நவாம்ச பலன்கள்

நவாம்ச பலன்கள் – மேஷ லக்னம்


தமக்கு தெரிந்த ரகசியத்தை வெளிப்படையாக சொல்வார்கள். விளைவுகளை கண்டு பயந்தாலும் வெளியில் காட்ட மாட்டார்கள்.


விடாப்பிடிவாதம் கொண்டவர்கள். விடாது முயற்சி செய்து காரியம் சாதித்து கொள்வார்கள். ஈடுபட்ட செயல் அனைத்திலும் தனது சக்திக்கு மேற்பட்டு உழைத்து கறை ஏறுவார்கள். பிறரது யோசனையை ஏற்க மாட்டார்கள்.


எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் கண்டிப்பானவர் எனும் பெயர் கிடைக்கும். பிரதி பலன் பார்க்காமல் செயல்படும் இவர்களது உழைப்பை பிறர் பயன் படுத்திக்கொள்வர்


பலராலும் பாராட்டப் படுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். பொது நிகழ்ச்சியில் வாக்குவாதம் செய்வார்கள். சச்சரவுகளும், வதந்திகளும் தாக்கினாலும் கலங்க மாட்டார்கள்.


சமாதனம் பிடிக்கும் என்றலும் முதல் முயற்சி எடுக்க மாட்டார்கள். எதிரியே எதிரில் வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்வார்.


அதிகாரம் மிக்கவர், பணபலம் கொண்டவர்கள் இவர்களை நாடி வருவர். அனுசரித்து சென்றால் அமைச்சர் பதவி, அரசு எந்திரத்தை இயக்கும் அதிகாரம் கிடைக்கும்.


அதிகம் சம்பாதிப்பார்கள். அதே நேரத்தில் அதிகம் செலவும் செய்வார்கள். பரம்பரை சம்பிரதாயாங்களை தொடர்ந்து செய்வர். புகழ் மிக்க ஆன்மீகவாதிகள் இவர்களின் செல்வத்தை அனுபவிப்பார்கள். நெருங்கிய உறவினர்களை வாழ வைத்துப் பார்பார்கள்.


இந்த நாவம்ச ஆண்களுக்கு எல்லா வகையிலும் ஏற்ற பெண் அமைவார். ஆனால் இந்த நவாம்ச பெண்களுக்கு அப்படி அமையாது.


புகழ் பெற்ற குடும்பத்தில் பிறப்பு ஏற்படும், இவர்கள் வளர வளர குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும். பின்னர் மறைந்து விடும். முகத்தில் அடையாள சின்னம் இருக்கும். சிரசிலும் தளும்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.


தங்களிடம் பிறர் கூறும் எதையும் சிரித்து தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள். பிறருடன் இனைந்து சாப்பிட மாட்டார்கள்.


பொதுவாக சொல்லிக் கொள்ளும் படி இளமையில் கல்வி அமையாது. பொது அறிவு அதிகம். புத்தகங்கள் அதிகம் படிப்பார்கள். கல்வியை ஒருவாறு சாமர்த்தியமாக முடிப்பார்கள்,


உடன் பிறந்தவர்களால் உதவி இல்லை. தந்தையைப் போன்ற மனநிலை இருக்கும். தாயார் உடைந்த உறவுகளை இணைப்பார்.


எப்போதும் பணத்தேவை இருக்கும். தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்து அல்லல்பட வேண்டி இருக்கும்.


முப்பது வயதுக்கு மேல் பணம் தாராளமாக புழங்கும். ஆனாலும் சேமிப்பில் கவனம் செலுத்த முடியாது. திட்டமிடாத செலவுகள் கையிருப்பை காலி பண்ணும்.


படிப்புக்கு சம்மந்தம் இல்லாமல் அரசாங்கம் மூலம் வருமானம் கிடைக்கப்பெறும். நவாம்ச லக்னத்திற்கு பத்தாம் இடதில் சூரியன் தொடர்பு ஏற்பட்டால் அரசாங்க தொழிலும், சந்திரன் பத்தாம் இடத்தில தொடர்பு பெற்றால் கல்வி துறையிலும், செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் சீருடை பணியிலும், நோய் தீர்க்கும் பணியிலும் வாய்ப்பு கிடைக்கும். புதன் இருந்தால் கல்வி மற்றும் எழுத்து துறையில் வாய்ப்பு கிடைக்கும்.குரு இருந்தால் மதம் மற்றும் தர்மம் போன்ற துறைகள் அமையும். சுக்கிரன் எனில் படிப்படியான முன்னேற்றம் உள்ள உத்தியோகமும், சனி இருந்தால் விவசாய சார்பும், ராக கேதுகளுக்கு பல தொழில்களும் அமையும்.


இல்லற விஷயத்தில் ஜாதகர் ஆண் என்றால் மனைவியை நம்ப வைப்பதற்கே காலமெல்லாம் பாடுபட வேண்டி இருக்கும். ஜாதகர் பெண் எனில் அழகும் அதிகாரமும் கலந்து இருப்பார். பிடிவாதம் அதிகம் பிடிப்பார்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சூரியன்


மேஷ சூரியன் தேகத்திற்கு வலிவும் பொலிவும் தருவார். பரிசும் பாராட்டுகளும் குவியும். சதா காலமும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். பழைய முறைகளை மாற்றி புதியனவற்றை அறிமுகபடுதுவார்கள். பிடிவாத குணம் அதிகம். எல்லோரும் தங்களை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். தற்பெருமைக்கும் குறைவில்லை. மோசடிகளை அம்பலப்படுத்தி கேவலப்படுத்தவும் செய்வார்கள். வேவுபார்க்கும் வேலையை திறம்பட செய்வார்கள். மேஷ சூரியன் உள்ளவர்களுக்கு அரசாங்க தொடர்பும் அதனால் நன்மையையும் உண்டாகும். எப்போதும் சக்தி வெளியாகிக் கொண்டிருப்பதால் களைப்பு ஏற்படும். நல்ல ஓய்வே சிறந்த மருந்து.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் செவ்வாய்


வழிய சென்று உதவுவார்கள் ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். தலை இட்டு மாட்டிக் கொள்வார்கள். பலரது அந்தரங்கங்கள் அத்துப்படி ஆகும். தேவை இல்லாமல் பேசி விடுவார்கள். வம்பை விலைக்கு வாங்கிய கதை ஆகிவிடும். தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆத்திரம், அவசரம், சந்தேகம் என சர்வ நாசத்தில் மூழ்க நேரும். தற்கொலை செய்து கொள்ளலாமா என்பதற்கு ஒப்பான சூழ்நிலைகளை வாழ்கையில் காண்பார்கள். ஆயுள் தீர்க்கம் தான் எனினும் ஆபத்துகளும், விபத்துகளும் குறிப்பிடும் படி இருக்கும். காயம், தழும்பு நிச்சயம் ஏற்படும்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் புதன்


கூர்ந்த மதியுடையவர்கள். பேனா பிடித்தாலும் வியக்க வைப்பார்கள். மைக் பிடித்தாலும் மெய் மறக்க வைப்பார்கள். அவ்வப்போது சண்டித்தனம் பண்ணும் உடல் நிலை இருந்தாலும் மனவலிமையால் அதையும் எற்று செயல் படுவார்கள். நையாண்டி கலையில் வல்லவராகும் வாய்ப்பை இங்கே உள்ள புதன் தருவார்.


ரசிகர், ரசிகர் மன்றங்கள், வெளி வட்டார தொடர்பு என பிரபலம் கிடைக்கும். நாடெங்கும் பிரயாணம், நாள்தோரும் பாராட்டு என முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைக்கும். இவர்கள் எழுதியோ, பேசியோ ஏடா கூடத்தில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் குரு


தலைவர் என போற்றப் படுவார்கள். எதையும் உறுதியாக பேசுவார்கள். பேச்சுக்கு எதிர்பேச்சே இல்லை. ஆன்மீகம், சமய சடங்குகளை குறைவின்றி ஏற்று நடத்துவார்கள். நன்கொடைகள் குவியும்.


பல இடங்களுக்கு சென்று வருவார்கள். பலதரப்பு மக்களின் உறவும் உண்டாகும்.பலராலும் இவர்களது தேவைகள் நிறைவேறும். பலரும் போற்றும் படி பல நிகழ்சிகளை நடத்துவார்கள். வசதி வாய்புகள் வலிய வந்து சேரும்.


ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தோழிகளை செய்வார்கள். அதில் ஒன்று பொது வாழ்கையை தொடர்பு படுத்தி இருக்கும். ஒரு வழியில் ஆன்மீகவாதியாக தென்பட்டாலும் கேளிக்கை அரங்குகளிலும், சூதாட்ட விடுதிகளிலும் பலருடன் சேர்ந்து உற்சாகமாக வலம் வருவார்கள்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சுக்கிரன்


அலங்கார பிரியர்கள். இவர்களிடம் நல்ல திறமை இருக்கும். கலைகளில் தொடர்பு பெறுவார்கள். ஆனால் எதுவுமே அரைகுறையாக இருக்கும். எல்லாம் அறிந்தவர் போல் காட்டிக் கொள்வார்களே ஒழிய அந்த அளவு ஆர்வம் இருக்காது. செலவுக்கு பணம் வேண்டும் என்ற சமயத்தில் மட்டும் தங்கள் தொழிலில் அக்கறை காட்டுவார்கள். பணம், போரும் கையில் வந்ததும் செலவழிக்கும் வரை அடங்க மாட்டார்கள். ஆடி தீர்த்த பின் அடங்க நேரிடும். உல்லாச பிரயாணங்கள் நிறைய இருக்கும்.


காதல் மன்னர்கள். திருமணத்திற்கு பிறகும் காதலை தொடர்வதால் இல்லத்தில் பிரச்சனைகள் தோன்றும். பெண்களால் பயன்கள் தாராளமாய் கிடைக்கும். கொஞ்சம் கூட யோசிக்காமல் அனுபவிப்பார்கள்.


இவர்கள் திறமைசாலிகள் என்று குறிப்பிட முடியாது ஆனாலும் வாய்ப்புகளும் ஆதரவுகளும் கை கொடுத்து தூக்கி விடும்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சனி


எல்லோருக்கும் ஏற்ற மனிதர்கள் இவர்களே. தன் தேவைகளை விட்டு விட்டு தம்மை நாடி வந்தவர்களை அக்கறையுடன் அணுகுவார்கள். எப்படிப்பட்ட சிக்கலையும் தீர்த்து வைக்கும் அபார ஞானம் வாய்க்கப் பெரும். சமயோசிதமாக செயல் படுவார்கள். பெரிய அந்தஸ்து உள்ளவர்கள் இவர்கள் இல்லம் தேடி வருவர்.அறிவே பிரதானம். அனுபவம் குறைவு என்றாலும் திறமைசாலிகள்.பிறருடைய நம்பிக்கையை மட்டுமே விரும்புவார்கள். சாதாரண மனிதனை புகழ் மிக்கவராக மாற்றும் மாயாஜாலம் அறிந்தவர்கள். இதனால் நன்பர்கள் நாலவட்டதிலும் இருப்பார்கள்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் ராகு


ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், வெகு உயர்ந்த ஸ்தானத்தை பெறுவது உறுதி. பலரும் கீழ்படிந்து நிற்பார்கள். சம்பந்தம் இல்லாதோரும் வணங்கி நிற்பர். இவர்களது மேல்மட்ட தொடர்புகள் மேம்பாட்டு கவுரவத்தை பெற்று தரும். ஆளைப்பார்த்து எடைப்போடாதே என்பது இவர்களுக்கு பொருந்தும். அப்படி ஒரு மாதிரி விசித்திரமாக காட்சி அளிப்பார்கள். செய்யும் தொழிலுக்கும் கிடைத்த புகழுக்கும் சம்மந்தம் இல்லா தோற்றம் வாய்க்கும்,


தனக்கு நன்றாக வரும் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப விருப்பப்பட்ட செயல்களை செய்து அதையே தொழிலாக மேற்கொள்வார்கள். பலமுறை சறுக்கி விழுவார்கள். ஆனாலும் விடமாட்டார்கள். புது புது வழிகளை கண்டுபிடித்து கொண்டிருப்பார்கள். பிறரை அசத்தும் படி எதாவது செய்து திகைக்க வைத்து விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவர் எனலாம். சாதனை மனிதர்களாக ராகுவால் உருவாக்கப்படுவார்கள்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் கேது


எதிர்ப்புகள், இன்னல்கள் என இடையூறுகள் பல தருவார் இந்த மேஷ கேது. சிரித்து பழகி முதுகில் குத்தும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள். மாந்ரீகம், தாந்ரீகம், ரசவாதம் என்று நடைமுறைக்கு ஒத்துவராதவற்றில் நம்பிக்கை கொண்டு கைப்பொருள் இழக்க நேரும். காலமும் வீணாகும்.


கல்வியில் மேம்பட்டு விளங்குவார்கள். பிறர் வியக்கும்படி பேர் பெற்ற மாணாக்கராய் இருந்திருப்பர். எனினும் சம்பாதிக்க இந்த கல்வி உதவாது. சாமர்த்தியமும் போதாது.


கூடுமானவரை பிறருக்கு உதவுவதும், பிறரை மன்னிப்பதும், ஸ்தல யாத்திரைகளுக்கு சென்று வருவதும் நன்மை தரும்.


நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சந்திரன்


பலவிதமான மனிதர்களை காலா காலத்தில் சந்தித்து உறவு கொள்வர். நீண்ட காலம் புது உறவுகள் நீடிக்க செய்யும். காரணம், உதவி செய்ய முன்வரும் குணம் இவர்களது குணமே. துணிந்து உதவுவார்கள். யார் எதை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களை தடுக்க முடியாது. இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரையும் மேலோர், கீழோர் என்றில்லாமல் தன்கட்டுக்கு கொண்டுவரும் திறமை உண்டு. சிறு பிராயத்திலேயே இவர்கள் தம் குடும்பத்தில் முக்கியம் பெறுவார்கள். திருமணத்திற்கு பிறகு தமது குடும்பதிலும் தங்கள் முடிவுகளையே ஏற்கும்படி செய்வார்கள். பெற்றோர் மீது பரிவும் பாசமும் உள்ளோர் எனினும் சூழ்நிலையில் பிரிவுகளும், பிரச்சனைகளும் வரும். எனினும் குறை கூற மாட்டார்கள். பிறர் குறை கூற விடவும் மாட்டார்கள். தாயே தெய்வம் எனலாம். நண்பர்கள் உறவினர்கள் சந்திக்கும் பொழுது ஊர் விசயங்களையே பேசுவார்கள். தன் வீட்டு விசயங்களை வெளியிட மாட்டார்கள். விவரமானவர்கள்.


ஒரு தலைவராகவோ, பலரும் அறிந்த பிரமுகராகவோ உலா வர இந்த மேஷ சந்திர அம்சம் உதவும்.


நவாம்ச பலன்கள் – ரிஷபம்


நவாம்சத்தில் ரிஷபம் லக்னமாக அமையப் பெறுவது மிக நல்லதொரு அமைப்பாகும். அறிவும் அதிர்ஷ்டமும் ஒன்றாக வாய்க்கும்.யூகித்து அறியும் வல்லமை கிடைக்கும். ஆய்வு செய்திடும் வாய்ப்பு கிடைக்கும். மணிக்கணக்கில் பேசும் திறமை உள்ளவர்கள்.


சிறிய பதவி, சிறுதொழில் என்று ஆரம்பம் நிதானமாக இருக்கும். அதுபோலவே படிப்படியான உயர்வுகளும் ஏற்படும்.. திடீர் முன்னேற்றம், பிரபல்யம் என்றில்லாமல் சீரான முன்னேற்றம் நிச்சயம் உண்டு. இளமையில் பல திட்டங்களை போட்டு பார்ப்பார்கள். ஆடை அதை, இதை செய்ய வேண்டும் என்று மணக்கணக்குகளை வைத்திருப்பார்கள். தம் நடு வயதுகளில் சாதித்து காட்டி சுகானுபவங்களில் திளைத்து பின் முதுமையில் ஆன்மீகவாதியாகவும் வாழ வாய்ப்பு உண்டு.


பலரும் விரும்பும் நபராக வலம் வர முடியும். அந்தஸ்து உயர்வு கூட சில எதிரிகளை ஏற்படுத்தி விடும். இதனையும் அனுபவிக்க வேண்டி வரும். நண்பர்களை தேர்வு செய்வதில் மிக்க கவனம் வேண்டும். மதுப்பழக்கமே இல்லாத போதும் நண்பர்களுக்காக மதுபான அரங்குகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.


ரிஷப லக்ன நவாம்சத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தை குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு ஆளாகின்றார்.


பல பெண்களை மயக்கும் ஆண்களும், பல ஆடவர்களை அலைக்கழிக்கும் பெண்களும் ரிஷப நவாம்சத்தில் பிறந்தவர்களே,


இனிக்கும் இல்லறம் இவர்களுக்கு உண்டு. செல்வாக்கு மிக்க குடும்பமாய் திகழும். தன் குடும்பமே முக்கியம் என்பது போல் இவர்கள் செயல்கள் இருக்கும். வருமானத்தை குடும்பத்திற்கு தந்து விட்டு தான் அடுத்த வேலைப் பார்பார்கள். குடும்பத்தில் அனைவருமே கல்வியில் மேன்மை பெற்றிடுவர். கலை குடும்பம் என்று சொல்லும் வகையில் பெயர் எடுப்பார்கள்.


இவர்களுடைய யோகங்களில் மிகசிறப்பானது என்று கவனித்தால் தன்னுடன் படித்தவர்கள், உடன் பிறந்தோர் இவர்களை விட பிரம்மாதமாக முன்னுக்கு வருவார்கள்.


பல விதங்களில் வாய்புகள் தேடி வரும். திறமையை விட அதிர்ஷ்டமே இவர்களுக்கு பலவாறு உதவி நிற்கும். உழைப்பை விட இவர்கள் பெயருக்கே பெரும் வருமானம் கிடைக்கும்.


தங்களுக்கு என்று ஒரு முகவரி, சந்திக்க ஒரு அலுவலகம் என அடைத்துக் கொண்டு காலம் நேரம் தவறாமல்வந்தாலே போதும். வாய்ப்புகள் தானே வந்து நிற்கும். இது உறுதி. அதுபோலவே உதவி தேவைப்படுகின்றது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் தம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். தக்க காலத்தில் கைம்மாறு கிடைக்கும்.


வருமானத்திற்கு கலைத்துறை கை கொடுக்கும் என்பது போல் உணவு, எண்ணைய், பழைய இரும்பு, விவசாயம் போன்ற துறைகளும் உடன் வரும். ஆராய்ச்சி மேன்மை தரும். சட்ட துறையும், திட்ட துறையும் இவர்களது கருத்துக்களை ஏற்று கொள்ளும் காலமும் வரும்.


இவர்களை எளிதில் புறக்கணிக்க முடியாது. ஆனால் சிலரால் ஒதுக்கப் பட நேரும். அதாவது ரிஷப லக்ன பெண்களை பிற பெண்கள் புறம் தள்ளுவார்கள். ஆனால் இவர்கள் மனதில் வைத்திருந்து தக்க சமயத்தில் காலை வாரிவிட்டு பழி தீர்த்துக் கொள்வார்கள். பட்ட வலியை எளிதில் மறந்து விட மாட்டார்கள்.


ஓரளவு பிரபலமான குடும்பத்தில் ஜனனம் அமையும். வளரும் காலத்தில் பெற்றோரை பிரிந்து தனித்து வளர்க்கப்படலாம். இளம் பிராயத்திலேயே இவர்களின் அனுபவமிக்க பேச்சை கேட்டு பலரும் பிரமிப்படைவார்கள்.


விவரம் தெரியவரும் வயதுகளிலேயே வித்தியாசமாக இருப்பார்கள். எடுப்பான உடை அணிந்து கம்பீரமாக தோன்றுவார்கள். ஒளி மிகுந்த கண்கள் எவரையும் கவர்ந்து இழுக்கும்.


உள்ளன்போடு பழகுவார்கள். கூச்சப்படாமல் சகஜமாக இருப்பார்கள். பொதுவான சகிப்புத்தன்மை தென்படும். எப்போதாவது தான் கோபம் வரும். பழகிவிட்டால் பரிந்து பேச தயங்கமாட்டார்கள். ஜாமீன் போடா இவர்களை நம்பலாம். அளவு கடந்த ஞாபக சக்தி உள்ளவர்கள் என்பதால் உடன் பழகுபவர்களை ஞாபகபடுத்திக் கொண்டு பேசுவார்கள். இதுவும் கூட இவர்களை பிரமுகர்களாக்கும்.


கல்வியில் கவனம் இராது. அக்கரையுல்லாமலே பல படிப்புகளை படித்து முடித்து விடுவார்கள். அனுபவ அறிவே கல்வி அறிவைவிட மிகுந்திருக்கும். தக்க சமயத்தில் அனுபவமே ஆசிரியராகும். தான் படித்ததை தான் பெற்ற அனுபவத்தோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வார்கள்.


உடன் பிறந்தோர் இவர்களின் உள்ளத்தை உணர்ந்திரார். உடன் பிறந்தோர் இவர்களின் உதவியை எதிர்பார்கும் நிலை வரலாம்.நிச்சயம் முன் சென்று உதவுவார்கள்.


இவர்கள் இளம் பிராயத்திலேயே சம்பாத்தியத்தில் ஈடுபடவார்கள். பெரிய முதலீடு தேவை படாது. எளிமையான ஒரு தொழிலை ஆடம்பரமில்லாமல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேற்றம் காண்பர். விவசாயம் சார்ந்த விஞ்ஞான பூர்வமான தொழில்களில் மனம் லயிக்கும்.அந்த தொழில்களும் கை கொடுக்கும். பழுது நீக்கும் தொழில்களும் பெரும் பலன் தரும். பல பிரமுகர்களின் ஆதரவு சுலபமாக கிடைக்கும். இவர்களின் அலுவலகத்தில் முக்கிய நபர்களை அடிக்கடி பார்க்கலாம். இதுவே இவர்களின் பலம்.


ரிஷப நவாம்சத்தில் சூரியன்


தயாள குணம் உடையவர்கள். தனது வருமானத்தை உடன் பிறந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். பணச் சிக்கல்களை வெகு திறமையாக கையாள்வார்கள். கௌரவமே பிரதானம் என நினைப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எடுத்த காரியத்தை முடிக்க குறுக்கு வழியில் எதையும் செய்ய மாட்டார்கள்.


விளைவுகளை பற்றி சிந்தித்து அமைதியாகவே தென்படுவார்கள். ஆனால் மிகவும் முன் எச்சரிக்கைகாரர்கள். ஏதேனும் பெரிய செயல்களில் ஈடுபடும் போது மட்டும் சூரியன் போல் சூடாக இருப்பார்கள், ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு துறைகளில் ஈடுபடுவார்கள்.


ரிஷப நவாம்சத்தில் சந்திரன்


தேய்பிறையில் இருந்து வளர்பிறைபோல் வரிசையாகவே தன்னுடைய வளர்சிக்காக எதையும் செயல்படுத்துவார்கள். தன்னை யாரும் குறை கூற கூடாது என்று மிகவும் கவனத்துடன் இருப்பார்கள்.


சமுகத்திற்கு கட்டுபடுபவர்கள் இவர்கள். சமுக கட்டுபாடுகளை மீறி எதையும் செய்வதற்கு அச்சப்படுவார்கள். பூர்வீக தொழிலும், பூமி சார்ந்த தொழிலும் இவர்களுக்கு மிகச்சிறப்பாக கைகொடுக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்று எந்த தொழிலை செய்தாலும் மிகச்சிறப்பாக செயல்படுத்துவார்கள். நான்கு திசைகளிலும் நண்பர்கள் நிறைந்து இருப்பார்கள். நண்பர்களுக்கு செய்யும் உதவிகளால் இவர்களும் பயன் அடைவார்கள்.


இவர்கள் கலை துறையில் ஈடுபட்டால் வெகு பிரபல்யம் ஏற்படும். மதுபானம், திரவ சம்பந்தமான உணவுகளும் லாபம் தரும். குளிர்ச்சி தரும் கருவிகளில் பணம் குவிக்கலாம். ரிஷப சந்திரன் ஜாதகரின் பெயரை புகழடைய செய்திடுவார்.


ரிஷப நவாம்சத்தில் செவ்வாய்


பேச்சில் உறுதி இருக்கும். வாக்கு வலிமை பெறும். அது ஊருக்கும் உறவுக்கும் ஒத்து வராது. நல்ல கருத்துகளை சொல்லுவார்கள். ஏற்க இயலாது என்று உடன் இருப்போர் உதாசீனம் செய்வர். ஆதரவு அற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.


உழைப்பவர்கள்  தம் பங்கை பெற சரியான வழி வகையை கையாள்வர்கள். ஒதுக்கப்பட்ட பெண்களை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து மீட்க முயலுவார்கள். ஆனால் ஒரு சமயம் பாலியல் குற்ற சாட்டுக்கு ஆளாகி நிற்க நேரும். துரோகிகளால் அவதிப்படுவர். பலரும் போற்ற வாழ்ந்தாலும். இன்னொரு புறம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும்.


நினைத்த அளவில் சம்பாதிக்க இந்த செவ்வாய் பகவான் உதவுவார். யார் எப்படி போனால் என்ன என்ற எண்ணமும் சுயநலமும் இருந்தால் மட்டுமே வளமான எதிர்காலம் அமையும். சமுதாயத்தை சீர்படுத்த போகிறேன், புது விசயங்களை தமது தொழிலில் வெளியிடுகின்றேன் என்று பல முயற்சிகளில் ஈடுபடுவது வீணே.


ரிஷப நவாம்சத்தில் புதன்


சாதி மத பேதமில்லாமல் ஏழை-பணக்காரன் என யாவரும் விரும்பும் ஒரு துறை கலைத்துறை. அந்த கலைத்துறையின் வித்தகர் இவர்கள். யாவரும் விரும்பும் நாடகம், நடிப்பு, இசை, ஜோதிடம் எளிய வைத்தியம் போன்ற துறைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள். முதலீடு போடாமலேயே பெரும் பணம் வந்து சேரும். அப்படி சேரும் பணத்தை சேமிக்க தெரிந்தவர்கள். ஆயினும் தன் மனம் போன வழியில் செலவழிக்கவும் தயங்க மாட்டார்கள். கணக்கு வழக்குகளில் திறமை இருக்கும். அது போல ஆட்களை கணித்து பயன்படுத்தும் பக்குவமும் நிரம்ப பெற்றவராவர்.


சாதி சமய உணர்வுக்கு ஆட்படுவார்கள். ஆழ்ந்த ஆன்மீக கருத்துகள் பெற்றிருப்பார்கள். எந்த மதத்தையும் பேதம் பார்க்காமல் வழிபடுவார்கள். காலம் மாறினாலும் இவர்களுடைய அபிப்ராயம் சரி என்றே பேசப்படும். அன்றே சொன்னார்கள், அது போலவேஆனது என்று புகழப்படுவார்கள். ஆரம்ப காலத்தில் வருமானம் பற்றாக்குறையே. வயது ஆக ஆக புகழும் கூடவே வருமானமும் வந்து சேரும். நீண்ட காலம் பயன் தரும் தொழில் அமைந்து விடும். இவர்கள் பண்பாளர்கள், ஆலோசனைக்கு உகந்தவர்கள்.


