பனிரெண்டு பாவ பலன்கள்

முதலாம் பாவம்

லக்னாதிபதி பலன்கள்

லக்னத்திற்கு உரிய அதிபதி ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளான் என்பதை வைத்து பலன் பலன் கண்டுபிடிக்கும் முறையை முதலில் பார்போம்.

லக்னாதிபதி லக்னதிலேயே இருந்தால் நீண்ட ஆயுளுள்ளவர். எப்பொழுதும் சுகமான வாழ்வு அமைகிறது. நல்ல உழைப்பாளியகவும் இவர் விளங்குகின்றான். இவருக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கு இடமிருக்கிறது.

லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் செழிப்பும் உயரமும் கொண்ட தேக அமைப்பு கிடைக்கிறது. தனவான், தர்மம் செய்பவர். ஒழுக்கம் உள்ளவர். மான உணர்வு மிக்கவர்.

லக்னாதிபதி மூன்றான் இடத்தில இருந்தால் சகோதரர்களின் சகாயம் அவருக்கு எப்போதும் உண்டு. சிங்கத்திற்கு ஒப்பான பராகிரமம் உள்ளவர். சகல சௌபாக்கியங்களையும் பெற்றவர்.

லக்னாதிபதி நான்காம் வீட்டிலிருக்கும் அமைப்பு பெற்றவர் அரசரால் போற்றப்படகூடிய அந்தஸ்தை பெறுகிறார். தெய்வ வழிபாடுடையவர். பெற்ற தாய் தந்தையரின் மகிசிக்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுபவர். தர்ம ஸ்தாபனத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்.அதக சகோதர்கள் உள்ளவர். வாகன யோகம் உள்ளவர். தேகசுகம் உள்ளவர்.

லக்னாதிபதி 5 ஆம் இடத்தில இருக்கும் அமைப்பை பெற்றவர் நீண்டகாலம் வாழும் புத்திரர்களை உடையவர். சுபகாரியங்களுகாக பொருளை செலவிடகூடியவர். சங்கீத ஞானத்தில் பற்றுள்ளவர். பணிவும் அடக்கமும் இவரது பண்பு நலன்கள். பூர்வ புண்ணியம் வாய்க்கப்பெற்றவர்.

லக்னாதிபதி 6 ஆம் இடத்தில இருக்கும் அமைப்பு கொண்டவருக்கு எப்போதும் பகைவர்களின் தொல்லை உண்டு.சுப குணம் இவர் உடன் பிறந்தது.தாய் மூலம் சௌகர்யத்தை தேடிகொள்பவர். தாய் மாமனின் உதவியும் இவருக்கு உண்டு. மாடு கன்று வைத்து வாழ்பவர். லக்னாதிபதி 6ஆம் இடத்தில இருபது அவ்வளவு நல்ல பலன்களை உண்டாக்காது.

லக்னாதிபதி களத்திர ராசியான் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்கள் மூலம் சுகம், செல்வம் இவற்றை அடைவார். ஒழுக சீலர். அலங்கார பிரியர். ஆனாலும் இவரது மனைவி நெடு நாள் வாழ்வது சந்தேகமே. ஒரு கட்டத்தில் இவர் விரக்தியடைந்து வேறு தேசம் செல்லவும் நேரிடலாம்.

லக்னாதிபதி எட்டாம் இடத்தில இருக்கப்பெற்றவர் பற்பல துன்பத்திற்கு ஆளாகிறார். மரணத்திற்கு ஒப்பான உபாதை ஏற்படுகிறது. எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் இவரிடம் சேராது. எப்பொழுதும் யாரோடும் வாதிட்டு கொண்டே இருபதால் ஒரு சமயத்தில், திருடராகவும், பிறர் மனைவியிடத்தில் நாட்டமுள்ளவராகவும், கொடுமையாளராகவும் மாற வாய்ப்புள்ளது.

லக்னாதிபதி 9 ஆம் இடத்தில் இருந்தால் எல்லோரிடமும் சரளமாக பழகி நல்ல நட்பை தேடிகொள்வார். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பார். பெரும்புகழ் பெறுவார். அரசர்களும் பணியகூடிய அந்தஸ்தை பெறக்கூடியவர். பேச்சாற்றல் மிக்கவர். இல்லறத்தை நல்லறமாக்குபவர். திருமாலை வழிபடுபவர்.

லக்னதிபாதி 1௦ ல் அமர்ந்தால் அரசர்கொப்பான வாழ்க்கை உடையவர். குரு பூஜை செய்பவர். தாயும் தந்தையும் போற்ற வாழ்பவர். சகல சுகமும் பெற்றவர். நோயில்லாமல் நிறை வாழ்வு வாழ்பவர்.

லக்னாதிபதி 11 ஆம் இடத்தில இருந்தால். தெளிவான் சிந்தனையும் நிறைவான் வாழ்வும், அமைப்பான வாகன சுகமும், அரச மரியாதையும் பெறுவார்.

லக்னாதிபதி 12 ஆம் இடத்தில இருந்தால், ஜாதகரின் வாயில் இனிய சொற்களை எதிர்ப்பார்ப்பது அரிது. கடுகடுதவர். குடிகேடுபவர். துஷ்டர் சகவாசமும் கேட்ட நினைப்பும் கொண்டவர். தன் சகோதரனுகே எதிரியாவார். தன் தேசம் விட்டு வேறு தேசம் செல்லும் நிலைக்கு ஆளாவார். நல்ல பெயர் எடுபதற்கு வாய்ப்பு இல்லை. <

strong>லக்னத்தை மற்ற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

சூரியன் லக்னத்தை பார்த்தால் தகப்பன் வழி சொத்து கிடைக்கும். அரசாங்கத்தில் பணியாற்றுவார். பெண்களிததில் முரட்டுதனமாக நடந்து கொள்வார்.

சந்திரன் லக்னத்தை பார்த்தால் அழகுள்ளவர். தாயாள குணம் மிக்கவர். பெண்களுக்கு வசபடுபவர். திரவ சம்பந்தமான பொருள்களை வியாபாரம் செய்பவர்.

செவ்வாய் லக்னத்தை பார்த்தால் எத்தகைய முரடனானாலும் தன்னுடைய சாகஸத்தால் சிநேகிதர் ஆக்கி கொள்பவர். தர்ம சிந்தனை உள்ளவர்.

புதன் லக்னத்தை பார்த்தால் சிற்பகலையில் ஈடுபாடு கொண்டவர். புகழ்மிக்கவர். பல வழிகளில் வெகுமானம் பெறுபவர்.

குரு லக்னத்தை பார்த்தால் யாகம், விரதம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.சதுகளிடமும், ஞானிகளிடமும் ப்ரீதி உள்ளவர்.

சுக்ரன் லக்னத்தை பார்த்தால் வேசிகளின் சேர்கை உள்ளவர். தனலாபம் உள்ளவர்.

சனி லக்னத்தை பார்த்தால் பயங்கர ரோகதால் பீடிகப்பட்டவர். மூர்க்க குணம் உள்ளவர்.


இரண்டாம் பாவம்

மேஷம் 2 ஆம் இடமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாகியவானவாகவும், வித்வானாகவும் விளங்குவார்.

ரிஷபம் 2 ஆம் இடமாக வருமானால் விவசாயத்தில் ஈடுபாடும் ரத்தினங்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்.

மிதுனம் 2 ஆம் இடமாக ஆகுமானால் தனவான். இவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள்ளல் லாபம் உள்ளவர்.

கடகம் 2 ஆம் இடமாக அமைந்தால் நியாயமான மார்கத்தில் சம்பாதிப்பவர். மனைவி மூலம் சுகத்தை அடைபவர். பிள்ளைகளை பேணி காப்பவர்.

சிம்மம் 2 ஆம் இடமானால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார்.

கன்னி 2 ஆம் இடமானால் அரசினால் வருமானம். யானை, குதிரை ரத்தினங்கள் முதலியவற்றை வேகுமானமாகப் பெறுவார்.

துலாம் 2 ஆம் இடமானால் பூமியினாலும, பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார்.

விருசிகம் 2 ஆம் இடமானால் கடமையே கண்ணாக உள்ளவர். பெண்களிடத்தில் பிரியமுள்ளவர். நல்ல பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வங்களிடமும் ஈடுபாடு கொண்டவர்.

தனுசு 2 ஆம் இடமாக அமைந்தால் தீரச் செயல்களால் செல்வம் கிடைக்கும். மாடு கன்றுகள் வீட்டில் நிறைந்து இருக்கும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.

மகரம் 2 ஆம் இடமாக ஆனால் பலவிதமான் யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும்.

கும்பம் 2 ஆம் இடமாக ஆனால் பழம், புஸ்பம் இவை மூலம் அதிகமான தனத்தை பெறுகின்றான். நல்லவர்கள் அனுபாவிக்க கூடிய பெரியோர்கள் மூலம் இவன் அனுபவிக்கின்றான்.

மீனம் 2 ஆம் இடமானால் நெம நிஸ்டைகள், உபவாசம் ஆகியவற்றால் தனம் கிடைக்கிறது. வித்தை மூலமாகவும், தாய் வழியாகவும், அரசு மூலமாகவும் பொருள் சேரும். புதையல் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

2 ஆம் இடததிபன் அந்தந்த இராசிகளில் இருபதன் பலன்.

லக்னத்திற்கு அடுத்த வீடானது இரண்டாவது ராசியாகிறது. அந்த ராசிக்குரிய அதிபதி:

லக்னதிலிருந்தால் பணக்காரன் ஆனால் கருமி. சுயநலம் கொண்டவர். வியாபாரி, சுகஜீவி, அழகான புருஷ அமைப்பு கொண்டவர்.

இரண்டாம் வீட்டில் இருந்தால் அமைச்சராகும் அந்தஸ்து. பெரிய குடும்பம், நவமணிகளை அணிய கூடியவர்.

மூன்றாம் இடதிலிருந்தால் துஷ்டன்; அதே சமயம் பயம் உள்ளவன். சகோதர்களுக்கு எதிரி.

நாலமிடதிலிருந்தால் தாய் தந்தை இடம் தனம் பெறுபவர். ஆத்மா சக்தி உள்ளவர். நீண்ட ஆயுள். (இரண்டாமிடததிபன் இந்த வீட்டில் பாப கிரகமானால் ஏழையாகவும் நோயுள்ளவராகவும் இருப்பார்).

5 ஆம்இடதிலிருந்தால் லோபி. துக்கமுள்ள்ளவர்; (பபகிரகமானால்) துஷ்டர்.

ஆறாம் இடத்தில சுபகிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவரானால் சத்ருவை நாசம் செய்பவர். பணம் சேர்பதில் சமர்த்தர். பபக்ராகங்களுடன் இருந்தால் வஞ்சகர். தரித்திரர்; கெட்ட சகவாசம் உள்ளவர்.

7 ஆம் இடதிலிருந்தால் நல்ல ரூபம் உள்ளவர். மனைவியை அதிகமாக நேசிப்பவர்; நிறைய புத்திரப் பெரு உள்ளவர்.பாப கிரகத்துடன் கூடி இருந்தால் குழந்தை அற்றவர்.

எட்டாம் இடத்திலிருந்தால் வாயு சரீரம்; நல்ல எண்ணமுடையவர்.

ஒன்பதாம் இடதிளிருண்தால் கொடையாளி; பலம் உள்ளவர்; விரத அனுஷ்டானம் உள்ளவர். பாப கிரகத்துடன் கூடினால் தாழ்ந்த்தவர்; தரித்திரர்.

1௦ ஆம் இடதில் இருந்தால்அரசு தொடர்பு, தாய் தந்தையரிடம் பக்தி, சுகஜீவி, அழகன், பாபர் இருந்தால் பெற்றோருக்கு இவரே எதிரி.

11 ஆம் இடதிலிருந்தால்  லட்சமி கடாச்சம் பொருந்தியவர். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.

12 ஆம் வீட்டில் பாபருடன் இருந்தால் துஷ்டன்; தூர தேச தீவுகளில் வாழ நேரிடும்; தன்னைவிட அறிவில் தாழ்ந்தவர்களுடன் சிநேகம் உள்ளவர்.

2 ஆம் இடத்தை இதர கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள். சூரியனால் பார்க்கப்பட்டால் தந்தையின் சொத்தை நாசமாக்குபவன்; பராகிரமசலி, சுகஜீவி

சந்திரனால் பார்க்கப்பட்டால் குடும்ப சுகம் உள்ளவன்; வம்ச விருதியுடையவன்; சரீர நலிவுல்லவன்; தண்ணீரால் பீடைகள் ஏற்பட கூடும்.

