பொதுவாக எல்லா மக்களின் மனதிலும் எழுகின்ற பொதுவான கேள்வி “நான் ஏன் பிறந்தேன்”
இந்த கேள்வி எழாமல் எந்த மனிதரும் இருந்து இருக்க முடியாது
MGR அவர்கள் ஒரு திரைப்பட பாடலில் பின்வருமாறு பாடி இருப்பார்.
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
MGR மனசுல நாட்டுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும் அப்படினு தோன்றி கொண்டே இருந்திருக்கின்றது.
நாட்டுக்கு நல்லது பண்ணறதுக்குத்தான் நான் பிறந்து இருக்கின்றேன் அப்படினு முழுதுமாக அவர் நம்ப்பினார்.
அந்த நம்பிக்கை அவரை முதலமைச்சர் ஆக்கியது
அது மாதிரி நீங்களும் நான் ஏன் பிறந்தேன். நான் இறப்பதற்குள் என்ன செய்து விட்டு இறக்கவேண்டும் என்ற ஒரு முடிவை தீர்க்கமாக எடுங்க.
நீங்கள் மற்றவர்களுக்கு ஏதாவது செய்கிறீர்களோ / இல்லையோ, நிச்சயம் உங்கள் உடம்பும், மனதும், ஆத்துமாவும் மகிச்சியாக, நிறைவாக, அமைதியாக இருக்கின்றதா என்பதையாவது உறுதி செய்யுங்கள்
உங்கள் சொந்த உடலையும், உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளாமல், உங்களையே ஏமாற்றி துயரமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து மடிய தான் நீங்கள் பிறந்தீர்களா?
நீங்கள் பூமியில் மகிச்சியாக வாழ பிறந்து இருக்கின்ரீர்கள்? ஆனால் நீங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இல்லை எனில் என்ன செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்?
ஒரு காகிதத்தை எடுங்கள். அதில் என்னென்னவெல்லாம் உங்களுக்கு கிடைத்தால் அல்லது நிகழ்ந்தால் தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் சந்தோஷம் கிடைக்கும் என்று எழுதுங்கள்.
பின்னர் என்னென்னவெல்லாம் உங்கள் தாய், தந்தை, மனைவி/கணவன், பிள்ளளைகள், சகோதர/சகோதரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கிடைத்தால் அல்லது நிகழ்ந்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்று எழுதுங்கள்.
பின்னர் என்னென்னவெல்லாம் நீங்கள் இருக்கும் சமூகத்தில், நாட்டில் கிடைத்தால் அல்லது நிகழ்ந்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்று எழுதுங்கள்.
இப்பொழுது நீங்கள் எழுதியவற்றில் என்னென்னவெல்லம் உங்களாலேயே செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியுமோ அவற்றை தனியாக மார்க் செய்து கொள்ளுங்கள். அவற்றை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து, அந்த இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பியுங்கள்
வாழ்க்கையில் இலக்கு என்பது மிக மிக மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்குள் முடிக்க பழகுங்கள். ஒரு வேலை உங்களால் இலக்கை அடைய முடியவில்லை என்றால் அது பெரிய பிரச்சனையில்லை. நாம் அடுத்த தேதியினை இலக்கை அடைவதற்காக மாற்றி வைத்து மீண்டும் பயணிக்கலாம். இது போல் மீண்டும் மீண்டும் இலக்கை அடையும் வரை பயணிக்கலாம்.
உங்களால் நீங்கள் விரும்பும் எதையும் அடையமுடியும்? எப்பொழுது நிகழும் என்பது தான் கேள்வி? அந்த தேடலை நோக்கி பயணிப்பது தான் மனித வாழ்கை
உங்கள் தேடல்கள் / ஆசைகள் அனைத்தும் நிறைவேற ப்ரபஞ்சத்திடம் வேண்டுகின்றேன்.
நாம் இதுவரையில்
நான் யார்?
நான் ஏன் பிறந்தேன்?
இரண்டு கேள்விகளை முன் வைத்து இருக்கின்றேம். இவற்றிற்கு ஜோதிட ரீதியாக எவ்வாறு விடை காண்பது என்பதை அடுத்த வருகின்ற பதிவுகளில் காண்போம்.
அன்புடன்,
குரு பாக்கியநாதன்
9751889306
9840324409
8925765774
https://exactpredictions.in/
குரு பாக்கியநாதனின் ஜோதிட ஆராய்ச்சி இணையதளம் மற்றும் மென்பொருள்கள்
பதிவுகள் மிக மிக அருமை ஐயா. நன்றிகள் பல —- கரூர் வெங்கடேஸ்வரன்