ரிஷப நவாம்சத்தில் குரு


பெரிய மனிதர் என போற்றப்படும் வாழ்க்கை அமையும். பெருந்தன்மையும், கர்வமும் சேர்ந்த குணம் கொண்டவர்கள். விமர்சிக்க தயங்க மாட்டார்கள். மக்கள் பார்வையில் பதிந்து இருப்பார்கள். தத்துவவாதி, சீர்திருத்தவாதி எனப்\ பெயர் ஏற்படும். எதுவானால் என்ன, தனது குடும்பமே முக்கியம் என்ற தன்னலம்மிக்கவர்கள் என்பதும் நிதர்சனம்.


கோவில், குளங்கள், பூஜை தர்மகாரியங்களில் இவர்களை காணலாம். பெரிய பயணங்கள் பலனும் பணமும் அளிக்கும். இவர்கள் பேச்சுவன்மை பரிசுக்கும், பாராட்டுக்கும் வகை பெற்று தரும்.


நன்கொடைகள் நாலாபுறமும் இருந்தும் வந்து விழும். பிறர் சொத்துகளை எப்படியாவது அனுபவிக்கும் வாய்ப்பும் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். பலர் போற்ற வாழ இந்த குரு வகை செய்வது உறுதி.


ரிஷப நவாம்சத்தில் சுக்கிரன்


பொதுவாக அன்பே வடிவானவர்கள். அனைவருக்கும் பிடித்தமானவர்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். வம்பு தும்புக்கு அஞ்சுபவர்கள். பொறுப்புகளை நம்பி ஒப்படைக்கலாம். விருப்பத்துடன் ஏற்ற்றுக்கொள்வார்கள். செய்தும் முடிப்பார்கள். நாட்டியம், ஓவியம், காவியம் இவைகளில் அபார ஞானம் இருக்கும். சிறு பிரயாதிலேயே இவர்கள் இசை சூழும் இடங்களில் அடைந்து கிடப்பார்கள்.


திருமணம் சகலதையும் மாற்றிவிடும் எனலாம். இல்லறத்தில் இனிமை காணாத ஒரு நிலைமையை இந்த ரிஷப சுக்கிரன் ஏற்படுத்துவார். கணவன் மனைவி உறவில் ஊசல், எதிர்பாராத பிரிவுகள், பணப்பிரச்சனைகள் என துரதிர்ஷ்டம் துரத்தும். மணவாழ்க்கை போராட்டமாகாவோ அல்லது கன்னியர்அமைவது கால தாமதமாகும். காலம் கடந்த பின்னரே உறவுகள் சேர்ந்து மகிழ முடியும்.


ரிஷப நவாம்சத்தில் சனி


குபேரனுக்கும், இவர்களுக்கும் ஓயாத சண்டை என்பதுபோல் செல்வம் பிடிபடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்து விடுவார்கள். வரும் என்ற நினைப்போடு வருவாயை மனதிலே வைத்து இருப்பர். ஆயினும் காசு கரைந்ததும் தான் தெரியும் வரப்போவது வருவாய் அல்ல; பெரும் கடன் என்று.


இளமையிலேயே தந்தை வழி உறவினர்க்கு ஆகாது. எப்போதும் எந்த உறவும் தக்க சமயத்தில் கை கொடுக்காது. நல்ல மனிதர்தான். இருந்தாலும் இவர்களது தோற்றமும் அடக்கமும் இவர்களுக்கு எதிரான விளைவுகளையே தருகின்றது. மற்றோர் இவர்களை மட்டமாகவே எடைபோடுவார்கள். விலக்கி வைத்துவிட்டு வருமானத்தை தன் கைக்குள் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். இவர்கள் நிலையோ அல்லாட்டமே. பணிவும், அடக்கமுமே இவர்களின் துரதிர்ஷ்டத்திற்க்கு வாயில் எனலாம்.


நல்லதுக்கு காலம் இல்லை என்று இவர்களை குறித்து சொல்லலாம். எளிமையும் பணிவும் எப்போதும் நல்லது செய்யாது. துணிவும் தைரியமும் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தி உஷாராக இருக்க வேண்டும். பலருக்கும் பாடமாக இருப்பதை விட தன்னை நம்பிய சந்ததிக்கு உபயோகமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும், தம் வாழ்வின் பிற்காலம் அதாவது எதிர்காலத்தை எண்ணி செயல்படுக.


ரிஷப நவாம்சத்தில் ராகு


அறிவே பிரதானம். பிறர் வியந்து நிற்கும் தனித்திறமை இருக்கும். திட்டமிடாமல் இருப்பார்கள். எனினும் மின்னல்போல செயல்பட்டு மிரள வைப்பார்கள். வசிக்கும் இடத்தையோ, செய்யும் தொழிலையோ, மாற்றிக் கொண்டிருப்பார்கள். வெளி பிரதேசங்களில் சஞ்சாரம் செய்து வருவதில் அலாதி பிரியம்.


ஒரு சமயத்தில் திடீரென எதாவது ஒரு பகுதியில் பிரபல்யம் பெற்று பிரமுகராகி விடுவார்கள். கலைத்துறையில் திடீரென்று புதுமுகமாக வந்து பெரும் புகழ்பெறுவதும் ஒரே சமயத்தில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போவதும் இவர்களே.


கல்வி ஞானம் குறைவே. ஆயினும் புதிய புதிய யோசனைகளையும், விசயங்களையும் வெளியிட்டு அசத்துவார்கள். திட்டங்களை அடிகடி மாற்றுவதே இவர்கள் சரிவுக்கு காரணம். இதில் கவனம் இருந்தால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள்.


ரிஷப நவாம்சத்தில் கேது


பிரமுகர்கள் ஆவார்கள். சுகமான வாழ்க்கை எதாவது ஒரு வழியில் வந்து சேரும். எவரையும் வசீகரிக்கும் ஒரு திறன் இருக்கும். கோமாளி போல் இருந்தாலும் தள்ளி விட முடியாது. வறுமை தொடாதிருக்கும்படி வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.வழிவகையை ஆராயக்கூடாது. நடத்தையில் நேர்மை குறைவே என பேச்சு வந்தாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். சுகமே பிரதானம். கலைகளில் வெற்றி காத்திருகின்றது.


நவாம்ச பலன்கள் – மிதுனம்


மிதுன நவாம்ச லக்னத்தை கொண்டவர்கள் காண்போரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். காலம் அறிந்து காய் நகர்த்தும் சாமர்த்தியசாலிகள். இவர்கள் செய்யும் செயல்களால் பாராட்டப்படுவார்கள். இசை, இலக்கியம், நாடகம், கதை, கவிதை, காவியம் மற்றும் எழுத்து துறைகளில் ஞானம் மிக்கவர்கள், பிறரைப் போல் கேலியாக நடித்து காட்டுவதில் வல்லவர்கள். கவிபாடும் ஆற்றல் உள்ளவர்கள். கேட்போரை வயப்படுத்தும் பேச்சுத் திறன் வாய்கப்பெற்றவர்கள்.


புதுமைகளும், புரட்சிகளும் இவரதுசொற்களில் தெறிக்கும். சீர்திருத்தம் உடனே தேவை என்று முழங்குவார்கள். இவரது வார்த்தையை பின்பற்ற பெரும் கூட்டமே காத்திருக்கும் என்றாலும் பேச்சில் இருக்கும் வேகம் செயலில் இருக்காது. தலைமை ஏற்று முன் நடத்தி செல்ல மாட்டார்கள். வெறும் பேச்சோடு சரி. விமர்சனம் செய்வதிலும், விவரமாக கேள்வி கேட்டு மடகுவதிலும் சமர்த்தர்கள். இவர்களிடம் தர்க்கம் செய்பவர்களை தன்னுடைய பேச்சுத் திறமையால் தலைதெறிக்க ஓடச் செய்திடுவார்கள். பட்டி மன்றம், வழக்காடு மன்றம் போன்ற இலக்கிய சர்ச்சைகள் செய்யும் இடங்களில் இவரைக் காணலாம். வாதப் பிரதிவாதம் செய்வதில் இவருக்கு நிகர் இவரே.


முன் யோசனை இன்றி முடிவேடுப்பவர்கள். உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நினைபவர்கள். இதனாலேயே இவர் செயல்படுத்தும் செயல்கள் அனைத்தும்இறுதியில் குழப்பத்திலேயே முடியும். பிறர் கையை எதிர்நோக்குவார்கள், மற்றவர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டு வேறு காரியங்களில் இறங்கி விடுவார்கள். யோசித்து செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் முடிவே இராது. யோசனைக்கு மேல் யோசனை என்று காலம் கடந்த பின்னரே முடிவெடுப்பர். எல்லாம் கை நழுவி பொய் இருக்கும். உதாரணமாக பெண் பார்க்க சென்றால் சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும். பெண்ணின் படிப்பு, குனாதிசியங்களில் என்று யோசனையில் இறங்கினால் அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்த பின்னரே முடிவை சொல்வார்கள்.


தந்திரமாக சிரித்து பேசி பழகுவார்கள். மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் குணம் உடையவர்கள்.பெண்களை கண்டால் பேருவகை கொள்வார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். குடும்பத்திற்காக எதையும் செய்வார்கள். வசதி மிக்கவர்களின் தொடர்பு இவருக்கு மிக எளிதாக அமைந்துவிடும். பலர் நிறைந்த அவையில் முன் நிற்பவர்கள் ஆவார்கள். சிற்றின்ப அனுபவம் சிறு வயதிலேயே கிடைக்கும். அத்துடன் கேளிக்கை நடக்கும் இடங்களுக்கு அவ்வப்போது சென்று வருவார்கள். வாகன வசதியும், வீடும் கால காலத்தில் அமையும். ஒரே நேரத்தில் இரண்டு வித வேலை செய்வார்கள். உத்தியோகமும் , வியாபாரமும் சேர்ந்து அமையும். மிதுன நாவம்சத்திருக்கு சூரியன் 1௦ ஆம் இட தொடர்பானால் அரசாங்க தொடர்புகள் மூலம் காண்டிராக்ட், கமிஷன் என சம்பாதிக்கலாம்.


சந்திரன் 1௦ ஆம் இட தொடர்பானால் உணவும், கேளிக்கையும் என உற்சாகமாக பணம் சம்பாதிக்கலாம். செவ்வாய் எனில் சமையல துறை, செக்ஸ் வைத்தியர், கிரிமினல் வக்கீல், உலோக வியாபாரங்கள் போன்ற துறைகளில் உலா வரலாம். புதன் எனில் எழுத்து துறையும், கமிஷன் சார்ந்த துறையும் சிறப்பாக அமையும். குரு எனில் பணம் புழங்கும் வங்கி, வட்டிக்கடை, தங்கம், வெள்ளி வியாபாரங்கள் என தாரளமாக பணம் சேர்க்கலாம். சனி 1௦ ஆம் இட தொடர்பானால் கனரக தொழில்களும், வாகனமும், வனம் சார்ந்த துறைகளிலும் பொருள் ஈட்டலாம். ராகு, கேது பத்தாம் இட தொடர்பு பெற்றால் குருவுக்கு குறிபிட்ட தொழில்களே அமையும்.

நாவம்சதில் மிதுன சூரியன்


ஆகாய கோட்டை கட்டி அதில் அரசராக வாழ்வார்கள். யதார்த்தமாக இருக்க மாட்டார்கள். தனது கற்பனையை தானே நம்பி மகிழ்வார்கள். உடல் நிலையம் ஒத்துழைக்காது. புரியாத தொந்தரவுகளால் மன உளைச்சல் ஏற்படும். மகிழ்ச்சியோ, துக்கமோ, வறுமையோ, கடனோ எதையும் மறைக்க மாட்டார்கள். இதனால் இவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விடும்.


ஒன்றையும் உருப்படியாக செய்ய தெரியாது. ஒரே சமயத்தில்.பல வேலைகளை துவக்குவார்கள். தனது தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திரங்கள், ஜோதிடம், கணக்கு போன்றவற்றில் மேன்மையடையலாம். இரட்டை மனப்பான்மையை தவிர்க்க பழக வேண்டும்.


நவாம்சத்தில் மிதுன சந்திரன்


எந்த ஒரு செயல்களிலும் மாற்றத்தை செய்வார்கள். புது புது யுக்திகளை புகுத்துவார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பார்கள். இலக்கியம் படிக்க பிடிக்கும். துப்பறிவதில் கில்லாடிகள். பல மொழிகளை கற்றுக்கொள்வார்கள். உடனடியாக முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக/பாதகமாக பேசுவார்கள்.


நவாம்சத்தில் மிதுன செவ்வாய்


பேச்சிலும், எழுத்திலும் வல்லவர்கள். உடனுக்குடன் பதில் கூறும் திறன் படைத்தவர்கள். உள்ளதை உள்ளபடி கூறாமல் மிகைபடுத்தி பேசுவார்கள். இவர்களிடம் தற்பெருமை பேசுபவர்களை கோபம் கொண்டு அவமானப்படுத்துவார்கள். இவரது வாழ்க்கை ஒருவரது வசதி வாய்ப்புகளை ஒட்டியே அமையும். யாரை ஒட்டி வாழ்ந்தாலும் அவரை மட்டம் தட்ட தயங்க மாட்டார்கள். இதனால் உயர்வும், தாழ்வும் மாறி மாறி ஏற்படும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது போல் ஆகிவிடும்.