செவ்வாயின் திருஷ்டி இருக்குமானால் குடும்ப சுகம் இல்லை. தனலாபம் இல்லை; தீராத வயிற்று வழி உள்ளவர்.

புதனால் பார்க்கப்பட்டால் எப்பொழுதும் ஒப்பற்ற தன சுகம் உள்ளவர்; வஞ்சகர்.

குருவினால் பர்ர்கப்பட்டால் பாக்கியவான். நல்ல குணம் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.

சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஒவ்வொருநாளும் தன சுகம்; உறவினருக்கு உதவுபவன்; பகைவர்களை நாசம் செய்பவன்.

சனியினால் பார்க்கபட்டால் பணத்தை விரயம் செய்பவன். தனது சொந்தகாரர்களையே சத்ருகள்ளக நினைப்பவன்.

சில கிரகங்கள் 2 ஆம் இடத்தில கூட்டாக இருப்பதன் பலன். சூரியன், சனி, செவ்வாய் இருந்தால் தனநாசம்

சூரியன் செவ்வாய் இருந்தால் குலதோசம் சூரியன் பாபர்களின் செர்கையோடு இருந்தால் செல்வத்தை அள்ளிக்கொடுப்பன். க

ுரு 2 க்குடையவனாகி 2 ஆம் இடத்திலேயே இருந்து செவ்வாயுடன் கூடுவானாகில் குபேரனுக்கு ஒப்பாக வாழ்வான்.

2 ஆம் இடத்து அதிபதி உச்சம் நீசம் முதலிய வீடுகளில் இருபதால் ஏற்படும் பலன்கள் 2 க்குடையவன் சுபக்கிரகமாகி தனது உச்ச வீட்டிலோ. கேந்திரதிலோ நட்பு வீட்டிலோ, சுபரின் வீட்டிலோ இருக்கப் பிறந்தவன் தனது வாக்கின் திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்ற வல்லவன்.

2 ஆம் இடத்தில 2 க்கு உடையவன் இருந்தாலும் புதனோ சுக்கிரனோ 2க்கு உடையவன் ஆனாலும் அல்லது 2 க்கு உடையவன் நட்பு வீட்டில் இருந்தாலும் மக்கள் போற்றும் பரோபகரியாக விளங்குவான். திரிகோண வீட்டில் இருந்தால் பணக்காரனாக மட்டும் ஆவான்.

2 க்கு உடையவன் 12 ல் இருந்த போதிலும் இரண்டு கிரகங்களுடன் சேர்ந்து இருப்பானேயானால் அதிகமான் செல்வத்தை பெறுகிறான்.

2 க்கு உடையவான் உச்ச வீட்டில் இருந்து குருவினால் பார்க்கப்பட்டால் ஆயிரம் பேர்களை காப்பார்ருபாவனாக அமைகிறான்.


மூன்றாம் பாவம்

சகோதரர், வேலைகாரர், தைரியம் ஆகியன பற்றி மூன்றாம் இடத்தில அறியகூடும்; மேஷம் மூன்றாம் பாவமானால் படிப்பாளி, பரோபகாரி, சுகசரீரம் உள்ளவன்.

ரிசபம் மூன்றாம் பாவமானால் புகழ் பெற்றவன். வள்ளல். அரச செல்வாக்கு உள்ளவன்.

மிதுனம் மூன்றாம் இடமானால் வாகன சுகம் உள்ளவன். பெண்களிடத்தில் பிரியமாக நடப்பவன். அரசர்களின் நேசம் உடையவன்.

கடகம் மூன்றாம் இடம்மாக அமையும் போழுது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபடுபவனாகவும் அமைகிறான்.

சிம்மம் மூன்றாம் இடம்மாக அமையும் போழுதுபிறரின் பணத்தில் ஆசையுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.

கடகம் மூன்றாம் இடமாகும் போது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவனாகவுன் அமைகின்றான்.

சிம்மம் மூன்றாம் வீடாகும் போது ஜாதகன் பிறரின் பணத்தில் ஆசைவுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.

கன்னி மூன்றாம் இடமாக அமைந்த ஜாதகன் சாஸ்திரத்தில் பற்று உள்ளவனாகவும், ஒழுக சீலனாகவும் விருந்தோம்பல் பண்பாடு கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகின்றான்.

துலாம் மூன்றாமிடமாக அமைந்தால் வெறுக்கத்தக்க சுபாவம் கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகவும் ஆகின்றான்.

விருச்சிகம் மூன்றாமிடமாக அமைந்தவனுக்கு செய்நன்றி மறந்த பாபர்களும், செலவு செய்வதையே குறியாக கொண்டவர்களும், வம்பிளழுப்பவர்களும் சேர்ந்து விரோதத்தை விளைவிப்பவர்கள்.

தனுசு மூன்றாமிடமாக அமைந்தவன் வீரர்கள், செல்வர்கள், தர்ம மார்க்கத்தில் இருபவர்களின் நட்பை அடைகின்றான்.

மகரம் மூன்றாம் இடமாக அமைந்தவனுக்கு எப்போதும் சுகம் கிடைக்கிறது. தெய்வ வழிபாடு; குருபக்தி; நிறைந்த செல்வம், ஒப்பற்ற பாண்டித்தியம் காரணமாக நல்ல குருமார்கள் அமைகிறார்கள்.

கும்பம் மூன்றாம் இடமாக பிறந்த மனிதன் பொறுமை, கீர்த்தி, சத்தியம் மிக்கவர்களோடு நண்பன் ஆகின்றான். சில சமயம் வஞ்சகர்களோடும் சிநேகம் கொள்ள நேரிடும்.

மீனம் மூன்றாமிடமாகும் போது மிகுந்த செல்வம் நிறைய பிள்ளைகள் உடையவனாகின்றான். புண்ணியவான். அதிதிகளிடம் பிரியம் உள்ளவன். எல்லா ஜனங்களுக்கும் பிடிதவனுமாகின்றான்.

3 ஆம் பாவதிபதி பன்னிரண்டு ராசிகளிலும் இருப்பதன் பலன்

3க்கு உடையவன் லக்னதிலிருன்தால் பந்துகளின் இடையூருளால் இல்லற சுகத்தை அனுபவிக்க இயலாதவனாகின்றான். அடிமைத்தொழில்.

3க்கு உடையவன் இரண்டாம் இடத்தில இருந்தால் பிச்சை எடுக்க நேரிடும்.

3க்கு உடையவன் மூன்றாமிடதிலேயே இருந்தால் பிறரை நண்பனாக்கி கொள்வதில் சமர்த்தன்; குருவிடம் பற்றும் ராஜ சேவையும் மேலான் தனமும் உடையவன்.

3க்கு உடையவன் நான்காம் இடத்தில இருந்தால் உறவினர்கள் இருந்தால் பித்தம்; வயிற்றில் சாஸ்திர சிகிச்சை; தாயுடன் சண்டை; தந்தையினுடைய  பொருளை அழிப்பவன்.

3க்கு உடையவன் 5 ஆம் இடத்திலிருந்தால் உறவினர்கள் அதிகம், சுகவாசி; பிறருக்காக உதவி செய்பவன்; அழகிய சரீரம் உடையவன்; நீண்ட ஆயுள்.

3க்கு உடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் கண்ணில் ஏதாவது கோளாறு; சத்ருக்கள் நிறைந்தவன்; சகோதரர்களாகவும், விளங்குகளாலும், வியாதிகளாலும் சாதுக்களாலும் துன்பத்தை அடைவான்.

3க்கு உடையவன் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்களிடம் சண்டை இடுபவன்; மனைவி நல்ல அழகுடன் அமைந்தவராயினும் வேறு ஸ்திரீயின் பாவம் நிறைந்த வீட்டை நாடிசெல்வான்.

3க்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்து பாபகிரகங்களும் சேர்ந்திருந்தாலும் ஜாதகன் மிகுந்த கோபம் உடையவனாகவும் இறந்து போன சகோதரன் பந்துக்களுடைய குடும்பத்தில் பிறந்த்வானாகவும் இருப்பான்

3க்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் இளமையான தோற்றம்; சோலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழவேண்டும் என்ற விருப்பம் உள்ளவனாகவும், நல்ல விசயங்களில் புத்தியை செலுத்துபாவனாகவும் இருப்பான்.

3க்கு உடையவன் 1௦ ஆம் இடத்தில் இருந்தால் தகப்பன் வழியிலும் அரச வழியிலும் சுகம் உண்டாகும். தூய்மையே விரும்புவான்.

3க்கு உடையவன்  11 ஆம் இடத்தில் இருந்தால் பராகிரமம் உடையவன். பந்துகளின் உதவி எப்போதும் கிட்டும். சிறந்த நிபுணன். சுகவாசி.

3க்கு உடையவன் 12 ல் இருந்தால் செலவாளி, நண்பனே சத்ருவாக மாறுவான்.

மூன்றாம் பாவத்திற்க்கு பிற கிரகங்களின் பார்வையால் ஏற்படும் பலன்கள்

3 ஆம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் முன் சகோதரன் இல்லாமல் போகின்றார்.

3 ஆம் இடம் சந்திரனால் பார்க்கப்படால் சகோதரிகள் அதிகம் உடல் வலு அற்றவர்.

3 ஆம் இடம் செவ்வாய்யால் பார்க்கப்பட்டால் பராகிரமம் உள்ளவர். சகோதர்களை இழப்பார்.

3 ஆம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் சகோதர சௌக்கியம் கொண்டவர்.

3 ஆம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் தகப்பன் மூலம் செல்வ வரவு ஆனாலும் தகப்பனை பிரிவார்.

3 ஆம் இடம் சுகிரனால் பார்க்கப்பட்டால் பெண் குழந்தை பிறப்பதனால் வேறு தேசம் செல்லுபவர்; அரசினால் உதவியுண்டு.

3 ஆம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பராக்கிரமம் உள்ளவர். பலவான்; சகோதர வர்கத்துக்கு சௌக்கியம் இல்லை.

3 ஆம் பாவாதிபதிக்கு வேறு கிரகங்களின் சேர்கையால் உண்டாகும் பலன்கள்.

லக்னத்தில் குரு 3 ஆம் இடத்ததிபனுடன் கூடி இருந்தால் நாற்கால் பிராணிகளுக்கு சேதம்.

3 ஆம் இடத்ததிபன் ராகுவுடன் கூடி லக்னத்தில் இருந்தால் பாம்பினால் பயம்.

3 ஆம் இடத்ததிபன் புதனுடன் சேர்ந்தால் கழுத்தில் ரோகம், கண்டமாலை, உள்நாக்கு படருதல் போன்ற நோய்கள் வரலாம்

3 ஆம் இடத்ததிபன் ஆறாம் இடத்தில் இருந்து பாபக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் விஷபயம்

3 ஆம் தனுசு ராசியாக இருந்து செவ்வாயின் சேர்கை இருந்தால் காதில் ரோகம்.

3 ஆம் இடத்ததில் சனியிருந்து மாந்தியுடன் கூடினால் வாயுரோகம்.

3 ஆம் இடம் பாபரின் வீடாகி பாபகிரகம் கூடுமானால் ஜாதகனுக்கு நாசம். அதுவே சுபரின் வீடானால் சகோதர ஒற்றுமை ஏற்படும்.

3 ஆம் இடத்ததிபனோடு ஸ்திரீகிரகங்கள் 9 ஆம் இடதிலிருந்தால் சகோதரிகளும், புருஷகிரகங்கள் அங்கிருந்தால் சகோதரர்களும் உண்டாவர்.


நான்காம் பாவம்

மனதின் நிலை, விவசாய பலிதம், தாய் உறவினர்கள், சரீர விருத்தி, வாஹனம் முதலியவற்றை  பற்றி அறிந்து கொள்ள ஒருவனுடைய ஜாதகத்தில் நான்காம் வீடு உதவுகிறது.

நான்காம் பாவம் மேஷமானால் கால்நடைகளாலும், பெண்களாலும், நல்லுனர்வுகளாலும், பராக்கிரமதால் சம்பாதிக்கப் பெற்ற போகங்களாலும் சுகத்தை அடைகின்றான்

நான்காம் பாவம் ரிஷபமானால் ராஜ சேவையினாலும் நியம நோன்புகளாலும், வெகுமதிகளாலும் சுகத்தை அடைகின்றான்.

