு நீலப்பட்டு கரும்பட்டு சிவப்புபட்டு
இருப்பிடம் நீள்சதுரம் ஐங்கோனம் குப்பை இருள் போந்து
தரம் சுபன் அசுபன் அசுபன் அசுபன் அசுபன்