உறவுகள் கலகம் ஏற்படும். ரத்த சம்பந்தமான உறவுகள் கலகலப்பாக இருக்காது. வீடு, நிலம் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும். சமாதானதிற்கு இடம் இல்லாமல் போய்விடும். நிறைய பயணங்கள் மேற்கொள்வார்கள். யாருக்கும் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று வருவார்கள். இதனால் நன்மையே ஏற்படும்.


நவாம்சத்தில் மிதுன புதன்


தோல்விகள் வழக்கள் என எதற்கும் கவலைப்படாமல் நிம்மதியாக தூங்க கூடியவர்கள். பதற்றமோ பயமோ இவர்களிடம் இருக்காது. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியம் கொண்டவர்கள். மற்றவர்களால் ஏமாற்றபடுவார்கள். உடன் இருந்தவர்களே இவர்களுக்கு எதிராக கடை போடுவார்கள். ஜாமீன் போட்டாலும் பொறுப்பை ஏற்க அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.


கிரிமினல் வக்கீல் ஆகவும் அதே நேரத்தில் ஜீவகாருண்ய சங்கத்திலும் இருப்பார்கள். கடனோ, வரவோ பணம் வந்தால் கண்டபடி செலவு செய்வார்கள். கடன் கட்ட முடியாமல் தடுமாறுவார்கள். ஒரு முறையாவது நீதிமன்றம் செல்ல நேரும்.


நவாம்சத்தில் மிதுன குரு


நம்பிக்கைக்கு ஏற்றவர்கள். அனால் பிறர் செய்த நம்பிக்கை துரோகத்தால் அவதிப்படுவார்கள். பலரை வாழ்வில் ஏற்றி விட்ட எனியாக இருப்பார்கள். உயரே போனவர்களால் தூக்கி வீசப்பட்ட அறிவாளி என்று இவர்களை கூறலாம்.


கலைகளில் மேன்மை உண்டாகும். புது புது நுட்பங்களை கையாளுவார்கள். தொழில் நுட்ப மேதை என்று புகழப்படுவார்கள். பெண் சேர்கையால் சச்சரவுகளும், பொருள் இழப்புகளும் உண்டாகும். ஒரு முறை பெரும் விபத்துக்குள்ளாவார்கள்.


நவாம்சத்தில் மிதுன சுக்கிரன்


தான் சந்தோசப்பட்டால் உடனே இருப்போர் எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்துவார்கள். துயரப்பட்டால் வீட்டையே துக்ககரமாக்குவார்கள். சாதியும், சமயமும், ஆன்மீகமும் பேசுவார்கள், கூடவே சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் என கலைத்துறையிலும் கைதேர்ந்தவர்கள். அரசியலை அலசுவார்கள். இனிமையாக பேசுவார்கள். நாரச நடையிலும் வெளுத்து வாங்குவார்கள். மிதுன நாவம்சதில் சுக்கிரன் இருப்பவர்கள் சகலகலா வல்லவர்கள்.


நவாம்சத்தில் மிதுன சனி


பிறந்ததில் இருந்தே இவர்களின் பெற்றோர்கள் பல சிக்கல்களை சந்திப்பர். குடும்ப சூழ்நிலை காரணாமாக படிப்பை நிறுத்திவிடலாமா? வேலைக்கு சென்று சம்பாதிக்கலாமா? என்ற கேள்விகள் எழும். இந்த பக்குவம் பின் காலத்தில் பயன்படும். காரியத்தில் முழு கருத்தாகவும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமலும், பிறரை இகழாமல் இருக்க வேண்டும் என முழுக்கவனத்துடன் செயல்படுவார்கள். பாதி வயதுக்கு மேல் முன்னேற்றம் காண்பார்கள். சுய சம்பாத்தியதால் நிலையான சொத்துகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்.


நவாம்ச பலன்கள் – கடகம்


நவாம்சத்தில் கடக லக்னம்


அவசரபடாத நிதானமான குணம் கொண்டவர்கள். தன் எதிர்பார்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகுவார்கள்.உயர்கல்வியில் ஊசலாட்டம் வரும். தொழிற்பயிற்சிகள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். சம்மந்தமற்ற வேளைகளில் ஈடுபடநேரும். உடன்பிறந்தோர் வகையில் பெரிய உதவிகள் கிடைக்காது. எந்த சிக்கலையும் தீர்க்க முன்வருவார்கள். விளையாட்டுதுறை, போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு இருக்கும். பல நிகழ்சிகளை நடத்தி எளிதில் பிறரை மலைக்க வைத்து விடுவார்கள்.


கையிருப்பு கரைந்து கொண்டே இருக்கும். குடும்பத்தால் கடன் வந்தடையும். சொத்து என்று பார்த்தல் காலாகாலத்தில் வந்து சேரும். அதுபோலவே நில்லாமல் போகும். எனினும் மீண்டும் அவற்றினை ஏற்படுத்தி காட்டுவார்,


தொழிலைப் பொறுத்தவரை பொதுவாக உணவு, ரசாயனம் நன்மை தரும் தொழில்கள் ஆகும். சரக்குகளை அங்கும் இங்கும் அனுப்பும் முகமை தொழில்கள் பலன் தரும். சினிமா, அரசியல் நீண்ட கஷ்டத்திற்கு பிறகு பெயர் தரும்.


கடக நவாம்ச பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். சுறுசுறுப்பும் திறமையும் மிக்கவர்கள். குடும்ப பொறுப்பை உணர்ந்தவர்கள். தரமான பொருள்களை வாங்குவார்கள்.கடக நாவம்ச ஆண்கள் மனைவியின் கனவுகளை நனவாக்க காலம் முழுவதும் முயற்சி செய்வார்கள். அவற்றில் பல முடியாமல் போக வாய்ப்பு உண்டு. கணவன், மனைவி இருவரில் ஒருவரின் பெற்றோர் உடன் இருக்கும் படி இருக்கும். இது நல்லதே.


நவாம்சத்தில் கடக குரு


இன உணர்வு மிக்கவர்கள், பெற்றோர் முன் பணிவும், அடக்கமும் காட்டுவார்கள். அடுத்தவர்கள் எல்லாம் துச்சமே. தனக்கு தெரியாமல் யாரும், எதையம் செய்யக் கூடாது என்று நினைபவர்கள். தன்னை நம்பி நிற்பவர்களுக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள். கொள்கைகளுக்கு என்று இல்லாமல் வேண்டியவர்களுகாக கட்சி மாறும் அபிமானிகள்.  ஆன்மீக நம்பிக்கையுடன் பிற மத நம்பிக்கையும் சேரும். தேகம் போகத்தை விரும்பும். ரகசியமாக தனது இச்சைகளை தீர்த்துக் கொள்வார்கள். பயணங்கள் பல இருக்கும் அதனால் பயனும் இருக்கும்.


நவாம்சத்தில் கடக சந்திரன்


தரித்திரத்தில் இருந்து மீண்டு சரித்திரம் படைபவர்கள். இவர்களை கைதூக்கி விட பலர் முயற்சி செய்வர். கமிஷன் வாங்கும் வீட்டு தரகராக இருந்து பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக மிளிரும் நபர்கள் இவர்களே. மக்களுடன் நேரடி தொடர்புடைய உணவு, உடை, வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கு அம்சங்கள் போன்றவை வருமானத்தை பெருகும்.


இவர்கள் திருமணம் ஒரு பரபரப்பான நிகழ்வாக அமையும். அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ள திருமணம் அமைய வாய்ப்பு அதிகம்.


நவாம்சத்தில் கடக சனி


சாண் ஏற முழம் சறுக்கும். தாய், தந்தையால் பெரிதாக உதவிகள் இல்லை. திருமணத்தாலும் பெரிய சந்தோசம் இல்லை. தன் அந்தஸ்துக்கு குறைதவர்களுடன் வாழும் நிலை உருவாகும். உறவுகள் நாலாதிசையிலும் சிதறிவிடும். ஏக்கம் மிக்க வாழ்கையை ஏற்க வேண்டி வரும்.


நவாம்சத்தில் கடக ராகு


பிரமுகராவார். பிரபல்யம் உண்டாகும். நாசம் அறிந்தவர்கள். எல்லா செய்திகளையும் எடுத்துரைப்பர். இவர்களுக்கு தெரியாததே இல்லை என்று பிறர் நினைக்கும் அளவிற்கு வாழ்வார். வெகு பிரயாணங்கள் உண்டு. கல்வி துறையில் புகழ் பெருகும். பலரது பணத்தை முதலீட்டில் போட்டு நிறுவனங்களை நிறுவும் வாய்ப்பும் இருக்கிறது, ஒவ்வாமை நோய் ஓயாமல் தொல்லை தரும்.


நவாம்சத்தில் கடக கேது


இவர்களை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. எதிலும் உடனடி பதில் கூறி அசத்துவார்கள். எப்படி என வியக்க வைப்பார்கள். பாராட்டுகள் தொடரும். சினிமா, சங்கீதம் என மேடை வாய்புகள் கிடைக்கும். நினைத்தே பார்த்திராத அளவுக்கு விளம்பரம் கிடைக்கும். இல்லறம் ஏனோ தானோ என்று நடைபெறும்.


நவாம்ச பலன்கள் – சிம்மம்


நவாம்சத்தில் சிம்ம லக்னம்


சுயமரியாதை கொண்டவர். தன்னை உயர்வாக கருதுவார். தனக்கு கீழ் உள்ளவர்களை உதாசீனப்படுத்துவார். மேம்பட்டவர்களுடன் சேர்ந்தால் தானும் அதுபோல ஆக வேண்டும் என்று முயற்சி செய்வார். அரசியல் தொடர்புகள் உண்டாகும். அரசாங்க பதவியும் உண்டாகும். தனது வயதுக்கும், தகுதிக்கும் மேம்பட்ட பதவிகளை அடைய முயற்சி செய்வார்கள். கௌரவமான பதவியை அடைய கௌரவ குறைச்சலான வழிகளையும், ஆட்களையும் அணுகும் குணம் கொண்டவர்.


இந்த ராசி பெண்களுக்கு ஆண்களைப் போன்ற பாவனை இருக்கும். படிப்பு, செல்வாக்கு அடைவது உறுதி. அகம்பாவம் இருந்தாலும், பெருந்தன்மையும் இருக்கும். சிறிய தவறுகளை கண்டுகொள்ள மாட்டார்.


நவாம்சத்தில் சிம்ம சூரியன்


தனித்தன்மை வாய்ந்தவர். பலர் முன்னிலையில் பிரகாசிப்பவர். தனக்கு பிரியமான விசயங்களையே யோசித்துக் கொண்டிருப்பார். சிறு செயல்களில் விருப்பம் இருக்காது. மேலதிகாரம் செய்வார். வேலை முடிந்ததும் உரிய கூலியை உடனே கொடுக்க மாட்டார்.


நவாம்சத்தில் சிம்ம சந்திரன்


முதல்வர். எங்கும், எதிலும் பொறுப்புகளை நிறைவேற்றுவார். இவரது உத்தரவுக்கு பலரும் காத்திருப்பர். பொறுமையும், விடாப்பிடியும் இவருக்கு உறுதுணை. போட்டியில் வெல்வார். போட்டியாளர் இல்லாத சமயங்களில் சோம்பேறியாக காலம் கழிப்பார். ஆசைபட்டதை அடைந்தே தீருவார். ஒரு பொருளின் மீதோ, பதவியின் மீதோ கண்வைத்து வலம் வருவார். அவற்றை அடைந்தே தீருவார். அலட்சியமாக பேசுவார். உடுத்திய துணி கசங்காமல் வேலை செய்வார். தனது பெயரை விளம்பரப்படுத்துவார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு தாராள உதவிகள் உபசரணைகள் செய்வார்.


நவாம்சத்தில் சிம்ம செவ்வாய்


தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆத்திரப்படுவார். இருப்பதை தூக்கி எறிவார். நிரந்தர வருமானத்தை இழப்பார். காதலை இழப்பார். நட்பை பிரிவார். உற்றம் சுற்றதிற்காக உழைப்பவர். அடுத்தவர்களுக்காக தயங்காமல் செலவு செய்வார். சிலருடைய எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக பயன்பாடுவார். உதவியை எதிர்பார்க்கும் உறவுகள் இவரின் கண்டிப்புக்கு அஞ்சி விலகி ஓடுவார்கள்.


நவாம்ச பலன்கள் – கன்னி


நவாம்சத்தில் கன்னி லக்னம்
நல்ல பிள்ளைகளாக வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்கள் யார் என்றால் அது கன்னி நாவம்சகாரர்கள் என்று சொன்னால் அது மிகையாகது. கற்பனை சக்தி மிக்கவர். கலைகளில் ஈடுபாடு கொண்டவர். வார்த்தை ஜாலம் தெரிந்தவர். புத்திசாலித்தனம் கொண்டவர். பிறரது ஆலோசனை தேவைப்படாது. ஆய கலைகளில் எதாவது ஒன்று இவருக்கு கை கொடுத்துவிடும். பெரும் பணம் சேர்த்து விடுவார். வாகன யோகம் இளவயதிலேயே இருக்கும்.


பிறரது சொத்து உபயோகித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தனக்கு வேண்டியவர்களின் அதிகாரங்களை தந்திரமாக உபயோகித்து கொள்வார்.பக்க பலமாக இருப்பதாக காட்டிக்கொள்வார்.


சமுதாயத்தில் பிரபலம் ஏற்படும். செய்யும் தொழிலில் முதலிடத்துக்கு வந்து விடுவார்கள். வேலை ஆட்கள் இல்லாமல் நேரிட்டால் தானே களத்தில் இறங்கி வேலை செய்வார்கள். தெரிந்த தொழிலையே செய்வர்.