நான்காம் பாவம் மிதுனமானால் காடுகள், நீர் நிறைந்த பகுதிகளில் வாழ்க்கை அமையும். பெண்களால் லாபம் அடையக் கூடியவன்; நல்ல பணியாளர் அமைவர்.

நான்காம் பாவம் கடகமானால் அழகன், பாக்கியவான், ஒழுக்க சீலன்; கலைகளில் ஈடுபாடு கொண்டவன்.

நான்காம் பாவம் சிம்மானால் அதிக கோபத்தால் பலரின் நட்பை இழந்தவன். பெண் குழந்தையே பிறக்கும். கெட்டவர்களின் செர்கையுடயவன்.

நான்காம் பாவம் கண்ணியானால் துர்புத்தியுள்ளவன்; திருடன், சண்டைக்காரன், கொள் சொல்லுபவன்; துப்பறியவல்லவன்.

நான்காம் பாவம் துலாராசியானால் சுபகாரியங்களை முன்னின்று நடத்துபவன். கல்வி கலைவல்லோன். தெளிந்த சித்தமும் செல்வமும் வாய்ந்தவன்.

நான்காம் பாவம் விருசிகமானால் கொடுமையான சுபாவமுள்ளவன். கோழை; சாமர்தியமற்றவன்.

நான்காம் பாவம் தனுசானால் ராணுவத்தில் வேலை செய்பவன்; நல்ல சுபாவமுடையவன்; விஷ்னுவை வழிபடுபவன்.

நான்காம் பாவம் மகரமானால் நீர்நிலை பகுதிகளில் வசிப்பவன். பிறருடைய தாகத்தை போக்கவல்ல தண்ணீர்ப் பந்தல் முதலியன வைப்பவன். காமகுனம் கொண்டவன்.

நான்காம் பாவம் கும்பமானால் பெண்ணால் செல்வசுகம் அடைபவன். நல்ல உணவுகளை ருசிப்பவன். துஷ்டனுக்கு உதவி செய்பவன்

நான்காம் பாவம் மீனமானால் விசித்திர ஆடைகளை அணிபவன்; செல்வம் உள்ளவன்.

4குடையவன் லக்கினம் முதல் 12 ராசிகளிலும் இருபதால் விளையும் பலன்கள்

லக்னதிலிருந்தல் வியாதியற்ற, கவர்ச்சி மிக்க தோற்றம். வாகன சுகம். நல்ல பொருள்களின் லாபம். ஆகியன அமைகின்றன

2 ஆம் இடதிலிருந்தால் பாபக் கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் தந்தைக்கு விரோதியாகின்றான். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் தந்தைக்கு நலம். பக்திமான். ஸ்ருதி சாஸ்திர பண்டிதன்.

3 ஆம் இடதிளிருந்தால் தந்தைக்கு ஆதரவாளன். ஆனால் தாயுடன் சண்டையிடுபவன். வேளாண்மையால் விருத்தியடைவான். நண்பர்களை மிகுதியாககொண்டவன்.

4 ஆம் இடத்திலிருந்தால் சுகானுபவத்தில் அரசனுக்கு ஒப்பாவான்; நல்ல புத்திர பாக்கியமுடையவன்; மக்களால் பாராட்டப் பெற்றவன்.

5 ஆம் இடத்தில இருந்தால் நீண்ட ஆயுள்; புத்திமான்; வேதப்பயிற்சி மிக்கவன். கையெழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளலம்.

6 ஆம் இடத்திலிருந்தால் பகைவர்கள் மிகுதி; தாய் மாமனால் வஞ்சிகப்படுவார். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சுகவாசி.

7 ஆம் இடத்திலிருந்தால் தேவர்களுக்கு ஒப்பான அழகிய வடிவம் அமைந்தவர். பெண்களுக்கு பிடித்தமானவர். பாபகிரகங்கலிருந்தால் மிக வஞ்சகன்; கொடியோன்

8 ஆம் இடத்திலிருந்தால் சுபகிரகங்கள் கூடினால் நோயுள்ளவன். தாய் தந்தையரும் சுகமடையார். பாபக் கிரகங்களிருந்தால் அதிகச் செளவாளி. அதனால் செல்வம் யாவும் தொலைத்து விட்டுத் தெருவில் நிற்பான்.

9 ஆம் இடத்திலிருந்தால் தகப்பனால் சொத்து சுகங்கள் பெறுவான்; உயர்ந்த நண்பனின் உதவி கிடைக்கும். கிணறு குளம் முதலியவற்றை அமைத்து கொடுத்து பொது ஜனங்களிடையே  தர்மவானாகிறான். பொறுமையை விரதமாக மேற்கொள்பவன்; அழகிய விழிகள்; அயல் நாடு சென்று தங்கி சுகம் பெரும் யோகமும் உண்டு.

1௦ ஆம் இடத்திலிருந்தால் மனைவி யோகமுடையவன்; தாய் தந்தையருக்கு நீண்ட ஆயுள் வாய்க்கிறது; அந்த வகையில் லாபமுடையவன்.

11 ஆம் இடத்திலிருந்தால் தகப்பனை ரட்சிப்பவன்; பல வகையில் வருமானம் உள்ளவன். நற்காரியங்களையே செய்பவன்.

12 ஆம் இடத்திலிருந்தால் பாபக்கிரகங்களின் சேர்க்கையினால் தந்தைக்கு ஆகாது. அவன் வெளிநாடு போய் விடுவான். சுபர்கள் இருந்தால் தந்தைக்கு சுகத்தை கொடுப்பவன்.

நான்காம் பாவத்துக்குப் பிற கிரகங்களின் பார்வையால் ஏற்படும் பலன்கள்.

நான்காம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் தாய்க்கு பீடை; ஆனால் புண்ணியவான், கீர்த்தி பெறுவான்.

நான்காம் இடம் சந்திரனால் பார்க்கப் பட்டால் ஆயுள் குறைவு. சுகக் குறைவு.

நான்காம் இடம் செவ்வாயினால் பார்க்கப் பட்டால் நான்காவது ஆண்டு தாய்க்கு கண்டம். அரசனாலும் பூமியினாலும் சுகம். ஜாதகனின் பார்வை பட்டாலே பகைவர் ஓடுவர்.

நான்காம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் தாய்க்கு அதிகமான சௌக்கியமும் அரசு வழியில் ஆதாயமும் செல்வப் பெருக்கும் பிதாவின் தனமும் காமசுகமும் கிடைக்கிறது.

நான்காம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் பண்டிதனாவான். உறவினர் உதவியும் வாகன சுகமும் கிட்டும்.

நான்காம் இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் மாதாவின் மகிழ்ச்சிக்கு குறைவிராது. வாகன சுகம் உண்டு

நான்காம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பிதாவின் தாயாருக்கு (பாட்டிக்கு) மரணமுன்டாகும். 4, 6 வயதுகளில் கடுமையான கண்டம்


ஐந்தாம் பாவம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 ஆம் இடம் புத்திர பாவத்தை குறிப்பதாகும். புத்தி, மந்திரம், நீதியின் நிலை, இருதயம், சக்தி ஆகியவற்றையும் 5 ஆம் இடத்தை கொண்டு அறியலாம்.

ஐந்தாம் இடம் மேஷமானால் பிரியமான புத்திரன் அமைகிறான். தேவதையின் அருள் கிடைக்கிறது. குடும்ப சொத்தை வாரிசாக பெரும் அமைப்பு உண்டு.

ஐந்தாம் இடம் ரிஷபமானால் நல்ல அழகுள்ள பெண்கள் பிறப்பார்கள். இவள் கணவனுக்கு ஏற்ற மனைவியாய் அமைந்தாலும் சந்ததி இருக்காது.

ஐந்தாம் இடம் மிதுனமானால் அழகுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். கலைத்துறையில் வளர்ச்சி பெறுவார்கள். இசைத்துறையில் பரிமளிப்பார்கள்.

ஐந்தாம் இடம் கடகமானால் சாந்த சுபாவமுள்ள குழந்தைகளை ஜாதகர் அடைவார். காமுகனாக ஆண் பிள்ளை அமையவும் கூடும்.

ஐந்தாம் இடம் சிம்மம் ஆனால் குரூர குணம், மாமிச பிரீதி, நேர்மையற்ற போக்கு, அதிகப்பசி, வேற்றுதேசம் போதல் ஆகிய குணங்களையுடைய பிள்ளைகளே பிறப்பார்கள்.

ஐந்தாம் இடம் கன்னியானால் பெண் குழந்தையே பிறக்கும். அப்பெண்ணுக்கு சந்ததி இருக்காது. ஆனாலும் கணவனிடத்தில் அன்பும் புண்ணிய நோக்கும்.ஆபரணங்களில் விருப்பம் உடையவள்.

ஐந்தாம் இடம் துலாம் ராசியானால் ஒழுக்கம்  அழகு கம்பீரமான கவர்ச்சிப் பார்வையுடைய பிள்ளைகள் பிறப்பார்கள்

ஐந்தாம் இடம் விருசிகமானால் தோசமின்மை, நல்ல தோற்றம் தர்மத்தில் பற்று, நல்ல நட்புடைய பிள்ளைகள் வாய்க்கும்.

ஐந்தாம் இடம் தனுசு ஆனால் கெட்டபுத்தி, பாபச்செயல், அதிர் நடை ஆகிய குணங்கள் கொண்ட பிள்ளைகள் பெற வேண்டிய நிலை ஏற்படும்

ஐந்தாம் இடம் மகரமானால் வேட்டையில் பிரியமும், பகைவரை ஒழித்துக் கட்டும் திறமையும், அரச சேவையில் ஈடுபாடும் உள்ள புத்திரர்கள் பிறப்பார்கள்.

ஐந்தாம் இடம் கும்பமானால் கட்டுடல், தன தானிய சேர்கை, வெகு நல்ல குணமுடைய புத்திரன் கிடைக்கும். ஆனால் அவனுக்குப் பிறகும் பையன் இந்த பிள்ளைக்கு கெட்ட பெயரயே பிற்காலத்தில் தேடித் தருவான்.

ஐந்தாம் இடம் மீனமானால் நோயற்ற வாழ்வு, நல்ல ரூபம், எப்பொழுதும் சிரித்த முகம், நகைச்சுவையான பேச்சுடன் கூடிய பிள்ளைகளை அடையும் யோகமுண்டு.

5 ஆம் பாவாதிபதி லக்கினம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதனால் ஏற்படும் பலன்கள்.

5 குடையவன் லக்னத்தில் இருந்தால் புதிரர்களினால் சுகம் பெறுவான். அந்தப் பிள்ளைகளில் யாருக்கேனும் மந்திரசித்தி கிடைக்கிறது. ராஜாங்க சேவை செய்யும் வாய்ப்பும் சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளும் போக்கும் உள்ள பிள்ளைகள் அமைகிறார்கள். விஷ்ணு பக்தி நிறைந்த பிள்ளை கிட்டவும் வாய்ப்பு இருக்கிறது.

5 குடையவன் இரண்டாமிடதில் இருந்தால் பிறக்கும் பிள்ளை குடும்ப விரோதி, தீயோரின் சேர்கை உள்ளவன்.

5 குடையவன் மூன்றாம் இடத்தில இருந்தால் பிறகும் பிள்ளை பராக்கிரமசாலி, வாக்கு சாதூர்யம் நிறைந்தவன். சாந்த குணம். சுகபோகி.

5 குடையவன் நான்காம் இடத்தில இருந்தால் தந்தைக்கு அன்பன்; பெரியோர்களிடம்  ஈடுபாடு. துணிவியாபாரம் லேவாதேவி நடத்தல் ஆகிய தொழிலில் இந்தப் பிள்ளை ஈடுபடுவான்.

5 குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் பிள்ளை புத்திமான்; ஆற்றல் மிக்க பேச்சாளன்; சுருக்கமாக சொன்னால் புருஷ ஸ்ரேஷ்டன்

5 குடையவன் 6 ஆம் இடத்தில இருந்தால் மிகுந்த தோஷமுள்ள பிள்ளை பிறப்பான்

5 குடையவன் ஏழாம் இடத்தில இருந்தால் ஜாதகருடைய பத்தினி உறவினர்களுடன் அன்பு கொண்டவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், சிறுத்த இடையுள்ளவளாகவும் அமைந்து நல்ல புத்திரர்களை பெறுகின்றான்

5 குடையவன் எட்டாம்மிடதிலிருந்தால் அங்கத்தில் ஈனம் ஏற்படும் பிள்ளை தோன்றுவான். கோபம், கெட்ட பேச்சு, கெட்ட நடத்தை, வஞ்சகம், தரித்திரம் ஆகியவை இவன் கூட பிறந்த குணங்கள்.

