ஏப்ரல் 22, 2023 அன்று காலை 5:15 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கின்றார்.
21-06-2023 அன்று இரவு 12:10 மணிக்கு பரணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கின்றார்
04-09-2023 காலை 7:45 மணிக்கு பரணி நட்சத்திரத்தில் 21:23:40 டிகிரியில் இருக்கும் பொழுது வக்கிரம் ஆகின்றார்
27-11-2023 காலை 3:14 மணிக்கு வக்ரகதியிலே அஸ்வினிக்கு வருகின்றார்
31-12-2023 காலை 8:12 மணிக்கு மேஷத்தில் 12:28:25 டிகிரியில் வக்ர நிவர்த்தி ஆகின்றார்.
தனித்த குருவாக ஒரு ராசியில் குரு இருந்தால் அது நல்லதல்ல என்று ஒரு விதி உண்டு ஆனால் நல்லவிதமாக குரு மேஷத்தில் பெயர்ச்சியாகும் போது அங்கு சூரியன், புதன், ராகு, சந்திரன் உள்ளனர். இது ஒரு கலவையான பலனை உருவாக்கும். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது மற்ற கிரகங்கள் அஸ்தங்க தோஷம் அடைவதை கவனத்தில் கொள்ள வேண்டும்
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
குரு பொதுவாக தான் நிற்கும் ராசியில் இருந்து 5, 7 மற்றும் 9 ஆம் வீடுகளை பார்த்து புனித படுத்துவார்.
அந்த வகையில் 22-04-2023 அன்று நிகழும் குரு பெயர்ச்சியின் மூலம் 5 ஆம் பார்வையாக சிம்ம ராசியையும், 7 ஆம் பார்வையாக துலாம் ராசியையும், 9 ஆம் பார்வையாக தனுசு ராசியையும் பார்வை செய்து புனித படுத்த இருக்கின்றார்.
எனவே சிம்மம், துலாம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, சிம்மம், துலாம், தனுசு இவை ஏழாம் வீடாக இருப்பவர்களுக்கு திருமணம் முதலான சுப காரியங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உண்டு
குரு பகவான் பொதுவாக கோச்சாரத்தில் உங்கள் ஜனன ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆம் வீடுகளில் பயணம் செய்யும் பொழுது நன்மைகளை செய்வார். இது பொது விதி
இதன் அடிப்படையில் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் நிகழும் குருபெயர்ச்சியில் பொதுவான சுப பலன்கள் அடைகின்றான.
குரு பகவான் பொதுவாக கோச்சாரத்தில் உங்கள் ஜனன ராசிக்கு 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய வீடுகளில் வரும்பொழுது கெடுதல்களை செய்வர். இது பொது விதி
புராண எடுத்து காட்டு பாடல்
ஜென்ம ராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும்,
தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்,
இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும்,
ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே வனவாசம் அப்படிப் போனதும்,
சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்,
வன்மை யற்றிட ராவணம் முடி பனிரெண்டினில் வீழ்ந்ததும்.
மன்னு மா குரு சாரி மாமனை வாழ்விலா துறமென்பவே
இதன் அடிப்படையில் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், ஆகிய ராசிகள் நிகழும் குரு பெயர்ச்சியில் கெடுதலான பலன்களை பொதுவாக பெறுகின்றன.
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிகழும் செவ்வாய். சுக்ரன் சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சிம்ம ராசி பிரவேசம் ஆனது குருவின் ஐந்தாம் பார்வையால் புனித மடைகின்றது.
அதாவது ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சிம்மத்தில் ஒரு positive energy உருவாக இருக்கின்றது. அந்த காலத்தில் உங்கள் ஜாதகத்தில் சிம்மம் உங்கள் லக்கின / ராசிகளுக்கு எந்தனையாவது வீடு என்பதனை பார்த்து அதற்கான பலன்கள் நிகழ்கின்றனவா என்பதனை கவனிக்கவும்.
மேலும் சிம்மத்தில் உருவாகும் positive energy ஏழாம் பார்வையாக கும்பத்தில் விழும். அங்கு இருக்கும் சனி மற்ற கிரகங்களின் ஒளியினால் சுபத்துவம் ஆவர்.
எனவே ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், சனியின் சுபத்துவ பார்வை மேஷம், சிம்மம் மற்றும் விருச்சிகத்தில் விழும். இந்த வீடுகளில் சனியினால் சுப காரியங்கள் தூண்டப்படும்.
அது போலவே சிம்மத்தில் இருந்து செவ்வாயின் சுபத்துவ பார்வை விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய வீடுகள் செவ்வாயினால் சுபத்துவமாக தூண்டப்படும்
கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்த துலாம். இப்பொழுது குரு பார்வையால் மீட்படையும். கேதுவின் 3 ஆம் பார்வையால் பாதிக்க பட்டு இருந்த சிம்மமும, தனுசும் நிம்மதி பெருமூச்சு விடலாம்
தசா புத்தி அந்தரம் நன்றாக வேலை செய்யம் போது குரு பெயர்ச்சி எந்த கெடுதலையும் பெரிதாக செய்யாது
வியாழக்கிழமை குரு ஹோரையில் பிரார்த்தனை செய்யவும்