பணம் சம்பாதிக்க கஷ்டப்பட்டாலும், தன் சுகத்திற்காக செலவழிக்க தயங்க மாட்டார். பெண் சுகமே பிரதானம். பல பெண்களை நேசிப்பார். பெண்களும் இவரிடம் ஈர்க்கப்படுவர். ஒரு புறம் கோவில், குளம் என்று ஆசார சீலராக இருப்பார். மறுபுறம் கிளப், உல்லாசம் என்று ஆனந்தமாக இருப்பார். பிறர் மனை நாடும் சந்தர்பங்கள் ஏற்படும். தவிர்த்தல் புண்ணியம்.


எச்சரிக்கை மிக்கவராததால் உடல் நலத்தில் அக்கரை காட்டுவார். குடல் சம்பந்தமான நோய்கள் பல கோளாறுகளை வரவழைக்கும்.


செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்திருப்பார். கஷ்டப்பட்டாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். இக்கட்டான நிலைமைகளை வேகமாக கடந்து வருவார். கிடைப்பதை கொண்டு திருப்தி கொள்வார்.


பள்ளி பருவம் சிறப்பாக இருக்கும். உயர் கல்வி பயிலும் காலத்தில் தடைகள் பல உண்டாகும். கல்லூரி செல்லாமல் தபால் வாயிலாக, வேறு பட்டய படிபுகழிலோ ஈடுபடுவார்.


பண உதவி தாரளமாக கிடைக்கும். வங்கியை சரியான விதத்தில் பயன்படுத்துவார். வீடு, வாகனம், சொத்து என வரிசையாக திருமணத்திற்குப் பிறகு வந்து சேரும்.


நவாம்சத்தில் கன்னி சூரியன்


லாபம் நஷ்டம் பார்த்து பழகுவார். காரியம் முடிந்த பின் காணாமல் பொய்விடுவார். வீடே சொர்க்கம், குடும்பமே பிரதானம் என்று இருப்பார்.


நடப்பதையே நினைப்பார். கற்பனையில் மிதக்க மாட்டார். தன் காரியத்திலேயே கண்ணாக இருப்பதால் நட்பு சிறக்காது. தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.


நவாம்சத்தில் கன்னி சந்திரன்


இவர்களால் முடியாத காரியமே இல்லை எனலாம். பல தொழில்களை ஒரே சமயத்தில் செய்வார்கள். மூளை பலம் மிக்கவர்கள். நிபுணர் என்று பெயர் வாங்குவார்கள். விசயத்தை புரிந்து நுணுக்கமாக செயல் ஆற்றுவார்கள். உடல் உழைப்பு குறைவே. ஏகப்பட்ட பிரயாணங்களால் உடல் அசதியும் அவதியும் உண்டு.

இவர் வந்து பார்த்தால் போதும், நிலைமைகள் சீராகும் என்ற பெயர் இருப்பதால் அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நண்பர்கள் நாலாப்பக்கமும் இருப்பர். பெண்கள் நட்பு என்றாலே பேரின்பம் தான். வாழ்நாள் முழுக்க பெண் நண்பர்களை வைத்திருப்பார். நட்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். காதல் பிடிக்காது,


உணவு, மருத்துவம், எடுத்துரைத்தல் போன்றவற்றில் வருமானம் அடையலாம். ஜோதிட நுட்பம் உணர்ந்தவர். நல்ல ஞாபக சக்தி இருக்கும். பலருடைய அந்தரங்க விஷயங்கள் தெரிந்து இருக்கும்.


நவாம்சத்தில் கன்னி செவ்வாய்


வசதியுள்ளவர்களை உறவாக்கிக் கொண்டு சௌக்கியமாக இருப்பார். உயர்ந்த நிலைக்கு வர பல காரியங்களை செய்து பார்ப்பார். நண்பர்களால் பிரச்சனைகளுக்கு ஆளாவார். இவரது மனம் கவர்ந்த நண்பர்கள் விரைவில் விரோதியாவர்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும். இவர் உலக நட்பை புரிந்து கொண்டால் நல்லது.


நவாம்சத்தில் கன்னி புதன்


இவருக்கு நிகர் இவரே. எந்த விசயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். படிக்கும் காலத்தில் முழு புத்தகத்தையும் எளிதில் படித்து முடித்து விடுவார். கேள்வி ஞானம் மிக்கவர். உலக நடப்பு தெரிந்தவர். ஆனாலும் எதையும் தொடர்ந்து செய்ய மாட்டார். புதுமை விரும்பி. மாறுதல்களை தானே ஏற்படுத்திக் கொள்வார். இடத்தையும் தொழிலையும் இஷ்டப்படி மாற்றுவார். அதனால் நிலையான வருமானத்தை இழப்பார். மற்றவர்கள் தலையிட முடியாத விசயங்களை எடுத்துக் கொண்டு அனாசியமாக சாதித்து காட்டுவார், சரியான வியாபாரிகள் உடன் இருந்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இல்லை என்றால் பெரும், புகழும் மட்டுமே மிஞ்சும்,


நவாம்சத்தில் கன்னி குரு


விஞ்ஞானியா இல்லை மெய்ஞ்ஞானியா என்று வியக்க வைக்கும் அறிவாற்றல் கொண்டவர். மத விசயங்களை அலசி ஆராய்வார். குற்றம் குறைகளை விமர்சிக்கும் பொது கடவுள் நம்பிக்கை அற்றவர் போல் தோன்றும். எல்லா மதமும் சம்மதமே.


சிலரை வெகுவாக நேசிப்பார். ஆனால் எல்லாம் எதிராக பொய் திரும்பும். எவரையும் உரிய இடத்தில் வைத்து பழகினால் தொல்லை இருக்காது. இவரது குடும்பத்தில் உண்டாகும் குழப்பம்அனைவரையும் திகைக்க வைக்கும்.


நவாம்சத்தில் கன்னி சுக்கிரன்


வலியோரால் வம்பும், எளியோரால் ஏற்றமும் காண வைப்பார். தகுதிக்கு குறைவானவர்களுக்கு இவரே நாயகன். வியாபார திறமை இயல்பாகவே இருக்கும். எளியவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஜனரன்சகமான தொழில்கள் ஏற்றம் தரும்.
நவாம்சத்தில் கன்னி சனி


இளமையில் சாதாரணமாகவும் பாதி வயதுக்குமேல் விறுவிறுவென உயர் நிலைக்கும் வருவார். தன்னை சுற்றி நடக்கும் விசயங்களை அராய்ச்சி மனப்பாங்குடன் கவனிப்பார். கல்வியையும் உணர்ந்து படிப்பார். அனுபவமே இவரை முன்னுக்கு கொண்டு வரும். பெயரும், புகழும், உயர் பதவியும் அடைவார்.


சாதரணமாக கலந்து பழக மாட்டார். இதனால் கேலிக்கும் ஆளாவார். தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பார். பெற்றோருக்கும் வீட்டு சூழ்நிலைக்கும் பொருந்தி வரமாட்டார். பெரிய அந்தஸ்தில் இருந்தால் கூட கொஞ்சகாலம் வறுமையில் வாட நேரும். வசதி வாய்புகள் பெருகினாலும் அதை அனுபவித்து மகிழ முடியாது.


நவாம்சத்தில் கன்னி ராகு


விவரமாக செயல் படுவார். ஆளுக்கு தகுந்தபடி பேசுவார். பேரம் பேசும் குணம் இருக்கும். எதையாவது எதிர்பார்த்தே பழகுவார். தரகு தொழில், ரியல் எஸ்டேட் தொழில் கைகொடுக்கும். சொத்து தொடர்பாக வழக்குகளை சந்திக்க நேரும். பிரயாணங்கள் அதிகம்.


நவாம்சத்தில் கன்னி கேது


குழப்பத்துடன் கானபடுவார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். வீண் பேச்சு சச்சரவில் முடியும். வசதியான வாழ்க்கை அமையும். ஆனால் நிர்வாக திறமை இல்லாமல் சொத்துகள் பலவற்றை விற்க நேரும்.


நவாம்ச பலன்கள் – துலாம்

நவாம்சத்தில் துலாம் லக்னம்


சாமர்த்தியம் மிக்கவர். முதலீடு செய்ய யோசிப்பவர். நண்பர்களும், உறவினர்களும் இவரதுயோசனையை கேட்டு கிடுகிடுவென முன்னேற்றம் அடைவர். அப்படி முன்னேறியவர்கள் இவரிடம் நன்றி பாராட்ட மாட்டார்கள். மாறாக இவருக்கே புத்தி சொல்வார்கள். பிறர் தந்த துன்பங்களை மறந்து சமாதானமாக இருக்க விரும்புவர். ஆனால் இந்த மறப்போம், மன்னிப்போம் கொள்கையால் பிரயோஜனம் இருக்காது.


சாமர்த்தியமாக சம்பாதித்து விடுவர். சுகபோகத்திற்கே செலவழிப்பவர். நல்ல எடுப்பான தோற்றம் இருக்கும். ஆடம்பரமான துணிமணிகள், அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் என்று உயர்ந்த பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குவார். கொஞ்ச நாளில் தூர எறிந்துவிடுவார்.


இவரது எளிய தோற்றமே காண்போரை வசீகரிக்கும். மலர்ந்த முகத்துடன் காட்சி அளிப்பதும் இவரது இயல்பு. மேற்கொண்ட பொறுப்பை அக்கறையுடன் நிறைவேற்றுவார். அடுத்தவர் தலையீட்டை அனுமதிக்க மாட்டார். சராசரி நபராக இருக்க மாட்டார். தனித்தன்மை இருக்கும். இவரது பாணியைபிறர் கடைபிடிப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.


இவரது சாமர்த்தியம் பிறருக்கு பயன்படும் என்பதால் ஆதாயமும், ஆலோசனையும் இணைந்த கன்சல்டிங் தொழில் துவங்கலாம்.


திருமணத்திற்கு பிறகு சம்பாத்தியம் அதிகரிக்கும், இருந்தாலும் செலவும் கூடி வரும். மனைவி வழி உறவில் அன்பும் ஆதரவும் உண்டு. மனைவிக்கு சுதந்திரம் குறைவே. சபலபுத்தி உடையவர். பெண்கள் வட்டாரத்தில் பேசப்படுவார். இருதாரமோ வெளியில் சிநேகிதமோ ஏற்படும். மனைவிக்கு கர்ப்ப சம்மந்தமான நோய்கள் ஏற்படும்.


துலாம் நவாம்ச பெண்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கணவன், பெற்றோர் தவிர பிற ஆடவர்களால் ஆபத்தே அதிகம். பலத்காரதிற்கும், ஏமாற்றதிற்கும் ஆளாக நேரும். ஆண்களுடன் தனித்து இருபதும், அதிகம் பேசுவதும் தவறு. அது துயரத்தில் வீழ்த்தி விடும்.


தகபனாருக்கு ஆயள் தீர்க்கம். ஜாதகருக்கு பாரமாக இருக்க மாட்டார். கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுவார். தாயாரின் பற்றுதல் குறைவே. ஒரு சிலருக்கு கல்வி முடியும் முன்னே தாயாரின் காலம் முடிந்து விடும்.


நவாம்சத்தில் துலாம் சூரியன்


எதிர்காலத்தை கணித்து வரும்முன் செயல்படுவார். தனது விருப்பபடியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.


இவரது விசித்திரமான போக்கு நண்பர்களையும் உறவினர்களையும் விலகும். ஆபதுக்குதவாத நண்பர்களை பெற்றிருப்பார்.


பணம் சம்பாதிக்க சிரமம் தான். தவறு செய்யும் தைரியம் இருக்காது. நீதி, நேர்மை, நியாயம் என்று விஸ்தாரமாக பேசுவார். ஆசைகளை மறைக்க தெரிந்தவர்.


நவாம்சத்தில் துலாம் சந்திரன்


பழகுவதற்கு ஏற்றவர். சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வார். யாரையும் எளிதில் நம்பி விடுவார். அதிலும் புகழ்ச்சிக்கு ஆசைபடுவது அதிகம். மற்றவர்களை கேட்டே எதையும் செய்வார். யாரையாவது நம்பி விட்டால் என்ன பிரச்சனை வந்தாலும் அந்நபரை விட்டுக் கொடுக்க மாட்டார்.


நிர்வகிக்கும் திறமையுள்ள மனைவி அமைந்தால் தான் குடும்பம் சீராக இருக்கும். இவரது போக்கில் குடும்பத்தை விட்டு விட கூடாது. மற்றபடி பலரால் அறியப்பட்ட மனிதராக இருப்பார்.பொழுது போக்கு துறைகளிலும், சின்ன திரை, பெரிய திரைகளிலும் இவரை காணமுடியும்.


நவாம்சத்தில் துலாம் செவ்வாய்


பெண்களின் பெருந்தொண்டர் மலருக்கு மலர் தாவுவார். சிறுவயதிலேயே பெண்களால் கவரப்படுவார். காதலில் பிடிவாதமாக இருந்து கைபிடிப்பார். கொஞ்ச நாளில் அலுத்துப் பொய் வேறு பெண்ணையும் சேர்த்துக் கொள்வார். முற்றும் துறந்த முனிவர் போல்; வேதாந்தம் பேசுவார். எல்லாம் வெளிவேசமே.


ஒரு முறையாவது காவல் துறையினரிடம் மாட்டுவார். தலைமறைவாகவோ, பிணையிலோ சில காலம் இருப்பார். ஊர் உலகம் தன்னைப் பற்றி பேசும் படி நடந்து கொள்வார்.