5 குடையவன் ஒன்பதாம் இடத்திலிருந்தால் ஜாதகருடைய புத்திரன் சண்டையை தீர்த்து சமாதானப் படுத்தி வைப்பதில் சமர்த்தன். அரசனால் தரப்பட்ட வாகனம் உள்ளவன்; கலை வல்லவன்.

5 குடையவன் பத்தாம் இடத்தில இருந்தால் அரசுப் பணியுடன் பற்பல வகைகளிலும் போருலீடுபவன். பெண்களிடம் பிரியமுள்ளவன்.

5 குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் பிள்ளை சங்கீத வித்வான் ஆகும் பெரு பெற்றவன். அரசர் போற்றும் புகழ் மிக்கவன்.

5 குடையவன் 12 ஆம் இடத்திலிருந்து பபகிரகங்களுடன் சேர்ந்தால் எவ்வளவு செலவு செய்தும் மகப்பேறு வாய்காதவள்; வாய்த்தாலும் ஒரு சுகமும் கிட்டாது. வெளிதேச தொடர்பு கொண்டு போருளீடுவான்.

5 ஆம் கிரகத்தை பிற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

5 ஆம் இடமானது சூரியனால் பார்க்கப்பட்டால் முதலில் பிறந்த சகோதரர்க்கு ஆகாது; வாயு பீடை எப்போதும் இருக்கும்.

5 ஆம் இடமானது சந்திரனால் பார்க்கப்பட்டால் நண்பர்களால் சுகம் உண்டாகிறது. பிறந்த உலகத்துக்கு பெருமை தேடித் தருபவன். வேறு தேசத்தில் வியாபாரம் செய்து ஜீவிக்க கூடியவன்.

5 ஆம் இடமானது செவ்வாயினால் பர்கப்பட்டால் முதலில் பிறந்த பிள்ளை நாசம் ஆகிறது. பிச்சை எடுக்கும் நிலையம் ஏற்படுகிறது.

5 ஆம் இடமானது புதனால் பார்க்கப்பட்டால் புத்திரி ஜெனனம்; கீர்த்தி ஐஸ்வர்யம் கிட்டும்.

5 ஆம் இடமானது குருவால் பார்க்கப்பட்டால் அதிகமான சந்தான சௌக்கியம், சாஸ்திரங்களில் தேர்ச்சி, நீண்ட ஆயுள், நிறைந்தத செல்வம் உண்டாகிறது.

5 ஆம் இடம் சுகிரனால் பார்கப்பட்டால் முதலில் புத்திரனும் பிறகு பெண்ணும் பிறக்கும்; ஜாதகன் கல்வி, செல்வம் இரண்டையும் பெறுகின்றான்.

5 ஆம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் புத்திர சுகம் இல்லை. குலப் பற்று கொண்டவன்


ஆறாம் பாவம்

லக்னத்திற்கு ஆறாம் வீடு ரோகஸ்தானம் அல்லது பகைஸ்தானம் என அழைக்கப் படுவதை நாம் அறிவோம். சத்துரு, நோய், இடையூறு, அடிபடுதல் முதலியவற்றைக் குறிக்கும் இடமாகும்.

மேஷம் ஆறாம் இடமானால் தெளிவான சிந்தனை, பகைவர்களை அழித்தல், செய்யும் காரியங்களில் வெற்றி, கன்று, மாடு, தனம், சேர்கை, செல்வாக்குப் பெறுதல் ஆகிய அமைப்புகளை ஜாதகர் பெறுவார்.

ரிஷபம் ஆறாம் இடமானால் கால் கால்நடைகள் விஷயத்தில் எப்பொழுதும் சண்டை, தன் மக்களாலும், மக்கள் வர்க்கத்தாலும் அடிக்கடி சண்டை ஏற்படும். பெண்களின் செர்கையாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சி உண்டு.

மிதுனம் ஆறாம் இடமானால் எப்பொழுதும் பெண்களால் வம்பு சண்டை விரோதம் இருக்கும்.. பலருடைய பாபத்திற்கு ஆளாக நேரிடும். இருபினும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களாலும், தாழ்ந்த ஜனங்களின் சிநேகிதத்தாலும் நன்மை உண்டு.

கடகம் ஆறாம் இடமானால் சகோதர்களும், புத்திரர்களும் அதிகம் உடையவன்; வைதீகத்தில் சிறந்தவர்களுடன் நட்பு கொண்டவனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விரோதியாக அமைகின்றான்.

சிம்மம் ஆறாம் இடமானால் தனது மகளுடன் தீராத விரோதம் உடையவன், பந்து ஜனங்களுடன் அவ்வாறே சண்டை சச்சரவு உடையவன். பொருள் வரவு நிறைய இருந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் செல்வதும் இந்த அமைப்பின் பலனாகும். வரவும் செலவும் பெரும்பாலும் பெண்களால் ஏற்படக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி ஆறாம் இடமானால் ஜாதகன் சாதுக்களிடதிலோ தர்ம காரியங்களிலோ ஈடுபாடு கொள்வதில்லை. மாறாக அவற்றில் வெறுப்பு கொள்ளவும்.செய்கின்றான். வீட்டிலும் வெளியிலும் எப்பொழுதும் இவனுக்கு எதிரிகள் இருப்பர்கள்.

துலாம் ஆறாம் இடமானால் தன் முதலாளியோடு முரன்பாடு கொள்பவர்கள். கெட்ட நடத்தையுள்ள பெண்களாலும் சொந்த மனைவியாலும் எப்பொழுதும் தொல்லை இருக்கும்.

விருசிகம் ஆறாம் இடமானால் பிராமணர்களுக்கு எதிரியாவான். பலவிதமான பாம்புகளால் இவன் அவதிப்பட நேரிடும். மதம் பிடித்த யானைகளாலும் ஜாதகனுக்கு தொந்தரவு ஏற்படும். திருடர்கள் இவனுடைய பொருளை அபகரித்து செல்வர்.குதிரை முதலிய வாகனங்களால் சில சமயங்களில் பீடை ஏற்ப்படும். பெண்களாலும் தொல்லைகள் உண்டு.

தனுசு ஆறாம் இடமானால் வேடர்கள் வில்லேந்தியவர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் அசையும் பொருள்கள் அசையாப் பொருள்கள் ஆகியவற்றால் தொல்லைகள் இருந்து கொண்டிருக்கும். ஜாதகரை ஏமாற்றிப் பொருளை பறித்து செல்பவரும் உண்டு.

மகரம் ஆறாம் இடமானால் கொடுக்கல் வாங்கல் மூலம் தகராறு, வீட்டு மனைகளின் மேல் தொல்லைகள், ச்நேகிதபகை ஏற்படும். சாதுக்கள் கூட இவனை நல்லவன் என கூற மாட்டார்கள்.

கும்பம் ஆறாம் இடமானால் குளம் ஆறு முதலிய நீர் நிலைகளில் இறங்கி குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்கு ஆதரவாக இருக்கும் முதலாளியிடம் பகை ஏற்ப்படலாம்.

மீனம் ஆறாம் இடமானால் தன் மக்களாலும் மனைவி மூலம் பிற உறவினர்களிடமும் பகை ஏற்படும். ஜாதகரும் அவர் தந்தையும் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வாழ்வர்

ஆறுக்குடையவன் அந்தந்த ராசிகளில் இருப்பதன் பங்கு

ஆறுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் நல்ல பலமுடையவன். பகைவர்கள் இவனை ஒன்றும் செய்ய முடியாது. மாடு கன்று வசதி உடையவன். ஆனாலும் சொந்தக்காரர்களால் துன்பத்திற்கு ஆளாவான்.

ஆறுக்குடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தால் கெட்டிகாரன். கொடூர வார்த்தைகள் பேசுவான்.செல்வம் சேர்ப்பதில் திறமைசாலி. பலருக்கு மத்தியில் புகழோடு வாழக் கூடியவன். இருப்பினும் மனதை வீணாகக் குழப்பிக் கொள்பவன். அடிகடி வரும் நோயினால் உடல் இளைத்தவன்.

ஆறுக்குடையவன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் வஞ்சனை உள்ளவர்களிடம் கூடியிருபவன். பல தொழில் செய்பவன். தகப்பனார் தேடி வைத்த சொத்துகளை நாசம் செய்பவன். அதிகமான கோபமுடையவன். இருபினும் உடனே கோபம் தணிந்து சாந்த நிலைக்கு வரக்கூடியவன்.

ஆறுக்குடையவன் நான்காம் ராசியில் இருந்தால் தந்தையின் பக்கம் சேர்ந்து கொண்டு குடும்பத்திற்கு கலகம் விளைவிப்பன். தந்தையினாலும் மகனாலும் பொருள் வரவு உடையவன். உடல் வலிமை உள்ளவன். சபல உள்ளம் படைத்தவன்.எப்பொழுதும் சரீரத்தில் நோய் நலிவு உடையவன்.

ஆறுக்குடையவன் 5 ஆம் பாவத்தில் இருந்தால் தந்தையோடும் மக்களோடும் ஓயாமல் சண்டை இடுபவன். பாபக் கிரகங்களின் சேர்கை இருந்தால் இளம் புத்திரர்கள் சுபகிரக யோகமிருந்தால் யாவராலும் பாராட்டத் தகுந்தவனாகவும் செல்வம் மிக்கவனாகவும் திகழ்வான்.

ஆறுக்குடையவன் ஆறாம் பாவத்திலேயே இருந்தால் சொந்த ஊரில் சுகமுடையவன் மக்கட்பேற்றில் பிரியமுடையவன்கஞ்சன் துஷ்டன் சிநேகிதம் உடையவன். அவர்களால் தொல்லையையும் சந்திக்க கூடியவன்.

ஆறுக்குடையவன் 7 ஆம் பாவத்தில் இருந்தால், பாவக் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்கிறவன். பெண் பித்தன். பகையினால் விஷத்தையும் தருபவன். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நல்ல அழகு மிக்க மக்களை உடையவன்.

ஆறுக்குடையவன் எட்டாம் பாவத்தில் இருந்தால் வயிற்றுக் கோளாறினாலோ, விஷத்தினாலோ மரணம் அடைவான்.

ஆறுக்குடையவன் சூரியனாகி எட்டில் இருந்தால் அரசனாவான்.

ஆறுக்குடையவன் சந்திரனாகி எட்டில் இருந்தால் அற்ப ஆயுள். திடீர் மரணம் ஏற்படும்.

ஆறுக்குடையவன் குருவாகவோ, சுக்ரனாகவோ அமைந்து எட்டில் இருந்தால் கண் மூலம் ஆபத்து நேரிடும்.

ஆறுக்குடையவன் 9 ஆம் பாவத்தில் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கால்களுக்குப் பங்கம் ஏற்படும். புத்திரன் இருக்க மாட்டான். செல்வம் சேராது. எந்த விதமான சுகமும் இராது.

ஆறுக்குடையவன் 1௦ ஆம் பாவத்தில் இருந்தால் பெற்ற தாயுடன் ஓயாமல் வழக்காடுவான். சபல புத்தி உள்ளவன். துஷ்டன், சுபகிரகங்களுடன் கூடினால் தம்மை வைத்து காப்பாற்றக் கூடிய மகனை பெறுவான்.தன் தந்தைக்கு எதிரியாக இருந்தாலும் தாயை காப்பாற்றுவான்..

ஆறுக்குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் துஷ்டர்களின் சேர்கையுடையவன் அரசினாலும் திருடர்களினாலும் இவனுடைய பொருள் பறிபோகும். சத்துருவின் மூலம் மரணம் உண்டாகும். சுபகிரகத்துடன் கூடினால் சுபகாரியங்களையே செய்பவன் ஆகின்றான்.

ஆறுக்குடையவன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கன்று மாடு முதலிய கால்நடை செல்வங்களை இழப்பான். தன தான்ய சுகம் இவனுக்கு இல்லை. எப்பொழுதும் ஊர் சுற்றியாகவே இருக்க பிரியப்படுவான். இரவு பகல் பாராமல் தனம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பான்.

ஆறாம் இடத்தை இதர கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

ஆறாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பகைவர்கள் இவனிடம் தலை காட்ட முடியாது. வலது கண்ணில் ரோகம் உடையவன். தாயின் மூலம் இவனுக்கு சுகம் இல்லை.

ஆறாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் பகை மேல் பகை வரும். சுபம் வரும்.

