விநாயகரும், இயேசுவும், கேதுவும், ஞானமும்

விநாயகரும், இயேசுவும், கேதுவும், ஞானமும்

ஞானமடைதலை நோக்கி குரு பாக்கியநாதனுடன் ஒரு ஆனந்த பயணம்

பொதுவாக ஜோதிடத்தில் நவகிரகங்களில் கேது மிகுந்த வலிமை வாய்ந்த கிரகம் என அறியப்படுகின்றார்.

சூரியனை காட்டிலும் கேதுவே வலிமையானவர்

கேதுவிற்கு பரிகாரம் என்று கூற வேண்டும் என்றால் முதலில் கூறப்படுவது விநாயகர் வழிபாடு தான்

மேலும் ஜோதிடத்தில் கிறிஸ்த்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் கேதுவுடன் தான் ஒப்பிடுகின்றனர்

குணத்திற்கு காரகனாகவும் கேதுவே அறிய படுகின்றார்

யார் இந்த கேது?

விநாயகரும், இயேசுவும், கேதுவும், ஞானமும் – இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன

ஒவ்வொன்றாக பார்ப்போம்

விநாயகர் பார்வதி தேவியினால் உருவாக்கப்பட்டு உயிர் பெறுகின்றார்
அவரது அன்பிற்கு பாத்திரமானவராக இறுக்கினார்
சிவ பெருமான் பார்வதி தேவியை பார்க்க வரும் பொழுது விநாயகர் அவரை அனுமதிக்காத கோபத்தில் தனது சூலாயுதத்தை பயன்படுத்தி விநாயகரின் தலையை துண்டித்து கொன்று விடுகின்றார்
தனது கோபம் தனித்து பார்வதி தேவி கேட்க விநாயகருக்கு மீண்டும் உயிர் கொடுக்கின்றார்

இதுபோலவே இயேசு கிறிஸ்துவும் கன்னி மரியாளின் வயிற்றில் இறைவனால் உருவாக்க படுகின்றார்
அன்னை மரியாளின் அன்பிற்கு பாத்திரமானவராக இறுக்கினார்
சித்திரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறக்கின்றார்
இறந்து மூன்றாம் நாள் இறைவனின் அருளோடு உயிர் பெற்று எழுகின்றார்.

விநாயகரும், இயேசுவும் தந்தை இன்றி பிரிக்கின்றனர்.
விநாயகரும், இயேசுவும் அன்னையினால் பிரியமாக வளர்க்க படுகின்றனர்
விநாயகரும், இயேசுவும் இறக்கின்றனர். அல்ல உயிரை கொடுக்கின்றனர்
விநாயகரும், இயேசுவும் மீண்டும் உயிர் பெறுகின்றனர்

இந்த ஒற்றுமைகளை உற்று நோக்கினீர்கள் ஆனால்
உயிரற்ற நிலையில் இருந்து உயிர் பெற்று எழுவது கேதுவை குறிக்கும்

மண்ணில் ஒரு பிள்ளையார் செய்து நீங்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது
அந்த பிள்ளையார் உயிர் பெறுகின்றார்
உங்கள் வேண்டுதல்களை சொல்லி, ஜெபித்து பூஜை முடித்த உடன் தண்ணீரில் கலந்து
பிள்ளையாரை கரைக்கும் பொழுது இறந்து விடுகின்றார். அதாவது பஞ்ச பூதத்துடன் கலந்து விடுகின்றார்.

இதைத்தான் இயேசுவின் வாழ்க்கையும், வழிபாடும் நமக்கு எடுத்து சொல்கின்றது
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்த்தவர்கள் தவம் இருந்து புனித வெள்ளி சடங்கும், ஈஸ்டர் கொண்டாட்டங்களும்
வருடாவருடம் இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே பிரபஞ்ச ரகசியத்தை கொண்டவை

புனித வெள்ளி ஆனது முதலில் இறந்து ஈஸ்டர் அன்று உயிர்ப்பதை குறிக்கின்றது
விநாயகர் சதுர்த்தி முதலில் உயிர்த்து பின்பு கடலில் கலக்கும் பொது இறப்பதை குறிக்கின்றது

கால புருஷ தத்துவத்தில் முதலில் இருப்பது மேஷ ராசி, அதில் முதலில் இருப்பது அஸ்வினி நட்சத்திரம். அது கேதுவின் நட்சத்திரம் ஆகும். வாழ்க்கையின் தொடக்கமே கேது என்று உங்களுக்கு புரியவேண்டும்

ஆணும், பெண்ணும் இணைத்து கரு உருவாகும் முதல் நிலை கேது.

கால புருஷ தத்துவத்தில் கடைசியில் இருக்கும் ராசி மீனம். மீனத்தில் கடைசியாக இருக்கும் நட்சத்திரம் ரேவதி. இது புதனின் நட்சத்திரம். புதன் அறிவை குறிக்கும் கிரகம். இந்த புதன் மீனத்தில் நீச்சமாகிறனர்.
அதாவது சிந்திக்காமல், தியானத்தில் சமாதி நிலையில் இருப்பதை இது குறிக்கின்றது

பிறந்த குழந்தை சிந்திக்காது. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுகின்றோம்

குழந்தை போல இல்லையென்றால் விண்ணுலக இடம் இல்லை என்று இயேசு சொல்கின்றார்

அதே போல் உயிரை மட்டும் எடுப்பவர்களுக்கு அஞ்சாதீர்கள், உயிரையும், ஆண்மாவையும் நரகத்தில் அழிக்க வல்ல இறைவனுக்கு மட்டும் அஞ்சுங்கள் என்று கூறுகின்றார்.

எனவே நீங்கள் குணமடைய விரும்பினால் குழந்தையை போல மாறுங்கள்

யாருக்கும், எதற்கும் பயப்படாமல் வாழ பழகுங்கள்

பயம் என்னது இருளை குறிக்கும். தைரியம் என்பது வெளிச்சத்தை குறிக்கும்

எலெக்ட்ரானிக்ஸ், கணிப்பொறி முதலானவை கேதுவின் காரகத்துவதில் வரும்
ஏனெனில் கணிப்பொறிக்கு 1, 0 என்ற இரண்டு மதிப்புகளை தவிர வேறு ஒன்றும் தெரியாது
கேதுவிற்கு தலை இல்லை. எனவே சிந்திக்க முடியாது.

ஆனால் ஒளி, ஒளியற்ற தன்மை(இருள்), சத்தம், சத்தம் அற்ற தன்மை(வெறுமை) என்பது கேதுவிற்கு தெரியும்

ஒளியும், சத்தமும் உடலுக்கும், மனதிற்கும் முக்கியம். உங்களை சுற்றி என்ன ஒளி இருக்கின்றது, உங்களை சுற்றி என்ன சத்தம் இருக்கின்றது. இதுவே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது

தொடர்ந்து இணைத்து இருங்கள்

அன்புடன்,
குரு பாக்கியநாதன்


9751889306
9840324409
8925765774

https://exactpredictions.in/
குரு பாக்கியநாதனின் ஜோதிட ஆராய்ச்சி இணையதளம் மற்றும் மென்பொருள்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!