நவாம்சத்தில் துலாம் புதன்


சிறந்த கல்வி ஏற்பாடும். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்பார். பள்ளி செல்லும் குழந்தைகளிடம் வாஞ்சையாக இருப்பார்.நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஆசை படுவார். வசதி வாய்ப்பு, அந்தஸ்து பார்க்க மாட்டார். ஜாதகருக்கு திருமணம் பல இடர்பாடுகளுகிடையே நடக்கும். நண்பர்கள்துணை வரமாட்டார்கள். நல்ல கூட்டாளிகளும் அமைய மாட்டார்கள். தனியாக எதையும் செய்ய துணிவு இருக்காது. சராசரி வாழ்க்கை அமையாத கல்வியாளார்.


நவாம்சத்தில் துலாம் குரு


ஐந்தாறுபேர் மத்தியில் சத்தம் கேட்டால் இவர் அங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். கோபம் வந்தால் தன்னை மறந்து விடுவார். நிதி நிலையையும் மறந்து பணத்தை காலி செய்து விட்டு தான் அமைதியாவர்.


புத்தகபிரியர், விமர்சிக்க தெரிந்தவர். சினிமா உலகில் நண்பர்கள் அதிகம். இவரிடம் பழகியவர்கள் இவருக்கு எதாவது ஒருவகையில் பணம் கொடுத்து விடுவார்கள்.


பெண்கள் மூலம் இழப்புகள் அதிகம். பொன்னையும் இழப்பார்., தன்னையும் இழப்பார்.வயதுக்கு மூத்த பெண்களால் வாலிபத்தை பறிகொடுக்க நேரலாம். துலாத்தில் உள்ள குரு ரகசிய எதிரிகளை ஏற்படுத்தி வைத்து விடுவார்.


நவாம்சத்தில் துலாம் சுக்கிரன்


ஒரு விரும்பத்தக்க அம்சம் இது. புகழேனியில் ஏற்றிவிடும். பிறரால் முன்னுக்கு வருவார்.பழகுவதற்கு இனிமையானவர். பழையனவற்றை மறக்காமல் நன்றியுடன் இருப்பார். சிறந்த தொழில் நுட்ப அறிவு உடையவர். கலைகளில் சிறந்தவர். அலங்கார, ஆடம்பர தொழில்நுட்பம் தெரிந்தவர். எவரிடமும் இன்முகமாக பழகும் தன்மை இருப்பதால்வியாபாரம் செய்தால் வெற்றியாக நடக்கும். திருமணம் யோகம் தரும்.


நவாம்சத்தில் துலாம் சனி


கடவுள் நம்பிக்கையே கைகொடுக்கும். மனிதர்களால் சரியான நேரத்தில் கைவிடப்படுவார். உயர்வையும் தாழ்வையும் அனுபவித்தே ஆக வேண்டும். சுமாரான அந்தஸ்தை அடைவார். தீடீர் வீழ்ச்சியையும் அனுபவிப்பார்.


நவாம்சத்தில் துலாம் ராகு


விபத்துகளை உண்டாக்குவார் துலாம் அம்ச ராகு. மாந்த்ரீகதில் ஆர்வம் இருக்கும். தொழில்கள் செய்து நஷ்டப்படுவார். வருமானம் முறையான வழியில் வராது. துணிந்து வாக்கு கொடுப்பார். உரிய நேரத்தில் வராமல் மறைந்து கொள்வார். பலராலும் குறிப்பாக பெண்களால் தொல்லைகள் தொடரும்.


நவாம்சத்தில் துலாம் கேது


எதாவது ஒரு கலையில் சிறப்புடையவராக இருப்பார். பொழுது போக்கு அம்சங்கள் சரித்திர பிரசித்திபெற்ற இடங்களை கொண்டு வருமானம் பெறலாம். திரையுலகத்திற்கு ஏற்றவர், வாய்புகள் காலம் கடந்தே வரும். தன் வீட்டில் இருப்பதை விட வெளியிடத்தில் இருப்பதே அதிகம். ஜோதிடம், சாஸ்திர ஞானம் பெற்றிடுவார்.


நவாம்ச பலன்கள் – விருச்சிகம்


நவாம்சத்தில் விருச்சிக லக்னம்


விடாமுயற்சி கொண்டவர். புத்திசாலிதனமே இவரது மூலதனம். பார்ப்பதற்கு குழந்தைதனம் கொண்டவாராக தெரிவார். குறும்பு சேஷ்டைகள் செய்வார். ஆசைகளை வெளியே காட்டிகொள்ளாமல் பழகுவார். காரியமாகத்தான் வந்திருக்கின்றார் என்று தெரியாது. ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பார். இவரை கூட்டு சேர்த்து கொள்ளவும் முடியாது. விட்டுவிடவும் முடியாது.


இவரை சீண்டாமல் இருப்பதே நல்லது. கலகப்படுத்திவிடுவார், ரகசியமாக பிறரை தட்டி விட்டு காரியத்தை முடித்து விடுவார். வெளியில் தெரியாமல் முடித்து விடும் சாமர்த்தியசாலி.


இளம் பிரயாத்தில் நோய் நொடிகள் இருந்தாலும் எதிர்காலத்தில் நோயோர்ர்`நோயற்ற வாழ்வே ஏற்படும். முதுமையிலும் சுருசுருபாக தொழில் செய்வார். வருமானம் நிலையாக இருக்காது. வீட்டு நிலவரத்துக்கும், கையிருப்புக்கும் சம்பந்தம் இருக்காது. உத்தியோகம் பார்த்தல் சில சமயம் பதவி விலக நேரும். தொழிலை மாற்றவும், சில காலம் மூடி வைக்கவும் நேரும். பொறுமை இருக்காது. அங்கும் இங்கும் வங்கிப்போட்டு எதையாவது துவங்குவார். விரைவில் மூடுவிழா நடக்கும்.  உண்மையில் நஷ்டம் இவருக்கு இருக்காது என்றாலும் கலவரமாக காட்சியளிப்பார். இவரை நம்பி முதலீடு செய்தவர்களை பதறவைப்பார்.


மது இவருக்கு எதிரி. நண்பர்களோ மது பிரியர்களாக வந்து சேருவர். மதுவால் வீடும், உறவும் பாதிக்கப்படும்.


தலைவர் போல் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழ்வார்.ஆடம்பரம் இருக்காது. விக்ரமாதித்தன் போன்றவர்கள் என்பதால் கால வித்தியாசங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்பட வேண்டாம். தாமதம் கூட நன்மையே தரும். தடங்கல் கூட இடைஞசலை நீக்கும்.


எதிர்பார்த்த வருமானமும், பதவிகளும் தானே வந்து சேரும் என்பது நிச்சயம். இளமையை விட பாதி வயதுக்கு மேல் தான் பதவியும், பணமும், உயர்வும் கிடைக்கும்.


நவாம்சத்தில் விருச்சிக சூரியன்


சுதந்திரமாக தன் போக்கில் எதையும் செய்வார்.யாருக்கும் உரிய மரியாதை தர மாட்டார். பெற்றவரே ஆனாலும் சரியே. இவரிடம் சிக்கிய பணம் யானை வாய் கரும்பே. திரும்ப வராது. பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் பட மாட்டார்.. இவரது ஆசைகளுக்கு தடை போட முடியாது. அதே போல் வீண் செலவுகளை நிறுத்தவும் முடியாது. பிறரிடம் இல்லாத ஒன்று தன்னிடம் உண்டு என்று காட்டி கொள்வார். தனித்திறமை கொண்டவர் என்ற பெயரை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவார்.


நவாம்சத்தில் விருச்சிக சந்திரன்


பாலுணர்வு மிக்கவர். ஆண் ஜாதகம் என்றால் காதல் திருமனத்திற்கு வாய்ப்பு அதிகம். பெண்கள் மீது எப்போதும் தணியாத காதல் இருக்கும். மலருக்கு மலர் தாவுவார். எல்லோரையும் காதலிப்ப்பார். பெண் ஜாதகம் எனில் திருமண வாழ்க்கை சந்தேகம், சச்சரவு என்று வீணாகி விடும்.


ஜாதகருக்கு உதவாக்கரைகளுடன் நட்பு ஏற்படும்.புரட்சி சீர்திருத்தம் என்று பேசுவார். உலகை திருத்த வேண்டும் என்று புறப்படுவார். தன் வசிக்கும் பகுதியில் அல்லது தொழில் செய்யும் இடத்தில புரட்சி கருத்துகளை விதைப்பார். சக்தி மிக்கவர்களை எதிர்த்து  போராடவேண்டிய சந்தர்பங்கள் பலமுறை ஏற்படும்.


நவாம்சத்தில் விருச்சிக செவ்வாய்


சண்டைகோழி என்று பெயர் எடுப்பார். விபத்துகள் பல உண்டு. நண்பர்கள் நீடித்து இருக்க மாட்டார்கள். வேலைகாரகள் அடிக்கடி வெளியேறுவர். வீட்டில் இருப்பவர்களை மதித்து நடக்க மாட்டார். கஷ்டப்பட்டு சம்பாதித்து விருப்பம் போல் செலவு செய்வார். அசையாத சொத்துகள் பிற்காலத்தில் ஏற்படும்.


நவாம்சத்தில் விருச்சிக புதன்


அனைவர்க்கும் பிடித்தவர். பலரது பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். உளவு பார்க்கும் குணம் கொண்டவர். புதிதாக எதையாவது கண்டு பிடிப்பார். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும். பிரயாணங்களில் பிரச்சனைகள் உண்டு.
நவாம்சத்தில் விருச்சிக குரு


மலர்ந்த முகத்துடன் காணப்படுவார். சுயமாக முடிவு எடுப்பார். சிக்கலுக்கு காரணம் என்னவென்று ரகசியமாக துப்பு துலக்குவார். இவரால் ஒரு சிலருக்கு நன்மையும், ஒரு சிலருக்கு தீமையும் ஏற்படும்.


நவாம்சத்தில் விருச்சிக சுக்கிரன்


பெண்களே உலகம். பெண்களை அடிப்படையாக் வைத்தே பல சம்பவங்கள் நடக்கும். வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படும். அவை தேவையற்ற செலவுகளே. உடன் இருப்பவர்கள் வேகமாக முன்னுக்கு வருவார்கள். குடும்ப வருமானத்தை நம்பி இருக்க நேரும்.
நவாம்சத்தில் விருச்சிக சனி


தந்தைக்கும், ஜாதகருக்கும் ஆகாது. தன்னலம் மிகுந்து இருக்கும்.பலனை எதிர்பார்த்தே எதையும் செய்வார். உத்தியோகம் பார்பவராயின் உயர்வுகள் தரும் சனி பகவான். சர்வாதிகாரி என்ற பெயரையும் சேர்த்து தருவார். கெட்ட பெண்கள் தொடர்பு ஏற்பட்டு பெயர் கெட வாய்ப்பு உண்டு. இவரது மறைவு பலரும் பேசும் படி இருக்கும்.


நவாம்சத்தில் விருச்சிக ராகு


எப்போதும் எதாவது தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். சளைக்காமல் சமாளித்தவண்ணம் இருப்பார்.எதற்கும் பணிந்து போக மாட்டார். அனுசரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே தங்கவும் வாய்ப்பு உண்டு.


நவாம்சத்தில் விருச்சிக கேது


நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள். கூட்டாளிகள் துரோகம் செய்வார்கள். குற்றங்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் இருக்கும். பிறரது பிரச்சனைகளை அறிந்து கொள்வதே இவருக்கு துன்பத்தை வரவழைக்கும். இவரிடம் சிக்கிக் கொண்டால் மன்னிக்க மாட்டார். இவர் பிறரை மன்னிக்காவிட்டால், சமாதானத்திற்கு  உடன்படாவிட்டால் இவரது முடிவு பயங்கரமாக இருக்கும்.


நவாம்ச பலன்கள் – தனுசு


நவாம்சத்தில் தனுசு லக்னம்


தலைவர், உயர் பதவி அமையும். தகுதியை நிரூபிப்பார். சவால் விட்டு ஜெயிப்பார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவார். சாதித்து காட்டுவார். பார்த்தல் பூனை. பாய்ந்தால் புலி. பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்தால் திண்டாட்டமே. பின்னர் இவரே சீர் செய்யும் படி ஆகும். ஓய்வெடுக்கவோ, உல்லாசமாக ஊர் சுற்றவோ நேரம் கிடைக்காது. தொழிலையும் குடும்பத்தையும் ஒன்றாக்கிக் கொள்வார். வீட்டுப் பொறுப்புகளில் அதிக அக்கறை இருக்காது.


குறுக்கு வழி பிடிக்காது. பெரிய தவறுகள் செய்ய மாட்டார். ஒழுங்காக பொய் பேசவும் தெரியாது. உளறிக் கொட்டிக் விடுவார்.. எல்லாம் விடிபடியே நடக்கும் என வேதாந்தம் பேசுவார்.பிறர் செய்த உதவிகளை மறக்க மாட்டார். நன்றி மிக்கவர். துரோகங்களையும் மறக்க மாட்டார். மனதில் வைத்திருப்பார்.


பெரியோருக்கு பிரியமானவர். முன்னோர்களை பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் பெருமையாக பேசுவார். சுய சம்பாத்தியம் ஏற்படும். தொழிலில் படிப்படியான முன்னேற்றமே ஏற்படும். பெற்றோர் முடிவு செய்யும் பெண்ணை மணப்பார்.


நவாம்சத்தில் தனுசு சூரியன்


எதையாவதுசெய்து கொண்டே இருப்பார். பளிச்சென்று பேசுவார். கர்வியோ என்று நினைக்க தோன்றும். எல்லோரையும் போல் இருக்க மாட்டார். பல துறைகளில் கால் பதிப்பார். ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். அதில் தேர்ச்சியும் இருக்கும்.


அப்பழுக்கிலாத மனிதர் எனப் போற்றப்படுவார். சுதந்திரமாக செயல்படுவார். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதுபோல் தன் வாழ்கையை அமைத்துக் கொள்வார்.