ஆறாம் இடம் செவ்வாயால் பார்க்கப்பட்டால் ஜாதகரின் பகைவர்கள் நாசமாவர்கள். அம்மான் மூலமும் இரும்பு ஆயுதங்களினாலும், அக்னியினாலும் எப்பொழுதும் ஆபத்து உண்டு.

ஆறாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் எத்தகைய பகையையும் எதிர்த்து அழிப்பான். அம்மான் மூலம் சுகமடைவான். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பவன். பிறரிடம் குற்றம் சொல்பவன்.

ஆறாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் பகைவர் பெருகுவர். செல்வம் சீரழியும். அம்மானால் தொல்லைகள் ஏற்படும்.

ஆறாம் இடம் சுக்ரனால் பார்க்கப்பட்டால் தாய் மாமனால் நிறைந்த சுகம். பகைவனை நாசம் செய்யக் கூடியவன். மக்களால் போற்றப்படுபவன்.

ஆறாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால்,சத்ருக்களுக்கு நாசத்தை செய்கிறவன். அம்மானுடன் கூடினவன். கண் முகம் கால் இவற்றில் ரணபீடை உள்ளவன். தடிப்பான வார்த்தை பேசுபவன். காய்ச்சல் மயக்கம் இவற்றால் அடிக்கடி பீடிக்கப்படுபவன்.


ஏழாம் பாவம்

ஏழாம் பாவம் ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமாகிறது

மேஷ ராசி ஏழாம் இடமானால் அவனது மனைவி சபல புதியுள்ளவளாகவும் பணத்திலேயே நாட்டமுடையவளாகவும் கெட்டவர்களின் நட்பை நாடுபாவளாகவும், கொடுமையாய் நடந்து கொள்ள கூடியவளாகவும் அமைவாள்.

ரிஷப ராசி ஏழாமிடமானால் அவனது மனைவி அடங்கி பேசுபவளாகவும், வணக்கமுள்ளவளாகவும், பதி விரதையாகவும் தெய்வ வழிபாடு உள்ளவளாகவும் விளங்குவான்.

மிதுன ராசி ஏழாமிடம் ஆனால் மனைவி செல்வமும் அழகும் நன்னடத்தையும் உள்ளவளாகவும் இருப்பாள்.

கடகம் ஏழாமிடமாக அமைந்தால் மனைவி கணவனது மனதிற்குப் பிடிதவளாகவும் அவனுடைய சொல்லை தட்டாதவளாகவும் அழகுள்ளவளாகவும் அமைவாள்.

சிம்மம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் தீவிரமானவளாகவும், தைரியமுள்ளவளாகவும் கடுங்குரல் படைத்தவளாகவும் ஓயாமல் பிறரின் வீடு சுற்றுபவளாகவும் இருப்பாள். இளைத்த சரீரமும் ஒரு சில குழந்தைகளும் உடையவள்.

கன்னி ஏழாமிடம் ஆனால் மனைவி அழகுள்ளவள்; அனால் புத்திரன் அற்றவள்; சௌபாக்கியம் நிறைந்தவள்; இன்சொல் பேசுபவள்; சாமர்த்தியசாலி; சத்தியமே லட்சியமாக கொண்டவள்.

துலாம் ஏழாமிடம் ஆனால் மனைவி தோற்றப் பொலிவில்லாதவள்; தர்மம் செய்வதில் நாட்டம் உடையவள்; பெருத்த சரீரம் உள்ளவள்; குழந்தை செல்வம் மிக்கவள்.

விருச்சிகம் ஏழாமிடம் ஆனால் மனைவி தயையும் அன்பும் கொண்டவள்; எதிலுமே தீவிர முயற்சி கொண்டு ஒரே தடவையில் காரியம் சாதிக்க வல்லவள்; கணவனிடத்தில் பிரியம் வைக்காதவள்; துர்பாக்கியமும், தோஷமும் நிறைந்தவள்.

தனுசு ஏழாமிடம் ஆனால் மனைவி பெண்மை தோற்றம் அற்றவள்; அதாவது கடும் குரலும் மிடுக்கான நடையும் கொண்டவள். நளினமும் நாணமும் இல்லாதவள்; ஆணின் குணாதிசியங்கள் அனைத்தும் கொண்டவள். பக்தியோ புத்தியோ இல்லாதவள்.

மகரம் ஏழாமிடம் ஆனால் மனைவி வெளியாருக்கு காருண்யம் மிகுந்தவள் போலக் காட்சியளிப்பவள். உள்ளத்தில் கஞ்சத்தனம் மிக்கவள். இவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை நல்ல பெயரெடுக்கும். தன்னைப் பொறுத்த மட்டில் தனக்கும் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும் இனியவளாய் நடந்து கொள்பவள்; பதிவிரதை.

கும்பம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் உறுதியான உள்ளம் கொண்டவள்; கணவனுக்கு எப்போதும் தொண்டு செய்பவள்; தெய்வங்களிடத்திலும், பிராம்மணரிடத்திலும் முறையே பக்தியும் மரியாதையும் உள்ளவள். எல்லாவித சுகங்களும் அமையப் பெற்றவள்.

மீனம் ஏழாமிடம் ஆனால் மனைவி விகாரமான தோற்றமுடையவள். இவளுக்கு பிறக்கும் குழந்தைகள் கெட்ட புத்தியுடையன; நல்லொழுக்கம் அற்றன; எப்போதும் யாருடனாவது சண்டைக்குப் போய் வம்பை விலைக்கு  வாங்கிக் கொண்டு வருவன. ஏழுக்குடையவன் லக்னம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதை பொறுத்து ஏற்படும் பலன்கள்.

ஏழுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகன் துக்கம் அற்றவன்; சுகபோகி; ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவன்; சத்ருக்களை நாசம் செய்பவன்.

ஏழுக்குடையவன் 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனின் மனைவி துஷ்டத்தனம் மிக்கவள்; சுகமற்றவள்; பித்த சம்பந்தபட்ட வியாதிகளால் பீடிக்கப்படுபவள்; எதற்கெடுத்தாலும் கணவனோடு எதிர்வாதமிடுபவள்; கணவனின் சொல்லை மீறி நடப்பவள்; தனக்கென குழந்தை பேறு இல்லாதவள்;

ஏழுக்குடையவன் 3 ஆம் இடத்தில் அமர்ந்தால் ஜாதகன் தன் சொந்த முயற்ச்சியை நம்பி வாழ்பவன்; பந்துகளிடத்தில் அன்பு உள்ளவன்.

ஏழுக்குடையவன் 4 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனை பலமற்றவனாகச் செய்து விடுகின்றான். தகப்பனாருக்கு இவன் விரோதமாகின்றான். எனவே துஷ்டன் என்று சொல்லத் தேவை இல்லை. ஆனால் இவனுக்கு வாய்க்கும் மனைவி நல்ல குணவதியாய், கணவனின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாதவளாய் அழகு பொருந்தியவளாய் அமைகிறாள்.

ஏழுக்குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அழகு அந்தஸ்து, தலைமகன், சுகம் ஆகியவற்றை தருகின்றான். துஷ்டர்களை இந்த ஜாதகன் நாசம் செய்துவிடுவான். தன் பத்தினியை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்ற கூடியவன்.

ஏழுக்குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அற்ப ஆயுள்; அபமிருத்யு பீடைகள்; பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்; அழகிய கட்டுடல் கொண்டவன்; பெண்களிடத்தில் பிரியமுள்ளவன்; பாபக்கிரகங்கள்  அந்தஇடத்தில சேர்ந்திருந்தால் க்ஷயரோகி.

ஏழுக்குடையவன் 7 ஆம் இடத்தில் இருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிட்டுகிறது. நீண்ட ஆயுள்; இன் சொல்லன்; சாந்த சோரூபி; கீர்த்திமான்; ஆனாலும் இவனிடத்தில் ஒரு கெட்டகுனம்-பிற பெண்டிரை மொஹித்தல்.

ஏழுக்குடையவன் 8 ஆம் இடத்தில் இருப்பின் தன் மனைவியோடு ஓயாமல் சண்டை வளர்பவன்; ஆதலால் மனைவிச் சுகமற்றவன்; மனைவியோடு தப்பித்தவறி மகிழ்ச்சியோடு இருக்க முற்பட்டாலும், பாவம் அவளூக்கு விரைவில் மரணம் வந்து சேர்கிறது.

ஏழுக்குடையவன் 9 ஆம் இடத்தில இருந்தால் ஜாதகன் நல்லொழுக்கம் உடையவன். பாபக்கிரகங்கள் அந்த இடத்தில் செர்கையானால் நபும்சகன்; மனைவியை பகையாளியாக கருதுபவன்; தவத்தில் நாட்டமுடையவானாகி சந்நியாசியாகி போவதும் உண்டு.

ஏழுக்குடையவன் 1௦ ஆம் இடத்தில் அமரும் போது ஜாதகன் ராஜ சம்பந்தமான குற்றத்தை செய்பவன் ஆகின்றான். கெட்ட வார்த்தைகளை பேசுபவனாகவும், கபடியாகவும், சபல புத்தி உடையவனாகவும் ஆகின்றான் மாமனாரை வேலை வாங்குபவன்; வஞ்சகன்; சொந்த ஜனங்களுக்கு உதவி செய்யாதவன். பெண்களுக்கு சந்தோசத்தை தராதவன்.

ஏழுக்குடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் மனைவி எப்பொழுதும் பதிக்குப் பணிவிடை செய்பவனாகவும் பதிவிரதையாகவும் அடக்கமுள்ளவளாகவும் அமைகின்றாள். வித்தையினால் இவளது தந்தை மேம்பட்டு விளங்குவான். ஆதலால் தந்தையிடம் இவள் அளவற்ற வாஞ்சை உடையவன்.

ஏழுக்குடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு வீடு வாசல் இல்லை. உறவு மற்றொருவர் இல்லை; மனைவி சுகம் அற்றவன். இவனின் மனைவி சஞ்சலபுத்தி கொண்டவள். நல்ல செலவாளி. அடாத வார்த்தை பேசுபவள். தன் வீட்டு பொருள்களையே திருடி விற்பவள். ஏழாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்

சூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது.

சந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு.

செவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது.

புதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன்.

குருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான்.

சுக்கிரனால் ஏழாம் பாவம் பார்க்கப்பட்டால், மனைவியால் பல சௌகர்யங்களை ஜாதகன் அடைகின்றான். மக்களும் நல்லவர்களாகவே அமைகின்றனர். குழந்தைகள் சற்றுக் கூடுதலாகவே பிறக்கின்றனர். வியாபார லாபத்தை ஜாதகன் வெகுவாகப் பெறுகின்றான். தெளிவான புத்தி ஜாதகனுக்கு அமைகிறது.

சனியினால் களத்திர ஸ்தானம் பார்க்கப்படும் போது மனைவிக்கு ஆகாது. அவளுடைய அழிவுக்கு காரணமான செயல்கள் நடக்கின்றன. அவளுக்கு கண்டங்கள் தொடர்கின்றன. ஜாதகனை பாண்டு ரோகம் பீடிக்கிறது. காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு நோய்கள் இடைவிடாது தொடர்கின்றன.

ஏழுக்குடையவன் சுபகிரகதுடன் கூடினாலும், பார்க்கப்பட்டாலும், ஜாதகன் சகல சௌபாக்கியங்களையும் அடைவதோடு குணவானாகவும், தனவானாகவும் விளங்குகின்றான். தன் பத்தினியின் மூலம் பாக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றான்.

ஏழுக்குடையவன் ஜாதகத்தில் உச்சமானால், நல்ல குணம் மிக்கவனாய் பலரும் பாராட்டும் பெரு பெறுகின்றான். தனம், தானியம் நிறைந்த குடும்ப தலைவனாக விளங்குகின்றான்.

ஏழுக்குடையவன் சத்ருவாகவோ, நீசனாகவோ ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் பலன் நேர் மாறாக அமைகின்றன.

7 ஆம் இடம் களத்திர பாவமாதலால் மேலே கூறப்பட்ட புருஷ ஜாதகத்திற்க்கு உண்டான பலன்கள் பெண்ணின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போதும் பொருந்துவதேயாகும்.

கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன் என்ற நிலையில் இதுவரை கூறப்பட்ட கருத்துக்களில் ஆண் பெண் ஜாதகதிற்கேற்ப பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணின் ஜாதகத்தை வைத்து அவளுக்கு வாழ்க்கை துணைவியாகப் போகும் கணவனின் நிலை பற்றி சில சிறப்பியல்புகள் இங்கே குறிக்கப் பெறுகின்றன.

