நான் (நீ) யார்?

வணக்கம்.

ஞானமடைதலை நோக்கி … குரு பாக்கியநாதனுடன் ஒரு ஆனந்த பயணம் என்று தொடரின் முதல் பதிவு இது.

இன்று 18-02-2023, மகா சிவராத்திரி தினம் அன்று இந்த தொடரை நாம் ஆரம்பிக்கின்றோம்.

இன்றிலிருந்து 69 நாட்கள், தொடர்ச்சியாக நாம் ஞானமடைதல் என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம்.

ஞானமடைதலின் முதல் படி நான் யார் என்று அறிவதே.

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் என்றாவது ஒருநாள் “நான் யார்?” என்ற கேள்வி நிச்சயம் எழும்பி இருக்கும்.

அவ்வாறு எண்ணம் தோன்றிய உடன் சில நிமிடங்கள் அது குறித்து சிந்தித்து இருப்பீர்கள். சிறிது நேரத்திலேயே வேறு எண்ணங்களால் திசை திருப்பப்பட்டு அந்த நான் யார் என்ற சிந்தித்தலை கைவிட்டு இருப்பீர்கள்.

இந்த பதிவு உங்களுக்கானது. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மகா அற்புத சக்தியை நீங்கள் உணர செய்வதற்கான ஒரு தொடக்கம்

பூமியில் இருந்து எடுக்கப்படும் எந்த ஒரு கனிமமும், எடுத்த உடன் அப்படியே பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக வைரம், தங்கம், தாமிரம், இரும்பு, கிரானைட் கல், கருங்கல், பெட்ரோல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்

இவற்றை வெளியே எடுத்து சுத்திகரித்து, பண்படுத்தி, பட்டை தீட்டி, செதுக்கி என்று பல வேலைகளை செய்த பின்பே அவற்றை நம்மால் பயன்படுத்த முடிகின்றது அல்லவா?

அவ்வாறே மனிதனும் மண்ணாகவே இருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனும் தான் தங்கமா, வெள்ளியா, வைரமா, இரும்பா, கருங்கல்லா, கிரானைட் கல்லா, பெட்ரோலா, தண்ணீரா ….. என்று தரம் பிரித்து அறிய வேண்டும். ஒரு எடுத்துக்காட்டுக்கு மேற்கூறிய பெயர்களை குறிப்பிட்டேன். உண்மையில் லட்சக்கணக்கான கனிமங்கள் பூமியில் உள்ளன அவரில் நீங்கள் எதனுடன் அதிகம் ஒத்து போகிண்றீர்கள் என்று அறிய வேண்டும்

அவ்வாறு நீங்கள் அறிந்த பின் அந்த பொருளை எந்த முறையில் சுத்திகரிப்போமோ, எத்தனை முறை சுத்திகரிப்போமோ அதுபோல் உங்களை நீங்கள் சுத்திகரித்து, புடமிட்டாலொழிய நீங்கள் அந்த உலோகமாக மிளிர மாட்டீர்கள்

பொதுவாக ஒரு மனிதனால் முடியாத விஷயம் ஒன்று இல்லை என்ற பரவலான சொற்றோடர் கேள்வி பட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை ஒருவர் எவ்வளவு வேகமாக செய்து முடிக்கின்றார். அவர் செய்த அந்த செயலால் எவ்வளவு நனமை நிகழ்ந்தது என்ற இரண்டு அளவீடுகளை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்,

மீனும், பறவையும், பூச்சியும், புழுவும், விலங்கும், மரமும் என பலவித ஜீவராசிகள் உள்ளன.

விலங்கினங்களை எடுத்து கொண்டாலே, அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு சிறப்பியல்புகள், குணாதியசியங்கள் உள்ளன.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. அவையாவும் தனித்தனிமை கொண்டவை. தனி திறமை கொண்டவை

அது போலவே ஒவ்வொரு மனிதரும் தனித்தனிமை கொண்டவர். தனித்திறமை கொண்டவர். மதிக்கத்தக்கவர்

உங்களுக்குள் இயறகையாகவே ஒளிந்து இருக்கும் திறமை என்ன என்பதை ஆத்மார்த்தமாக நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்.

நீங்கள் செய்யும் வேலை / செயல் 100 , 80, 60, 40, 20, 0 சதவிகிதம் பலன் தருகின்றது என்று மதிப்பிடுங்கள்

நீங்கள் செய்யும் வேலை / செயல் எந்த சிரமும் இன்றி தன்னிச்சையாக இலகுவாக ஆத்மார்த்தமாக செய்ய முடிகின்றதா என்று கவனியுங்கள்.