நவாம்சத்தில் தனுசு சந்திரன்


நிலையாக ஒரு காரியமும் பண்ண மாட்டார். தேவையற்ற பரபரப்பு காட்டுவார். எல்லவற்றையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார். எதிரிகள் இருக்க மாட்ட்டார்கள்.


சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பார்.புராணங்களை விரும்பி படிப்பார்.போட்டிப் பந்தயங்களில் ஆர்வம் கொண்டிருப்பார். விளையாட்டு, சூதாட்டங்களில் பொருள் இழப்பார். ஒரே நேரத்தில் இரண்டு வருமானங்களைப் பெறுவார். வருமானத்தை இஷ்டப்படி செலவும் செய்வார்.


நவாம்சத்தில் தனுசு செவ்வாய்


என் தனிவழி என்பார். தன் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பார். ஊரோடுஒத்து போக மாட்டார். சுறுசுறுப்பு மிக்கவர். துணிவும் மிக்கவர். பந்தயங்கள், பிரயானங்கள் மூலம் வருவாய் ஏற்படும்.


நவாம்சத்தில் தனுசு புதன்


கல்வியில் தடங்கல், பிரயானங்களில் அவதி, நஷ்டம் என இளம் வயதிலேயே பல சோதனைகளை அனுபவிப்பார். யாரையும் நம்ப மாட்டார். நல்ல துணிமணிகளை அணிய மாட்டார். பொருத்தமில்லாமல் தோற்றம் அளிப்பார். ஊரோடு ஒத்து போக தெரியாது. உதவாத லட்சியங்கள் கொண்டிருப்பார். எழுத்து துறையில் ஏற்றம் காணலாம்.


நவாம்சத்தில் தனுசு குரு


இவரை எப்படி பாராட்டினாலும் தகும். பொறுப்பை உணர்ந்து கொண்டவர். கையிருப்பையும் கவனத்தில் கொண்டவர். பிறருக்கு உதவும் நல்ல குணம் கொண்டவர். அறிவாளிகளுடன் சேர்ந்து காணப்படுவார். வீணர்களை விளக்கி விடுவார். இவரது நட்பு கிடைபது அறிய செயலாகும்.வரும்மானம் சீராக இருக்கும். தவறு செய்ய மாட்டார். இடம் சம்பந்தமான சிக்கல் ஒன்று இந்த நல்ல மனிதரை படாத பாடு படுத்தும்,


நவாம்சத்தில் தனுசு சுக்கிரன்


ஒருபுறம் ஆன்மீகத்தில் ஆழ்ந்திருப்பார். இன்னொருபுறம் பெண் போகத்தால் தள்ளாடுவார். விசித்திரமான மனிதர். காதல் உண்டு. களியாட்டம் உண்டு. தன் அழகை பேணிக்காப்பதில் கவனம் இருக்கும். தூர தேச யாத்திரைகள் உண்டாகும். பல வழிகளில் பணம் சம்பாதிப்பார். சின்ன திரை, பெரிய திரை என்று கலைதுறையில் வலம் வருவார். தனுசு சுக்கிர பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வேறு ஆண்களால் அவஸ்தைகள் ஏற்படும்.


நவாம்சத்தில் தனுசு சனி


ஆன்மீகத்தில் தனி கருத்து வைத்திருப்பார். ஆன்மீக ஆராய்ச்சி செய்வார். கடவுளை கூட ஆராய்ச்சி செய்து பார்பார். கண்ணை மூடிக்கொண்டு எவரையும், எதையும் பின்பற்ற மாட்டார். பிரபல்யம் ஏற்படும். முக்கிய பதவிகள் வகிப்பார். அரசியல் செல்வாக்கு ஏற்படும். பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.


நவாம்சத்தில் தனுசு ராகு


வாதாடும் குணம் இருக்கும். பிரபல பேச்சாளராகவோ, வக்கீலாகவோ பிரகாசிப்பார். பேச்சு வருமானம் தரும். பொது சொத்துக்களை வசப்படுத்திக் கொள்வார். வளகுகளில் இருக்கும் சில சொத்துக்களை துணிச்சலுடன் நிர்வகிக்க முன்வருவார். பெண்கள் மற்றும் அந்தஸ்தில் கீழானவரோடு நட்பு ஏற்பட்டு பின்னர் அதுபிரச்சனையில் பொய் முடியும். பரம்பரை வியாதி தொடரும்.


நவாம்சத்தில் தனுசு கேது


செய்யும் தொழிலில் நிகரற்றவராக இருப்பார்.இவரது கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு. ஜாதகரின் பாணியை பலர் கடைபிடித்து புகழ் பெறுவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்


நவாம்ச பலன்கள் – மகரம்


நவாம்சத்தில் மகர லக்னம்


பிறவி பயனை அனுபவித்து விட்டு முக்திப் பெறவே மகர நவாம்சம் லக்னமாக அமையும். இதனால் தவறுகளுக்கு உடனடி தண்டனையும் அனுபவிப்பார். காலப்போக்கில் உண்மையான பக்தர்களாக மாறுவார். சல்லாபம், உல்லாசம் எல்லாம் விட்டுப் போகும்


வாழ்க்கையின் ஆரம்பத்தில், வாழ்க்கை அனுபவிக்கவே என வாழ்பவர். ஆடம்பரமாக தோற்றம் அளிப்பார். வசீகரிக்கும் பார்வை கொண்டவர். அனைவரும் தனது பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். பிரபலமானவர்களுடன் சேர்ந்து கொள்வார். அவரையும் தன்னை நம்ப வைப்பார். எல்லோரும் தன் சொல்படி நடப்பதாக நம்ம்பிக் கொள்வார். தனது தகுதியை மறந்து நடந்து கொள்வார். தலைகுப்புற விழுவது போல் நொடியில் பலவற்றை இழந்து விடுவார்.


முழுநேரமும் அலுவலகமே சிந்தனை என்பதுபோல் வெளிக்காட்டிக் கொள்வார். ஆனால் உண்மையான ஈடுபாடு இருக்காது. வேலை பார்க்கிறேன் என்று கண்ணை மூடிக் கொண்டு தூங்குவார். மேலோரின் அபிமானத்தை பெறுவது மட்டும் இவர் நோக்கம். உடலில் ஒரு உபாதையும், தொழிலில் எதிரிகளும் எப்போதும் இருக்கும்.


ஆசைகளே இவருக்கு சத்துரு. எதிலும் திருப்தி என்பதே இருக்காது. அலைச்சல் பேர்வழி எனலாம். இதனால் வீண் பகையும், உள்ள வேலையும் காலியாகி நடுத்தெருவில் நிற்பது போன்ற நிலையும் அடைவார். எல்லாம் விதியின் விளையாட்டு என்று வேதாந்தம் பேசுவார். இந்த மடம் இல்லாவிட்டால் சந்தைமடம் என்று ஜாகை மாறுவார்.


பிரயானங்கள் அதிகம். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவார்.. தர்ம ஸ்தாபனக்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.கடல் சார்ந்த துறையும், கடல் தாண்டிய வியாபாரங்களும் இவரது பெயரைச் சொல்லும்.


செல்லப்பிள்ளையாக இருந்தவர். விருந்தினர்களால் இவரது வீடு எப்போதும் நிறைந்திருக்கும். இளம் வயதில் பல இடையூறுகளை சந்திப்பார்.பெற்றோரின் அன்புக்கு குறைவில்லை. ஆனால் நிம்மதி குறைவும், சகோதர்களால் செலவீனங்கள் என சங்கடமான உறவு நிலை இருக்கும். சங்கடங்கள் சூழ்ந்தாலும் ஜாதகரின் பாசத்திற்க்கு குறைவிருக்காது.


உயர் தர கல்வி உண்டு. தரமான இடத்தில் பணிபுரிய கல்வி கை கொடுக்கும். பிறருக்கு பயிற்சி அளிக்கும் திறமை இருக்கும்.


விருபத்திற்கு இணங்க மனைவி அமைவதால் சிறப்பான மன வாழ்க்கை உண்டு. கடவுள் பக்தியுள்ள அப்பெண்மணி குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பார். அழகும், அமைதியும் சேர்ந்தவராய் இருப்பார்.


கையிருப்பு கவலைப்படும்படி இருக்காது. பலரும் பண உதவி செய்வர். இருக்கும் பணத்திற்கு தக்கபடி தற்காலிக வசதிகளை எற்படுதிக்கொள்வார். குடும்பதிர்னரின் கடன்களை ஏற்றுக்கொள்வதால் கடனுக்கும் உள்ளாவார்.


நவாம்சத்தில் மகர சூரியன்


ஆளைப் பார்த்து எடைபோட முடியாது. திறமைசாலிகள். கடவுள் நம்பிக்கை அதிகம். ஜோதிட நம்பிக்கை மிகுந்தவர். தனது எண்ணப்படியே நடப்பார். பிடிக்காத தொழிலை லாபம் வரும்போதே விட்டு விடுவார். எடுத்துக் கொண்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பார்.


பெரிய மனிதர்களை எப்படியாவது அணுகி விடுவார். நல்லபடியாக நடந்து கொள்வார். கூட்டுத் தொழில் லாபம் தரும். கொஞ்சமாகவே வருமானம் வந்தாலும் மிச்சம் பிடித்து வைப்பார்.முதலீடுகளில் ஆர்வம் உள்ளவர்.


நவாம்சத்தில் மகர சந்திரன்


விளம்பரம் கிடைக்கும். பொதுமக்களிடையே பெயர் பிரபலமாகும்.பிறரை அடக்கி ஆள முயற்சி செய்வார். சந்தர்பங்கள் தாமாகவே தலைமை பதவிக்கு இட்டு செல்லும். செல்வாக்கு மிக்கவர்களோடு வாழ்கை பயணம் ஏற்படும். தொழில் அதிபர் ஆவார்.


நவாம்சத்தில் மகர செவ்வாய்


பிறந்த குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்வார். சுறுசுறுப்பு மிக்கவர். சீருடைப்பணியில் நல்ல வாய்புகள் கிட்டும். அந்தஸ்தும் செலவாகும் ஏற்படும். அரசியல் தொடர்புகள் அலைகழிக்கும்.


நவாம்சத்தில் மகர புதன்


அழுத்தமானவர். இவரிடமிருந்து விசயத்தை வாங்க முடியாது. ரகசியங்களின் இருப்பிடம். பிறரை கணித்து விடுவார். அடுத்தவரின் வருமானத்தை சாமர்த்தியமாக கைப்பற்றி விடுவார். திருட்டுதனம், நரித்தனம் என்று எந்த பெயருக்கும் பொருத்தமானவர். ஊழல் புகாருக்கு உள்ளாவர். நல்ல பெயர் வாங்குவதர்காக பல பொது நிகழ்சிகளை ஏற்பாடு செய்வார். கௌரவப் பட்டங்களை வாங்கி பெயருக்கு முன் போட்டுக் கொள்வார்.


நவாம்சத்தில் மகர குரு


சாண் ஏற முழம் சறுக்கும். உடனிருப்பவர்கள் யாரும் உதவ மாட்டார்கள். இவரது உழைப்பு உண்மையாக இருக்குமே தவிர சரிவர இருக்காது. சோகங்களை சுமந்து திரிவார். கலகலப்பு அற்ற வாழ்வை இவரே அமைத்துக் கொள்வார். எப்படியாவது நல்ல வேலையை பெற்றுவிடுவார். சம்பாத்தியம் வந்ததும் கஞ்சத்தனம் தலைதூக்கும்.


நவாம்சத்தில் மகர சுக்கிரன்


தொட்டதேல்லாம் பொன்னாகும். வருமானம் பல வழிகளில் சேரும். பிரபல்யம் உண்டாகும். இவரது உறவை பலதரப்பட்ட மனிதர்களும் விரும்புவார்கள். பூமியும் கைகொடுக்கும். கனிம பொருள்களால் லாபம் கிடைக்கும். திருமணம் உரிய பருவத்தில் நடைபெறாது. காலம் கடந்து நடந்தாலும் செல்வாக்கு மிக்க இடத்திலேயே பெண் அமையும். குடும்ப சொத்து கிடைக்கும். விலை உயர்ந்த கார்கள் இருக்கும்.


நவாம்சத்தில் மகர சனி


ஆயிரத்தில் ஒருவர் எனப் போற்றப்படுவார். உயிரை துச்சமாக நினைத்து வீர் தீர சாகசங்கள் புரிவார். ராணுவம், காவல்துறை, அரசியல் முதலான துறைகளில் பொறுப்பான பதவிகளை பெற்று விடுவார். பணம் பெரிய அளவில் சேர்க்க முடியாது.
நவாம்சத்தில் மகர ராகு


சீருடைப்பணியில் சிறப்பார். வசதியில்லாத இடங்களில் சில காலம் வசிக்க நேரிடும். இடமாற்றம் அதிக அளவில் ஏற்படும். கண்டிப்பானவர். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்து புதிய விசயங்களை வெளியிடுவார்.
நவாம்சத்தில் மகர கேது


எதாவது ஒரு துறையில் மேதாவியாக இருப்பார். படிப்பை விட சொந்த அறிவால் தொழிலில் முன்னுக்கு வருவார். வரும்மானம் சீராக இருக்கும். பெயர் சம்பாதிக்கவே விரும்புவார். இவரது பெயரே பெரிய முதலீடாக அமையும். உணர்சிகளை வெளியிடாமல் மறைக்கும் சாமர்த்தியம் இருக்கும். ஒன்றைப் பேசுவார். வேறொன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார். பிரயாணங்கள் பல உண்டாகும்.


நவாம்ச பலன்கள் – கும்பம்


நவாம்சத்தில் கும்ப லக்னம்


அடுத்தது நடக்கபோவது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். தனிமையே பிடிக்கும். ஆனால் தனியாக எதையும் செய்ய மாட்டார். எல்லாவற்றுக்கும் யாராவது உடன் இருக்க வேண்டும்.