சனியின் வீடோ சனியின் நவாம்சமோ பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம்  இடமாக இருந்தால் கணவன் வயதானவனாகவும், மூர்க்கனாகவும் இருப்பான்.

செவ்வாயின் வீடோ, செவ்வாயின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் கோபம் கொண்டவனாகவும் ஸ்திரி லோலனாகவும் இருப்பான்.

சுக்ரனின் வீடோ, சுக்ரனின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் அழகும் அந்தஸ்தும் கொண்டவனாக அமைவான்.

புதனின் வீடோ, புதனின் நாவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் தொழிலைப் பற்றிய அறிவும் சாமர்த்தியமும் உடையவனாக விளங்குகின்றான்.

சந்திரனின் வீடோ அல்லது நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் கோழையாகவும், காமவசப்படவனாகவும் ஆகின்றான்.

குரு சுக்கிரன் இவர்களின் நவாம்சத்தில் 7 ஆம் இடம் அமைந்திருந்தால் இவளுக்கு வாய்க்கும் கணவன் வீரம் உள்ளவனாகவும் குணவானாகவும் திகழ்வான்.

சூரியன் வீடோ, சூரியனின் நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேளையில் ஈடுபட்டவனாகவும் , கடுமையான சுபாவம் உள்ளவனாகவும் இருப்பான்.


எட்டாம் பாவம்

எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.

மேஷம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம் ஏற்படுகிறது.

ரிஷபம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன்தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால் பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான்.

மிதுனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ, கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான்.

கடகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ, பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும் வேறு தேசத்திலேயே அமைகின்றது.

சிம்மம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும். குழந்டையினால் கூட இவனுக்கு சாவு நேரிடலாம்.

கன்னி எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும் மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம்.

துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.

விருசிகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால் உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது.

தனுசு எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால் மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வீரன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம்.

கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ, பகைவனாலோ புண்பட்டு சாக நேரிடலாம்.

மீனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது ஆயுதத்தாலோ சாக நேரிடலாம்.

எட்டுக்குடையவன் லக்கினம் முதலிய பன்னிரண்டு ராசிகளில் இருப்பதன் மூலம் ஏற்படும் பலன்கள்.

எட்டுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் துஷ்டர்களுடன் நட்புக் கொண்டு அதனால் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்பவன். நிரந்தர நோயாளி ஆனாலும் அரசிடமிருந்து வருமானத்தை அடையக் கூடியவன்.

எட்டுக்குடையவன் இரண்டிலிருந்தால் இவனது ஜீவனம் அதாவது தொழில் நிலை அடிக்கடி மாறிக் கொண்டே போகும். சாஸ்திரங்கள் பல கற்றவராயினும் திருட்டுத்தனம் இவனை விட்டுப் போவதில்லை. பாபக்கிரகங்களுடன்  கூடினால் சுபமற்றவனாகவும், வியாதி உள்ளவனாகவும் நாளைக் கழிக்க வேண்டி உள்ளது. ராஜ தண்டனையும் இவன் அடையக் கூடும்.

எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் இருந்தால் கூடப் பிறந்தவனுடன் ஒத்துப் போகாது. நண்பர்களே நாளடைவில் விரோதிகளாக மாறுவர். இவனுடைய சபல புத்தியும் கடுமையான வார்த்தை பேசும் தன்மையும் துஷ்டத்தனமும், பந்து ஜனங்களிலிருந்து இவனை வெகு தூரம் விலக்கி விடுகிறது.

எட்டுக்குடையவன்  நான்காம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் தன் தந்தை திரட்டி வைத்த பொருள் அனைத்தையும் நாசம் செய்கின்றான். தனது புத்திரனளிடத்திலும் பகையை தேடிக் கொள்கிறான். வியாதி உள்ளவன்.

எட்டுக்குடையவன் ஐந்தாம் இடத்தில் இருக்கப் பிறந்தவனுக்கு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்து போகலாம். தீயவர்களுக்கு தலைவனாகவும்.இருப்பான்.பாபக் கிரகங்கள் சேர்க்கையினாலோ பார்வையினாலோதான் இப்பலன் அமைகின்றது.

எட்டுக்குடையவன் ஆறாம் இடத்தில் இருந்து, சூரியன் செவ்வாய் சேர்க்கையும் அமைந்தால் வீண் சண்டைக்குச் செல்பவன். புதன், சந்திரனுடன் கூடி ஆறிலிருந்தாலும் தானாக விரோதத்தை தேடிக் கொள்வான். சந்திரன், சனி இவர்களோடு கூடியிருந்தால் தீராத நோயாளியாக வாழ்க்கை அமைகின்றது.

எட்டுக்குடையவன் ஏழாம் இடத்தில் இருந்தால் மறைவிடங்களில் ரோகம் உள்ளவன். கஞ்சன், துஷ்டன், கெட்ட நடத்தை உள்ளவன். பாபக் கிரகங்கள் கூடினால் பெண்களுடன் வெகுவாகச் சண்டை போடுவான். செவ்வாயுடன் கூடினால் இந்நிலை மாறி சாந்தமுள்ளவனாகின்றான்.

எட்டுக்குடையவன் எட்டாம் இடத்திலேயே இருந்தால் பயிர் தொழில் செய்யக் கூடியவனாக இருப்பான். நோயாளி. பிறரை வஞ்சித்து கொடுமை செய்வான்.

எட்டுக்குடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் பிறரை இம்சிப்பவன், இவனுக்கு நண்பர்களே அமைய மாட்டார்கள். காலப்போக்கில் எல்லோராலும் விலகப் பட்டவனாகின்றான்.

எட்டுக்குடையவன் பத்தாம் இடத்தில் இருந்தால்அரசாங்கத்தில் வேலை பார்க்கக் கூடும். சோர்வும் துக்கமும் இவனை விட்டு நீங்காது.

எட்டுக்குடையவன் பதினொன்றாம் இடத்தில் இருந்தால் உடல் மெலிந்தவன். பிறரால் தான் சுகமடைவதற்கு வழிகள் தேடிக் கொள்வான்.

எட்டுக்குடையவன் பன்னிரெண்டில் இருந்தால் கொடூரமான வாக்கு உள்ளவன். திருட்டு தொழிலை செய்பவன். வஞ்சகன்.எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய மாட்டான். மாமிசம் உண்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன்.ஆதலால் அதன் மூலமே இவனுக்கு மரணம் சம்பவிக்கும். எட்டாம் இடம் சூரியன் முதலிய கிரகங்களால் பார்க்கப்படுவதால் ஏற்படக்கூடிய பலன்கள்

சூரியன் எட்டாம் இடத்தை பார்த்தால் ஜாதகனுக்கு தந்தையின் சொத்து கிடைக்காது. மறைவிடங்களில் ரோகம் உள்ளவன். அரசாங்கதில் தண்டனைக்கு அடிக்கடி ஆளாவான்.

சந்திரன் எட்டாம் இடத்தை பார்த்தால் அடிக்கடி உடல் நலிவு; அதனால் ஒருவித பயம்; தண்ணீரினால் அடிக்கடி கண்டங்கள்; தன தான்ய நஷ்டம்.

செவ்வாயினால் எட்டாம் இடம் பார்க்கப் பட்டால் நீரிழிவு நோயும், தன தான்ய நாசமும், இரும்பு மூலமாக பயமும், பயணங்களில் இடையூறுகளும், திருடர்களால் தன நாசமும் உண்டாகும்.

புதனால் பார்க்கப்பட்டால் ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்; அரசாங்க வேலை அல்லது உழவுத் தொழில் இவை மூலம் வருமானம்; வேறு தேசம் செல்ல வாய்ப்புகள் கிட்டும்.

குருவினால் பார்க்கப் பட்டால் எட்டாவது வயதில் மரணத்திற்கு ஒப்பான ரோகம் தாக்கும். அரசு மூலமாகவோ அல்லது பிறராலோ பயம் உண்டாவதுடன் செல்வத்தையும் இழக்க நேரிடுகின்றது. புதிக்குறை உள்ளவன்.

சுக்கிரனால் பார்க்கப்பட்டால் மறைவிட வியாதிகள் வரும். பொருளை தேடுவதில் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டி வரும். எதையாவது பேசி வம்புச் சண்டையை இவனே தேடிக் கொள்வான்.

சனியினால் பார்க்கப் பட்டால் நீர் நிலைகளினால் கண்டம், இரும்பினால் கண்டம், பிறந்ததிலிருந்து ௨௦ வயது வரை மரணத்திற்கு ஒப்பான நோய்கள் வந்து தாக்கும்.


ஒன்பதாம் பாவம்

ஒன்பதாம் பாவம் பொருட்பேறு பற்றி எடுத்து விளக்குவது. ஆதலால் “பாக்கியஸ்தானம்” என்று குறிப்பிடுவர்.

மேஷம் ஒன்பதாம் இடமானால் நாற்கால் பிராணிகளின் விருத்தி; அவற்றை காப்பாற்றுவான்; தானம் செய்வான்.

ரிஷபம் ஒன்பதாம் இடமாக அமைந்தால் ஆடை அணிமணிகள் சேரும்; அதிகமாக பேசக்கூடியவன்; சாஸ்திரங்களில் சொல்லியவாறு தான தர்மங்களை செய்யக் கூடியவன்.

மிதுனம் ஒன்பதாம் இடமாக உள்ள ஜாதகன் துயரப் படுபவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவன். வீட்டிற்கு வந்த பெரியோர்களை உபசரித்து அனுப்புவதில் விருப்பமுடையவன்.

கடகம் ஒன்பதாம் இடமாக அமைந்த ஜாதகன் வனங்களில் சென்று கடுமையான தவம் செய்யும் பெரு பெறுகின்றான்; புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறது. விரதம் உபவாசம் தான தர்மம் இவனது இலட்சியங்கள்.

சிம்மம் ஒன்பதாம் இடமாக ஆனால் ஜாதகன் தயை தாட்சண்யம் அற்றவன் ஆகின்றான்.இதனால் இவனது செல்வம் நாளடைவில் தேய்ந்து போகின்றது. பிள்ளை செல்வம் பறி போகின்றது.

கன்னி ஒன்பதாம் இடமாக அமையப் பிறந்த ஜாதகன், உண்மையான பக்தி செலுத்த மாட்டான். தான் மேன்மை அடைய வேண்டுமென்பதில் அதிகம் நாட்ட முடையவன்.

துலாம் ஒன்பதாம் இடமாக உள்ள ஜாதகன் பிரசித்தி பெற்றவன்; பெரியோர்களை மகிழ்விப்பதிலும், பொதுமக்கள் நட்பை பெறுவதிலும் ஆர்வமிக்கவன்.

விருசிகம் ஒன்பதாம் இடம் ஆனால் பிறரை துன்பப்படுத்துவான்.; யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான்.

தனுசு ஒன்பதாம் இடமாக அமையும் பொழுது அந்தணர்களுக்கு உபகாரியாகின்றான். எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பவன். புகழ் இவனை தேடி வருகின்றது.

மகர ராசி ஒன்பதாம் பாவமாக அமையப் பெற்றவன் பின்வயதில் தன் குலத்தவருக்கு உபகாரியாகின்றான். பெண்களிடம் வெறுப்பை அடைகின்றான்.

கும்பம் ஒன்பதாம் இடமானால் காடு வளர்த்தல் பூந்தோட்டம் அமைதல், குளம் வேட்டல், தெய்வங்களின் ஆராதனை ஆகிய காரியங்களில் ஈடுபடுகின்றான்.

மீனம் ஒன்பதாம் இடமாக அமைந்த ஜாதகன் கோயிற்பனிகள், நந்தவனம் அமைதல், யாகங்கள் செய்தல், புண்ய தீர்த்த யாத்திரைகள் இவற்றை மேற்கொள்கின்றான். ஒன்பதுக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.

லக்னத்தில் குரு ஒன்பதுக்கு உடையவனாகி இருந்தால் விநாயக வழிபாடு உள்ளவன். அரசாங்க வேலை செய்பவன். ஞாபக சக்தி நிறைந்தவன்; தூய்மையை நேசிப்பவன்; அதிகமாக உணவு உண்ணமாட்டான்; ஆனாலும் லோபி.

