இலவச நட்சத்திர தாரை ரிப்போர்ட்

"நல்ல தொடக்கம், பாதி முடிந்ததுக்குச் சமம்". நாம் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அந்த நாள் நமக்கு வெற்றியைத் தரக்கூடிய நாள் தானா? என்பதைத் தெரிந்துகொண்டு தொடங்க வேண்டும். ஜோதிட ரீதியாக இதனை தார பலன் என்று கூறுவார்கள். அதாவது ஒரு செயலை செய்பவரின் நட்சத்திரத்துக்கும் அதைத் தொடங்குகிற நாளின் நட்சத்திரத்துக்கும் உள்ள பலனே தாரா பலன் என்று சொல்வார்கள்.

சுபகாரியங்களை செய்யும் முன் நாள் பார்க்கும் போது நட்சத்திர தாரையும் பார்த்து செய்தல் உத்தமம் ஆகும். வேலைக்காக செல்லும் போதும், புதிய பொருட்களை வாங்கும் போதும் (வண்டி, வீடு, நிலம் போன்ற) தொழில் துவங்குவது போன்ற காரியங்களுக்கு பார்க்க வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்து ( ஜாதகரின் நட்சத்திரம் கிருத்திகை என்றால், அன்றைய நட்சத்திரம் பூரம் என்றால் 11÷9 = 2 மீதம். இதில் 0,2,4,6,8 வந்தால் உத்தமம் 1,3,5,7 வந்தால் அதமம்

உங்கள் பிறந்த நட்சகதிரத்தின் படி தினசரி தாரை பலன்களை இங்கு காணலாம்