நேர்மறை குணங்கள் கொண்டவர்கள் கும்ப நவாம்சதினர். இவர்களின் தோற்றத்திற்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இருக்காது. அழகாக இருக்க மாட்டார். ஆனால் பிரபலமான நடிகர் ஆகிவிடுவார். அழகாக இருப்பார். ஆனால் அவலமான வாழ்க்கை வாழ்வார். பந்தா இல்லாத பிரமுகரும், அலட்டிக் கொள்ளும் ஆபிஸ் பையனும் இவர்களே.


ஜாதகருக்கு முயடிவேடுகும் திறன் குறைவே. யோசிக்க ஆரம்பித்து விட்டால். முடிவே இராது. யோசனை மேல் யோசனை என்று கற்பனைகளுக்கு இடம் கொடுத்து விடுவார். இறுதியில் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுவார், எல்லோரிடத்திலும், எல்லா இடத்திலும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதே இவர் விருப்பம். ஆனால் சந்தேகம் என்று வந்து விட்டால் இப்படி கூட ஒரு மனிதன் இருப்பான என்று வெறுத்து தள்ளும்படி நடந்து கொள்வார். பழகிய மனிதர்கள் இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பார்கள். தயக்கம், தாமதம், கூச்சம் போன்றவை முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும்.


காதல் தோல்வி, பிரியமானவர்களின் மரணம், நட்பு பிரிதல் போன்ற அழுத்தமான நிகழ்சிகள் இவர் வாழ்கையில் உண்டு. அதையே நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருப்பார். வெளி உலகதிருக்கு தெரியாமல் ஒரு சோக ராகம் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கும். மிடுக்கான மனைவி அமைவார். பிற பெண்களின் உறவும் சேரும். பிறர் சொத்தை அனுபவிப்பார். பிறருடைய பணத்தை செலவு செய்வார். பெருமையும், திறமையும் உள்ள பெண்களால் கவரப்படுவார். நட்பே பிரதானம். உறவினர் பிறகுதான். தற்புகழ்ச்சி உண்டு. பிறரை குறை கூறி பேசுவார்.பெற்ற சிறு உதவியையும் பெரிதாக கூறி மற்றவர்களை பெருமைபடுத்துவார். ஆனாலும் நன்றி மறந்தவர் என்ற அவசொல்லுக்கும் ஆளாவார்.


புதியவைகளை உறுவாக்கி பணம் சேர்த்தல், முதன் முதலாக கண்டுபிடித்தல்/அரிமுகபடுத்துதல். பிரபலம் அடைதல் முதலான கும்ப நவம்சதிருகுரிய சிறப்பியல்புகள்.


எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன் கூட்டியே சொல்வார். வெளிதோற்றதிற்கு பெரிய அறிவாளியாக தென்படமாட்டார். பிறர் நுழைய முடியாத எந்த பிரச்சனையையும் சுலபமாக முடித்து காட்டுவார். தமது விஷயத்தில் சோம்பேறித்தனம் அதிகம்.


மனைவிக்கு அதிக மரியாதை கொடுப்பார். மனைவிக்கு அடங்கி கிடப்பதாக பெயர் வாங்குவார். தேவைக்கேற்ற சேமிப்பு இருக்காது. முக்கிய செலவுகளுக்கு பணம் கிடைக்காமல் அவதிப்படுவார். திடீரென பணம் வரும். ஆனால் தங்காது. ஆனால் வசதிகள் எல்லாம் வந்து சேரும். உறவும், நட்பும் ஆச்சரியப்படும் படி  வசதியாக வாழ்வார். வீடு வாகனம் அமையும்.


நவாம்சத்தில் கும்ப சூரியன்


நம்பிக்கைக்கேற்றவர், நிதானமாக முன்னேறுவார். பணம் சேர்க்க கும்ப சூரியன் உதவுவார். பிறர் இவருக்காக சேமிப்பு துவங்குவர். பணம் இருந்தாலும் பந்தா இருக்காது. உடன் பிறந்தோர் மீது பாசம் அதிகம். கடவுள் பக்தி மிகும்.


நவாம்சத்தில் கும்ப சந்திரன்


புதுமையான வியாபாரங்களை செய்து பொருள் ஈட்டலாம். மற்றவர்கள் தவிர்க்கும் தொழில்களை மேற்கொண்டாலும் வருமானம் கிடைக்கும். பலதரப்பட்ட மனிதர்களுடன் நட்பு வைத்திருப்பார். அரசியல் பேசுவார். கல்விதுறை, பயிற்சி துறை மூலம் ஆதாயம் கிடைக்கும். மதப்பற்று குறைவே. குல ஆசாரங்களை ஒழுங்காக பின் பற்ற மாட்டார். பெண்கள் சம்மந்தமான தொல்லைகளை சந்திப்பார். பாலுறவு நோய்களுக்கு ஆளாக நேரும். கவனம் தேவை.


நவாம்சத்தில் கும்ப செவ்வாய்


வேகம் இருக்கும். இவர் என்ன செய்யப்போகின்றார் என்று ஒரு கூட்டம் கண்காணித்து கொண்டே இருக்கும். நெருங்கிய ஒருவரால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆபத்தை தேடிக் கொள்வார். நண்பர்கள் மூலம் பிரச்சனையே. நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். எதிரிகளையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்வர். தப்பி வருவது போல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும.


நவாம்சத்தில் கும்ப புதன்


தனி ஆட்சி நடத்துவார்.பிறருடன் இணங்கி செயல்படமாட்டார். எல்லாம் தெரியும் என்பதுபோல் நடந்து கொள்வார். சிலர் தங்கள் பகையை தீர்த்துக் கொள்ள இவரை பயன்படுத்திக் கொள்வர். சிலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள அவரது பொறுப்பை ஜாதகர் ஏற்பார். மாற்று வேட்பாளர் மந்திரி ஆவதைப்போல.


நவாம்சத்தில் கும்ப குரு


ஆன்மிகம் பேசுவார். பகுத்தறிவும் பேசுவார். பழமையை கடைப்பிடிப்பார். புதுமையான முறையில் சம்பிரதாயங்களை செய்வார். ஆராய்ச்சி செய்வார். இவரது கருத்துக்கு மதிப்பு உண்டு. தற்பெருமை அடித்துக் கொள்வார். குழுக்களுக்கு தலைமை ஏற்பார். வித்தியாசமானவராக வாழ்க்கை நடத்துவார். பணம் வரும் வழிகள் ரகசியமாக இருக்கும்.


நவாம்சத்தில் கும்ப சுக்கிரன்


கூட்டுத் தொழில், கூட்டுறவு அமைப்புகள், சங்கங்கள் மூலம் வருவாய் ஏற்படும். பெரும் பணக்காரர்கள் நட்பும் ஏற்படும். வாழ்நாள் முழுதும் பெண்களால் நாடப்படுவார். கலாரசனை மிக்கவர். பலரது பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். சமய சஞ்சீவியாக விளங்குவார். பெயர் நிலைக்கும்.


நவாம்சத்தில் கும்ப சனி


அரசியல், பொது வாழ்கையில் ஈடுப்பட்டு பெரிய பதவிகளை வகிப்பார். நண்பர்களே இவரது பலம். கூட்டணி அமைத்து களம் காணுவார். வெற்றி வந்தே தீரும்.. தலைவர் என்று புகழப்படுவார். எல்லா தரப்பினரையும் அனுசரித்து போவார். இவரது பேர் சொன்னால் போதும் என்ற அளவுக்கு பிரபலம் ஏற்படும். ஜோதிடம், மாந்த்ரீகம், சாமியார் என்று இரகசிய தொடர்பு வைத்திருப்பார்.


நவாம்சத்தில் கும்ப ராகு


எதிர்த்து போராடுவார். அச்சம் இல்லாதவர்.கூச்சம் இல்லாதவர். எங்கும் எதிலும் புரட்சி செய்ய வேண்டும், சீர்திருத்தம் அவசியம் என்பார்.எல்லவற்றையும் மாற்றிஅமைக்க துணிவார். நண்பர்களின் துரோகம் இவரை வீழ்த்தும்.


நவாம்சத்தில் கும்ப கேது


பிரச்சார பீரங்கி, புகழ்ந்தும், இகழ்ந்தும் பேசுவார். மத விமர்சனம் செய்து பேர் வாங்குவார். எதிர்பாரத வருமானம் கிடைக்கும். தொழிலை நிரந்தரமாக செய்ய மாட்டார். கலைத்துறையில் பெயர் பெறலாம். விளம்பர வகைகளும் கை கொடுக்கும்


நவாம்ச பலன்கள் – மீனம்


நவாம்சத்தில் மீன லக்னம்


தூய்மையான உடைகளை அணிந்து பளிச்சென்று இருப்பார். புத்தகப்பிரியர். ஜாதகரின் வாழ்வில் பிற மனிதர்களின் தலையீடு அதிகம் இருக்கும். தனது காரியங்களை விட்டு விட்டு மற்றவர்களுக்கு உழைத்தாக வேண்டும் என்ற நிலை வரும். கூலியை கேட்கக் கூட யோசிக்கும் உண்மை ஊழியர் இவர் எனலாம். பிறருக்காக சண்டை போடவும், சச்சரவு செய்யவும் நேரும். சுயகௌரவம் பார்ப்பார். தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் கோடி பணம் கொடுத்தாலும் இருக்க மாட்டார்.


குடும்பத்தில் இவர் பேச்சு கேட்கப்படும். குடும்ப நிர்வாகம் இவர் விரும்பியபடி நடக்கும். செல்வம் மிக்க குடும்பத்தில் இருந்து பெண் அமைவார். திருமணத்திற்குப் பிறகு ஜாதகரின் வாழ்க்கை தரம் உயரும்.


நவாம்சத்தில் மீன சூரியன்


வேண்டும் என்றே பிறர் செய்வதற்கு எதிராக செய்வார். மறுத்துப் பேசுவார். கேலிக்கு இடமாவார். எதிலும் நிலைத்து இருக்க முடியாமல் சோர்ந்து போவார். அலுப்பே மிஞ்சும். தனக்கு பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்ட மந்திரவாதி, சாமியார் என்று அலைவார்.


நவாம்சத்தில் மீன சந்திரன்


குற்ற நடத்தை உள்ளவர்களின் உற்ற நண்பன் இவர். வெளி உலகிற்கு உத்தமராக காட்டிக் கொள்வார். எவர்மீதும் அதிகாரம் செலுத்த தனியாத ஆவலாக இருப்பார். முடியாத காரியங்களில் புகுந்து பெயரை கெடுத்துக் கொள்வார். ஆனால் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்வார்.


வயதான காலத்தில் ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமையும். வேண்டிய வசதிகளுடன் இருப்பார். ஆடி அடங்கும் வாழ்க்கை என்பதற்கு உதாரணமாக இருப்பார்.


நவாம்சத்தில் மீன செவ்வாய்


இவரால் பலர் பிரச்சனைகளை சந்திப்பர்.ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டார். வேண்டாத விரோதிகளை தேடிக்கொள்வார். வாழ்க்கை நடத்த தடுமாறுவார். மதுபழக்கம் உண்டு. தண்ணீர் கண்டம் உண்டு. விஷத்தால் கண்டம் உண்டு. ஆபரேசன், விபத்துகளால் ரத்த சேதம் உண்டு.


நவாம்சத்தில் மீன புதன்


அந்தஸ்து உயரும். புகழ்ச்சிக்கு மயங்குவார். ஆமாம் சாமி போடும் கூட்டம் இவரை சுற்றி இருக்கும். பிறரால் ஏமாற்றப்படுவார். சுரண்டப்படுவார். . திருடர்களே இவர்களுக்கு ஊழியர்களாக இருப்பார்கள். தவறுகளை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பார். இவருக்கு இடைஞ்சல் செய்யாத ஆளே இல்லை எனலாம்.


நவாம்சத்தில் மீன சுக்ரன்


நல்ல மனம் கொண்டவர். அரட்டை அடிப்பதில் ஆர்வம் உண்டு. தன்னை மறந்து செலவு செய்வார். கலை, இசை பிடிக்கும். ஒரே சமயத்தில் இரண்டு தொழில்களை செய்வார். புதிய துறைகளில் கால் பதிப்பார். சாதனை புரிவார். தொட்டது துலங்கும்.


நவாம்சத்தில் மீன சனி


துரதிருஷ்டம் தொடரும். துரோகிகளால் விரும்பதாகாத சம்பவங்கள் நடைபெறும். மேலோர் இவரது வளர்சியை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விடுவார்கள். அரசாங்கதையும், மக்களயும் ஏமாற்றும் நபர்களின் உறவு உண்டாகும்.அவரகள் சம்பாதிக்க உதவுவர். வருமானமும் கிடைக்கும். பெருங்குற்றங்களைப் புரிபவர்களின் உறவு விட்டு விட முடியாதபடி அமைந்துவிடும். வாழ்கையில் மறைமுக, நேர்முக எதிரிகள் இருப்பர்.


நவாம்சத்தில் மீன ராகு


உறவினர்களால் பிரச்சனை. தனித்து வாழ நேரும். பணசிக்கல்கள் உண்டு. தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்காது. திடீர் வருமானங்கள் அமையும்.


நவாம்சத்தில் மீன கேது


உயரபதவி அமையும். அந்தஸ்தும் வசதியும் வந்து சேரும்.சிலர் இவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவர்.சில விசாரணைகளுக்கு உள்ளாவார். மதபற்று இருக்கும். அதனால் பழி வாங்கப்பட கூடும்.

Bakkianathan

Founder and Director https://exactpredictions.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!