ஒன்பதுக்கு உடையவன் இரண்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் மண உறுதி வாய்ந்தவன்; நல்லொழுக்கமுள்ள புத்திரனை உடையவன்; கால்நடைகளால் ஆபத்து நேரலாம்; செலவுள்ளவன்; பெண் பித்தன்.

ஒன்பதுக்கு உடையவன் மூன்றாம் இடத்திலிருந்தால் அழகன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தன்னை சேர்ந்தவர்களையும் உறவினர்களையும் பேணிக் காப்பவன். புகழுக்குரிய செயல்களை செய்பவன். சுகஜீவி.

ஒன்பதுக்கு உடையவன் நான்காம் இடத்திலிருந்தால் வித்வான்களை நேசிப்பவன்; நண்பர்களை மிகுதியாக கொண்டவன். தந்தையை வழிபடுபவன். தீர்த்த யாத்திரையில் பற்று உள்ளவன். மிகுந்த செல்வம் உடையவன்.

ஒன்பதுக்கு உடையவன் ஐந்தாம் இடத்திலிருந்தால் தெய்வங்களிடமும், பிராமனர்களிடமும் பக்தியுடையவன்; நல்ல வனப்பு, புத்தி கூர்மை உடையவன். இன்சொல் பேசுபவன்.

ஒன்பதுக்கு உடையவன் ஆறாம் இடத்திலிருந்தால் ஜாதகனுக்கு பகைவர்கள் அதிகமாகின்றனர். உடல் உறுப்பு ஏதேனும் பாதிப்பு உள்ளாகும். விகாரமான பார்வை உடையவன்; துஷ்டன்; பலரும் இவனை தூற்றுவர்.

ஒன்பதுக்கு உடையவன் ஏழாம் இடத்திலிருந்தால் பெண் சுகம் உள்ளவன். மனைவி செல்வ வளம் மிக்கவள்; கணவன் சொல் தவறாதவள்; அழகி.

ஒன்பதுக்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் தோற்றம் விகாரமாக இருக்கும்; பிறரை ஏமாற்றுபவன்; கெட்ட நட்புடையவன்; அலி.

ஒன்பதுக்கு உடையவன் ஒன்பதாம் இடத்திலேயே இருந்தால் பொது மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பவன். குருகளிடமும் , உறவினர்களிடமும்  பற்றுள்ளவன்; சுத்தமாக இருப்பான்.

ஒன்பதுக்கு உடையவன் பத்தாம் இடத்திலிருந்தால் அரசாங்க பணி செய்பவன், புண்ணிய காரியங்களில் ஈடுபடுபவன். தாயிடம் பக்தியுள்ளவன்,  புகழ் படைத்தவன்.

ஒன்பதுக்கு உடையவன் பதினொன்றாம் இடத்திலிருந்தால் அடிமையாவான்; தானம் செய்வதில் பற்றுள்ளவன்.வியாபாரியாகவும் அமையலாம்.

ஒன்பதுக்கு உடையவன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் மானம் உள்ளவன். அயல் நாடுகள் சென்று வருபவன். புத்திசாலி. அழகுமிக்க மேனி படைத்தவன். ஆனால் பாபக் கிரகச் சேர்கை இருந்தால் ஜாதகன் வஞ்சகன் ஆகவும் ஆகின்றான். ஒன்பதாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

ஒன்பதாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பெண்கள் மூலமாக எந்தவித மகிழ்ச்சியும் இருக்காது. ஆனால் அவர்களை ஜாதகன் அனுசரித்து நடந்து கொள்வான்.

ஒன்பதாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் அயல்நாடு சென்று அங்கேயே தங்கி அரசு அலுவல்கள் ஏதேனும் ஏற்று வாழ்க்கை நடத்த நேரிடும். இருபினும் செல்வத்தை அதிகமாக திரட்ட முடியாது. செலவாகும் கிடைக்காது.

ஒன்பதாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் பாக்கியவான். மைத்துனருடன் சேர்ந்து கொண்டு தர்மமில்லாத காரியங்களில்  ஈடுபடக் கூடியவன். கொடுமையான குணம் படைத்தவன். ஆனாலும் சுகவாசி.

ஒன்பதாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் வற்றாத செல்வமும் மக்கட்பேறும் அவர்களால் சுகமும் அடைவான். அயல் நாடுகளுக்குச் செல்லும் யோகம் இவனுக்கு உண்டு. அரச மரியாதையைப் பெறுவான்.

ஒன்பதாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் தர்ம காரியங்களில் ஈடுபடக் கூடியவன்; சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவன்.அரசு மூலம் செல்வதை அடைபவன். இருந்தாலும் நல்ல குணம் இவனுக்கு கிடையாது.

ஒன்பதாம் இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பலவகையிலும் சௌபாக்கியத்தை பெறுகின்றான். அயல் நாட்டில் தொழில் செய்பவனாகவும் அந்த நாட்டு மன்னனின் அபிமானத்தை பெற்றவனாகவும்  அமைகின்றான்.

ஒன்பதாம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் ஊரிலான்; உறவு இல்லான்; பிற நாடு சென்று வாழ்கையை நடத்துபவன். தைரியசாலி.


பத்தாம் பாவம்

பத்தாம் பாவம் முக்கியமாக தொழிலைப் பற்றிஅறிய உதவுவது என அறிவோம்.

மேச ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் அதில் பிறந்த ஜாதகன் தொழிலில் சிறந்தவன். துப்பு கண்டு பிடிப்பதில் வல்லவன், அரசாங்க பணியில் ஈடுபடுபவன், மகிழ்ச்சி மிக்கவன். சாதுக்களின் கோபத்திற்கு ஆளாகுபவன்.

ரிஷப ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் செலவாளி, பெரியோர்களை சாதுக்களை பூஜிப்பவன். ஞானம் மிக்கவன்.

மிதுனம் பத்தாம் இடமாக அமைந்தால் காரியத்தில் கான்னாயிருப்பவன். மந்திரங்கள் அறிந்தவன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தேகப்போலிவுடையவன்.

கடகம் பத்தாம் பாவமாக அமையுமானால் தண்ணீர்ப் பந்தல், பூந்தோட்டம் முதலியவற்றை அமைத்தல், குளம் வெட்டுதல் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவான்.

சிம்மம் பத்தாம் பாவமாக அமையுமானால் ஜாதகன் எல்லா பாவங்களையும் செய்யதக்க கொடூரமுள்ளவனாகின்றான். பொருளை கடத்தல், நாடு விட்டு நாடு செல்லுதல் ஆகிய மறைமுகமான தொளில்களில் துணிச்சலுடன் ஈடுபடுவான். கொலை செய்யவும் அஞ்சாதவன்.

கன்னி பத்தாம் இடமானால் ஜாதகன் எப்போதும் முட்டாள்களின் நண்பனாகவே ஊர் சுற்றித் திரிவான். பெரும்பாலும் பெண்களுடைய சொத்துக்கு மேலாளராக இடம்பிடித்து, தானும் சொத்து சேர்த்துக் கொள்ளும் வல்லவனாகின்றான்.

துலாம் பத்தாம் இடமாக அமைந்தால் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றான். நேர்மையுடையவன். சாதுக்களுக்கு பிடித்தமானவன்.பல தர்ம காரியங்களில் ஈடுபட்டு மேலான பதத்தை அடையக்கூடிய பாக்கியம் பெற்றவன்.

விருசிகம் பத்தாம் இடமானால் பிராமணர்கள் குருமார்கள், மேலோர் ஆகியவர்களை துன்புருத்துபவனாகின்றான். துஷ்டர்களுடைய சிநேகிதம் இவனுக்கு விருப்பமானதாகும்.

தனுசு பத்தாம் பாவமாக அமையுமானால் எப்பொழுதும் அடிமை தொழிலை செய்ய நேரிடுகின்றது. திருட்டும், பிறருக்கு தீங்கு செய்தலும் இவனுக்கு கை வந்த கலை.

மகரம் பத்தாம் பாவமாக அமையுமானால் உறவினர்களுடன் அன்பு கொண்டவன். வித்வான்களை நேசிப்பவன். இருப்பினும் சில நேரங்களில் துஸ்டத்தனமான காரியங்களிலும் இவன் ஈடுபடக் கூடும்.

கும்பம் பத்தாம் பாவமாக அமையுமானால் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவன். பயணம் செய்வதில் விருப்பம் உடையவன். தனக்கு ஒரு பொருள் தேவை என்றால் அதை எந்த வழியிலும் அடைந்தே தீர வேண்டும் என்று முரட்டுத் தனம் கொண்டவன். இதனால் சமுக விரோதியாகவும் இவன் மாறுவதற்கு இடம் உள்ளது.

மீனம் பத்தாம் இடம் ஆனால் தெய்வ வழிபாட்டில் சிந்தையை செலுத்தக் கூடியவன். குருபக்தி மிக்கவன். அதனால் குருவின் உபதேசம் பெற்று கீர்த்தி உடையவனாகின்றான். தர்ம காரியங்களில் பெரும்பாலும் நாட்டம் உடையவன் ஆகின்றான். பத்துக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.

பத்துக்குடையன் லக்னத்தில் இருந்தால் தாயினிடத்தில் அன்பு மிக்கவன். தந்தையிடத்தும் பக்தியுடையவன். சுகத்துடன் வாழ்பவன். பாபக்கிரகங்களுடன் கூடினால் துக்கம் உடையவன். துஷ்டன். தந்தைக்கு ஏமாற்றத்தை தருபவன்.

பத்துக்குடையன் இரண்டாம் இடத்தில் சுப கிரகங்களுடன் கூடி இருந்தால் தாய் தந்தையரை சுகத்துடன் வைத்திருப்பான்.கடின வார்த்தை பேசுபவன்.திடகாத்திரமான சரீரம் உள்ளவன். தனவான்.

பத்துக்குடையன் மூன்றாம் இடத்தில இருந்தால் உறவினர்களுக்கும் பெற்ற தாய்க்கும் விரோதியகின்றான். பெரும்பாலும் அடிமை தொழில் செய்பவன்.

பத்துக்குடையன் நான்காம் இடத்தில் இருந்தால் மிகுதியாக சுக போகங்களில் ஈடுபடகூடியவன். தாய் தந்தையரை நலமாக வைத்துக் காப்பவன். மனித சமுதாயம் நலம் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவன். அரச சன்மானம் பெறக் கூடியவன்.

பத்துக்குடையன் ஐந்தாம் இடத்தில் இருந்தால் கலை ஆர்வம் மிக்கவன். அரசால் ஆதாயம் பெறக் கூடியவன். மிகுந்த யோகி, சிறந்த சங்கீத மேதையாகவும் இவன் திகழக் கூடும்.

பத்துக்குடையன் ஆறாம் இடத்தில் இருந்தால் அரசுப் பகையை தேடிக் கொள்வான். காமம் மிக்கவன். எல்லோரிடத்திலும் எப்போதும் சண்டை இடுபவன். திருடர்களுக்கு மத்தியில் இவன் ஜீவனம் சிறப்பாக அமையும்.

பத்துக்குடையன் ஏழாம் இடத்தில் இருந்தால் நல்ல அழகன்; பெண்களிடத்தில் எப்போதும் பிரியமாக நடந்து கொள்வான். இவனது மகனாலும், இவன் தந்தையின் அன்புக்குரிய பிற ஸ்திரியாலும் நலம் பெறுவான்.

பத்துக்குடையன் எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் மிக்க ஏமாற்றத்தை தரும் பொய் வார்த்தை பேசுபவன். கபடம் உள்ளவன். திருட்டு வித்தையில் சமர்த்தன். தந்தைக்கு இடைவிடாமல் தொல்லை தருபவன்.

பத்துக்குடையன் ஒன்பதாம் இடதில் இருந்தால் தொழிலில் விருத்தி உள்ளவன். தோற்றப் பொலிவு கொண்டவன். அன்பான் சகோதர்களும், நண்பர்களும் நிறைந்தவன். பராக்கிரமம் மிக்கவன். உண்மையில் நாட்டம் உடையவன்.

பத்துக்குடையன் பத்தாம் இடத்திலேயே இருந்தால் தந்தையை சுகமாக வைத்திருப்பவன். சாமர்த்தியசாலி. புகழ் மிக்கவன். அரசு வருமானத்தை சன்மானங்களை அடையக் கூடியவன்.

பத்துக்குடையன் பதினொன்றாம் இடத்திலிருகப் பிறந்தவன் எதிலும் வெற்றியும் லாபத்தையும் ஈட்டக் கூடியவன். ஆண்களும், பெண்களும் ஆன குழந்தைகளைப் பெற்றவன். பணியாளர்கள் நிரம்பப் பெற்ற தனவான்.

