திருமண முகூர்த்தம் குறிக்கும் விவாக சக்கரம் - முறை 2
திருமண முகூர்த்தம் குறிக்கும் விவாக சக்கரமும் அதன் பிரயோகமும்...
ஒரு விவாக முகூர்த்தம் குறிக்கும் முன்னர், திருமண அனுகூல பொருத்தம் என்று அனைத்து விதிகளையும் சரி பார்த்து , அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், மணமக்களுக்கு குறிக்கும் திருமண நாள் முகூர்த்தம் சரியில்லாமல் போனால், திருமண வாழ்க்கையில் சிரமங்கள் என்பது நிச்சயமான ஒரு விஷயம். திருமணம் நடக்கும் நாள் , சுப முகூர்த்த நாளா, மணமக்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளா என்று மட்டும் பார்த்தால் போதாது. விவாக சக்கரத்தை பயன்படுத்துங்கள். இன்னும் சிறப்பான முகூர்த்த நாளை கண்டுபிடிக்கலாம்.
நமது மென்பொருளில் விவாக சக்கரங்கள் வரைய இரண்டு முறைகள் கொடுத்து இருக்கின்றோம். அவற்றில் இது இரண்டாவது முறை ஆகும்.
இந்த முறையில் விவாஹம் குறிக்கும் நாள் அன்று உள்ள, சூரியன் நிற்கும் நட்சத்திரத்தை 1 இல் நடுவில் எழுதி கொள்ளவும். உதாரணமாக சூரியன் நிற்கும் நட்சத்திரம் உத்திரம் என்றால் உத்திரம் என்று 1 வது கட்டத்தில் நடுவில் எழுதி, அதற்கு முந்தைய நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தினை அதற்கு மேலும், அதற்கு அடுத்த நட்சத்திரமான ஹஸ்தம் நட்சத்திரத்தை, அதற்கு கீழும் எழுதி கொள்ளுங்கள்.
பின்னர் நட்சத்திர வரிசைப்படி, 2 முதல் 9 வது கட்டங்கள் வரை நிரப்பி கொள்ளுங்கள்.
விவாஹம் குறிக்கும் நாள் அன்று உள்ள சந்திரன் நட்சத்திரம் என்ன என்பதை பாருங்கள். இந்த ஜாதகத்தில் உதாரணமாக திருமணம் குறிக்க உள்ள நாள் அன்று உத்திர நட்சத்திரம் என்றால் அது 1 வது கட்டத்தில் உள்ளது என்றால் அந்த திருமண நாள் என்பது வேதனையை குறிக்கும். முகூர்த்தம் தவிர்க்கப்பட வேண்டும்.
விவாஹம் குறிக்க உத்தேசிக்கும் நாள் அன்று ஹஸ்த நட்சத்திரம் என்றால் , அது 1 வது கட்டத்தில் உள்ளது என்றால் அந்த திருமண நாள் என்பது வேதனையை குறிக்கும். முகூர்த்தம் தவிர்க்கப்பட வேண்டும்.
விவாஹம் குறிக்க உத்தேசிக்கும் நாள் அன்று சித்திரை நட்சத்திரம் என்றால் அது 2 வது கட்டத்தில் உள்ள லக்ஷ்மி கடாட்சம் என்பதை குறிக்கும். எனவே இந்த முகூர்த்த நாள் என்பது திருமண தம்பதியினர் சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு அற்புதமான தொடக்க நாள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜாதகங்கள் நன்றாக இருந்து, ஏற்கனவே திருமணம் நடந்த நாள் சரியின்றி இருந்த காரணத்தினால், சங்கடங்களை அனுபவிக்கும் தம்பதியினருக்கும் , இந்த விவாக சக்கரம் பயன்படுத்தி, மறு விவாகம் செய்வது சிறந்த முன்னேற்றங்களை தரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
கோச்சார சந்திர நட்சத்திரம் பின்வரும் கட்டங்களில் விழுந்தால் எடுக்க வேண்டிய பலன்கள்
1. வேதனை
2. லட்சமி கடாட்சம்
3. வறுமை, பீடை
4. இழப்பு, விரயம்
5. சர்வ சௌபாக்கியம்
6. அசிங்கம், அவமானம்
7. வளர்ச்சி இல்லை
8. சகல சௌபாக்கியம்
9. சகல சௌபாக்கியம்