இந்த இரண்டு விஷயமும் சரியான அளவீடுகளில் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்? இல்லை என்றால் நீங்கள் நிச்சயம் உங்களை சுய மதிப்பீடு செய்ய வேண்டும்.

பொதுவாகவே நாம் வாழும் சமூகத்தில் பள்ளிப்படிப்பு முடித்து, நீங்கள் மேல்படிப்பு, டிகிரி எல்லாம் முடித்து ஒரு பணியில் இருக்கின்ரீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த பணியில் உங்களுக்கு திருப்தி இல்லை என்ற சூழ் நிலை உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள்

அல்லது உங்களுக்கு இன்னும் நல்ல வேலையே கிடைக்க வில்லை என்று வைத்து கொள்ளுங்கள்

அல்லது உங்களுக்கு ஒரு நாளில் நிறைய நேரம் நல்ல முறையில் செலவழிக்கப்படாமல் வீணாகின்றது என்று வைத்து கொள்ளுங்கள்

அல்லது எனக்கு 40, 50 60 வயது ஆகி விட்டது எனக்கு இன்னும் வாழ்வில் நிறைவு கிடைக்க வில்லை என்ற நிலையில் உள்ளீர்களா?

அல்லது வழக்கை போராட்டத்தில் சிக்கி, சின்னாபின்னமாக ஆகி, ஏன் இந்த வாழ்க்கை என்ற விரக்தியின் விளிம்பில் இருக்கின்ரீர்களா?

நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. இந்த நொடியில் ஒரு முடிவு எடுங்கள், அது

நான் யார்? என்று முழுதுமாக அறிந்து கொண்டு தான் நான் அடுத்த வேலையை செய்வேன் என்ற சபதம் எடுங்கள்

நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள உங்களுடன் சேர்ந்து ஒரு ஆனந்தமான பயணத்தை நான், “குரு பாக்கியநாதன்” மேற்கொள்ள இருக்கின்றேன்.

இது உங்களுக்கும், எனக்கும், பிரபஞ்சத்திற்குமான முக்கோண காதல் கதை.

இந்த பயணம் முடியும் பொழுது கணிதத்தில் வரும் ‘X’ variable போல், உங்களுக்கு விடை தெரியும் நேரத்தில் நான் கழன்று செல்வேன்.

நீங்களும், பிரபஞ்சமும் சேர்ந்து முடிவில்லா ஒரு காதல் வாழ்க்கையை, நிறைவான வாழ்வை வாழ்வீர்கள்.

நீங்கள் இதுவரை எத்தனையோ மணி நேரம் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் வாசித்தல் என்று நேரத்தை செலவழித்து இருப்பீர்கள். அடுத்த 69 நாட்கள் எனக்கு செவி கொடுங்கள். நிச்சயம் நீங்கள் யார் என்று உணர்ந்து கொள்ள இந்த பிரபஞ்சம் வழி காட்டும். நம்பிக்கை தான் வாழ்கை.

ஆரம்பிக்கலாமா?

முதலில் ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் யார் என்று உங்களுக்கு என்னென்னவெல்லாம் தோன்றுகின்றதோ அந்த வார்த்தைகளை எல்லாம் ஒன்று விடாமல் எழுதுங்கள்.

6 மணி நேரம் கழித்து மீண்டும் அந்த காகிதத்தை எடுத்து, ஏதாவது புதிதாக எழுத வேண்டும் என்றால் எழுதுங்கள். எழுதியவற்றில் எதையாவது அழிக்க வேண்டும் என்றாலும் அழித்து விடுங்கள். இது போல இரண்டு நாட்களில் நான் யார் என்று சிந்தித்து, குறைந்த பட்சம் 4 முறை அந்த காகிதத்தை அடித்து திருத்தி கடைசியாக ஒரு புதிய காகிதத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தோன்றுகின்றதோ அதனை எழுதி முடியுங்கள்.

இதனை நீங்கள் தான் சுய பரிசோதனை செய்ய போகிண்றீர்கள்.

எப்படி செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் பதிவுகளில் நான் சொல்ல சொல்ல நீங்கள் சரி பார்த்து கொண்ட வாருங்கள்.

வழக்கை மகிழ்ச்சியாக வாழ தான். வாழலாம் வாருங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம்?

குரு பாக்கியநாதன்
9751889306
9840324409
8925765774

https://exactpredictions.in/
குரு பாக்கியநாதனின் ஜோதிட ஆராய்ச்சி இணையதளம் மற்றும் மென்பொருள்கள்

3 thoughts on “நான் (நீ) யார்?

  1. உங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று ஆசை நல்ல தகவல்கள் கிடைக்கும் என்று. பல ஆண்டுகள் வரை நான் யார் என்று தெரியவில்லை விடை கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.. நன்றி ஐயா வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!