திருமணநாள் நிச்சயிப்பது எப்படி?

எந்த சுப காரியத்துக்கும் நல்ல நாள் பார்த்து செய்தால் தான் அந்த சுப காரியம் இனிது நடந்தேறும். திருமண வைபோகமும் மிக முக்கியமான சுப காரியமாகும். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் அல்லவா? தாம்பத்திய உறவு தலைசிறந்து இருக்க வேண்டும் ஆனால் நல்லதொரு திருமண நாளை நிச்சயித்து கொள்ளுதல் நலமாகும். திருமண நாள் நிச்சயிக்கும் முறையினை தெரிந்து கொள்ளுவோம்.

 1. திருமணம் மல மாதத்தில் இடம் பெறக்கூடாது, மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி ஒரு மாதத்தில் இடம் பெரும் மாதம் ஆகும்.
 2. சித்திரை, வைகாசி, ஆணி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது.
 3. சுக்கில பட்சம் தவிர கிருஷ்ண பட்ச காலங்களில் திருமணம் செய்யக் கூடாது.
 4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகளில் மட்டும் திருமணம் செய்யலாம். இதர கிழமைகள் அவ்வளவு உகந்தது அல்ல.
 5. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் தான் திருமணம் நடத்த வேண்டும். இதர லக்கினங்களில் நடத்தகூடாது.
 6. திருமணம் துவதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளில் நடைபெற கூடாது.
 7. திருமணம் ரோகினி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம், ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்கள் தவிர இதர நட்சத்திரங்களில் நடத்தக் கூடாது.
 8. முகூர்த்த லக்னத்திற்கு 7 ஆம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
 9. திருமணம் அக்கினி நட்சத்திரம், மிருத்யு பஞ்சகம், கசர யோகங்கள் போன்ற அசுப காலங்களில் நடை பெற கூடாது.
 10. திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லகினதிற்கும், மணமக்கள் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெறகூடாது.
 11. திருமணம் மணமக்களுடைய சந்திர லக்கினத்திற்கு 8 ஆம் ராசிக்குரிய 2 ¼ நட்சத்திரங்களில் இடம் பெற கூடாது.
 12. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமக்களின் ஜனன நட்சத்திரத்திலும் அதற்கு 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆகிய நட்சத்திரங்களிலும் திருமணம் நடைபெற கூடாது. இது ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்மம் என்ற அடிப்படையில் அமைவதாகும்.
 13. மணமக்கள் பிறந்த தேதி அல்லது கிழமைகளில் திருமணம் நடைபெற கூடாது.

Bakkianathan

Founder and Director https://exactpredictions.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!