பத்துக்குடையன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் அரசுப் பணியில் இருபதோடு சுயமாகவும் பொருள் ஈட்டக் கூடியவன். தந்தையால் சௌக்கியம் அற்றவன். வக்கிரமான புத்தி உள்ளவன். இயற்கை அழகில் ஈடுபாடு கொண்டவன். பெரும்பாலும் வெளிநாடுகளில் இவனுடைய வாழ்க்கை கழிகின்றது. நல்ல செலவாளி. பத்தாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

பத்தாம் இடத்தில் சூரியனுடைய பார்வை இருக்குமானால் ஜாதகன் எப்போதும் காரிய சித்தியுல்லவன். முதல் வயதிலேயே இவருடைய தாயார் இறந்துவிட வாய்ப்பு உள்ளது. சூரியன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருந்து பார்த்தால் தாய்க்கு சுகம் உண்டாகும்.

பத்தாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் கால்நடைகள் நிறைந்த சூழ்நிலைகளில் அது தொடர்பான தொழிலை உடையவன். மகன் மனைவி இவர்களால் சுகத்தை அடையக் கூடியவன். ஆனால் தந்தையாலோ, உறவினர்களாலோ சுகம் கிடைப்பதில்லை.

பத்தாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் ஜாதகன் எந்தவித சிரமமும் இல்லாமல் காரியத்தில் வெற்றி அடைபவன். செவ்வாயின்  தசை மூன்றாவது தசையாக வந்தால் ஜாதகன் மிகுந்த சுகத்தையும், பாக்கியத்தையும் அடைகின்றான்.

பத்தாம் இடம் புதனால் பார்க்கப் பட்டால்ஜாதகன் வேலை செய்து பிழைப்பவனாகவும், மக்களின் தலைவர்களால் நேசிக்கப் பட்டவனாகவும், எதிலும் முயற்சி உள்ளவனாகவும் ஆகின்றான்.

பத்தாம் இடம் குருவினால் பார்க்கப் பட்டால் அரண்மனையில் (இக்காலத்தில் அமைச்சர்களின் அலுவலகத்தில் அல்லது வீட்டில் பணி செய்யக் கூடியவன்) பணி செய்யக் கூடியவன். மகன், மனைவி இவர்களிடம் அன்பு மிக்கவன். அவர்களால் சுகமும் பெறுகின்றான். இவனுக்கு முன்னதாக பிறந்தவர்களை காட்டிலும் இவனிடத்தில் செல்வம் மிகுதியாக சேர்கின்றது. மாட மாளிகை கட்டி வாழ்பவன்.

பத்தாம் இடம் சுக்கிரனால் பார்க்கப் பட்டால் தனது ஊரிலேயே அரசு வழி தொடர்பால் ஆதாயம் உண்டு. புத்திரர்கலாலும், பந்துகளாலும் நேசிக்கப் படுபவன். தலைவலி இவனை விட்டு நீங்காத நோய்.

பத்தாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் இவனுடைய தந்தை விரைவில் அழிகின்றார். தாய் மூலமும் அவ்வளவு சுகம் இல்லை. அதிக காலம் வாழ்ந்திருக்க மாட்டன். ஜீவித்தால் பாக்கியமுள்ளவனாக இருப்பான்.


பதினொன்றாம் பாவம்

பதினோராம் பாவம் பொருளின் லாபம், மூத்த சகோதரர்கள், திக்குகள் முதலானவற்றை குறிப்பது.

மேஷம் பதினொன்றாமிடமாக அமைந்தால் நாற்கால் பிராணிகளால் லாபமும், அரசாங்கத்தினால் அனுகூலமும், வெளி நாட்டுத் தொடர்பினால் லாபமும் செய்வான்.

ரிஷபம் பதினொன்றாமிடமாக அமைந்தால் அதிகாரிகளினால் லாபமும், கோடுக்கல்-வாங்கலினால் பொருள் வரவும், ஸ்திரச் சொத்துக்களினால் லாபமும் செய்வான்.

மிதுனம் பதினொன்றாமிடமாக அமைந்தால் ஜாதகன் பெண்களினால் அதிகம் கவரப்பட்டவனாகவும், புகழுடன் எல்லா சுகத்தையும் அனுபவிப்பவனாகவும் ஆவான்.

கடகம் பதினொன்றாமிடமாக அமைந்தால் ஜாதகன் சாஸ்திரங்களில் சொல்லியவாறு தான தர்மங்களைச் செய்வான். சிறந்த கவிஞன் ஆவான். பூமி மூலம் பொருள் அனுபவிப்பான்.

சிம்மம் பதினொன்றாமிடமாக அமைந்தால் பிறரை துன்புறுத்துவான். யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான். இருபிடக்தை மாற்றுவதால் அதிகமான துக்கத்தை அடைவான்.

கன்னி பதினொன்றாமிடமாக அமைந்தால் ஜாதகன் அதிகம் பேசக்கூடியவன். பிறரை ஏமாற்றுபவன். கெட்ட தொழிலை செய்து பொருள் சம்பாதிப்பவன்.

துலாம் பதினொன்றாமிடமாக அமைந்தால் நண்பர்களின் மூலம் பொருளின் வரவை அடைவான். நல்லவர்களை வணங்குவான். அதிகமான புகழையும் அடைவான்.

விருசிகம் பதினொன்றாமிடமாக அமைந்தால் சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவன். அதிகமான புகழை அடைவான். பெரியோர்களை மகிழ்விப்பான்.

தனுசு பதினொன்றாமிடமாக அமைந்தால் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவான். தகாத காரியத்தை செய்வதினாலும், தகாத சேர்கையினாலும் பொருளின் லாபத்தை அடைவான்.

மகரம் பதினொன்றாமிடமாக அமைந்தால் அதிகமான தல யாத்திரை செய்வான். பராகிரமத்தினாலும், தர்மத்தினாலும் பெருமை அடைவான். கல்வியில் அதிகமான ஆற்றலும், பெரியோர்களுடனான சேர்கையில் விருப்பமும் உடையவன்.

கும்பம் பதினொன்றாமிடமாக அமைந்தால் கடல் கடந்த வியாபாரத்தினால் லாபம் அடைவான். வெளிநாட்டு பிரயனதினால் செலவும் பெறுவான்.

மீனம் பதினொன்றாமிடமாக அமைந்தால் பலவழிகளிலும் ஜாதகன் லாபத்தை அடைவான். நண்பர்களினால் லாபம் பெறுவான். அழகாகப் பேசுவான். பதினொன்றுக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.

பதினொன்ருகுடையவன் லக்னத்தில் இருந்தால் நல்ல போருளுள்லவனாவான். தெளிவான புத்தி உள்ளவனாகவும் பிறரிடம் பிரியம் உள்ளவனாகவும் இருப்பான். நேர்மையான புத்திரனை அடைவான். அரசாங்கத்திலிருந்து ஆதரவு பெற்றவனாகவும் நல்ல சுபாவமுள்ளவனாகவும் இருப்பான்.

பதினொன்ருகுடையவன் இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு நிலையற்ற வாழ்கையும் சுகக்குறைவும் இருக்கும். நீண்ட ஆயுளையும் அடைவான்.

பதினொன்ருகுடையவன் மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகன் உடன் பிறப்பினாலும் உறவினர்களினாலும் பலவகையிலும் நன்மை அடைவான்.சிநேகிதர்களினாலும் பலவகையிலும் நன்மை அடைவான். ச்நேகிதர்களினால் நன்மை அடைவான்.

பதினொன்ருகுடையவன் நாலாம் இடத்தில இருந்தால் ஜாதகன் அதிக ஆயுள் உள்ளவனாகின்றான். தகபனாரிடம் பணிவுள்ளவனாகவும் பிள்ளைகளிடம் பாசம் உள்ளவனாகவும் இருப்பான். நற்காரியங்களில் நல்ல பொருள் லாபத்தை அடைவான்.

பதினொன்ருகுடையவன் ஐந்தாம் இடத்தில இருந்தால் செவிலித்தாயிடம் அன்புள்ளவனாவான். மிதமாக சாப்பிடுபவனாகவும் சுகபோகத்தில் ஆர்வமுள்ளவனாவும் இருப்பான். மேற்கண்ட பலன்கள் ஐந்துக்குடையவன் சுபனானால் பொருந்தும்.

பதினொன்ருகுடையவன் ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்குஎதிரிகள் உண்டு. ரோகத்தினாலும் பீடிக்கப்படுவான். இளைத்து மெல்லிய தேகமாக தென்பட்டாலும் சாமர்த்தியதிற்கு குறைவிருக்காது. வெளி தேசங்களிலும் பிரயாணம் செய்வான்.

பதினொன்ருகுடையவன் ஏழாம் இடத்தில இருந்தால் ஜாதகன் இயற்கையிலேயே கொடூர உடலமைப்பை கொண்டவனாக இருப்பான். அதிக வசதியுள்ள செல்வந்தனாவான். நீண்ட ஆயுளைக் கொண்டவனாவான். நல்ல குணங்களை கொண்டவனாக திகழ்வான்.

பதினொன்ருகுடையவன் எட்டாம் இடத்தில இருந்தால் ஜாதகன் அதிக வியதியஸ்தனாக இருப்பான். எதிரிகளின் மூலம் அதிகமான விரோதத்தை உண்டாக்குபவனாகவும் இருப்பான்.

பதினொன்ருகுடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் அதிக வேதங்களை கற்றவனாக திகழ்வான். சாஸ்திரங்களில் தேர்ச்சிப் பெற்ற கெட்டிகாரனாயிருப்பான். தர்மத்தினால் புகழ் பெற்றவனாகவும், குருக்கள் தேவர்கள் இவர்களிடம் பக்தி உள்ளவனாகவும் இருப்பான். பாபியானால் உறவினர் இல்லாதிருப்பான்.

பதினொன்ருகுடையவன் பத்தாம் இடத்தில் இருந்தால் தந்தையை மதியாதவன்; தாயாருக்கு வேண்டியவன். அதிக தனம், செல்வாக்கு , புகழ்  கொண்டவனாக இருப்பான். தாயைப் பரிபாலிக்கும் காரியத்தில் விருப்பமுடையவன்.

பதினொன்ருகுடையவன் பதினொன்றாம் இடத்தில இருந்தால் நீண்ட ஆயுளைப் பெற்றவன். அழகு மிக்க மனிதரோடு சேர்ந்தவனாவான். நல்ல உடலமைப்பைக் கொண்டவன். எப்போதும் ஆரோக்கிய மாணவனாய்த் திகழ்வான். அழகான உடை, வாகனம் இவற்றை உடையவனாக இருப்பான்.

பதினொன்ருகுடையவன் பணிரெண்டாம் இடத்தில் இருந்தால் கொடூரமானவன். நிலையில்லாத பிழைப்பு உடையவன். நிலையற்ற பணவசதி இல்லாதவானாகி மிக்க கெட்ட புத்திகளைப் பெற்றவனாய் இருப்பான். பதினொன்றாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

பதினொன்றாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் எல்லாவிதமான பொருள்களையும் உறுதியாக ஜாதகன் அடைந்தே தீருவான். புத்திர இழபுடையவன். நல்ல புத்திசாலி. வேலை செய்து பிழைப்பவன்.

பதினொன்றாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் பொருளின் மூலம் தனலாபம். வியாதி அண்டாது ஒழியும். நாற்கால் பிராணிகளை உடையவன். தங்கம் பெருகும். அணைத்து வழிகளிலும் லாபம் உண்டாகும்.

பதினொன்றாம் இடம் செவ்வாயால் பார்க்கப் பட்டால் ஆயுள் விருத்தி. மனைவியின் தூய்மை களங்கப்படும். ஜன்மத்தில் இருந்தது 3 ஆவது ராசி இரட்டையாக இருப்பின் பெருத்த சரீரம் உடையவன். அவரது பிள்ளைகட்கு சௌகரியமும், வாகனங்களின் மூலம் சுகமும் உண்டாகும்.

பதினொன்றாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் பாக்கியசாலி. எல்லா வகையான பொருளின் மூலம் சுகத்தை பெற்றவன். ஊக்கத்தால் சாஸ்திரத்தில் பிரதானமான தேர்ச்சி பெற்றவன். அதிகப் புகழ் பெற்றவன். பெண் குழந்தைகளை அதிகமாக பெறுபவன்.

பதினொன்றாம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் நிலையான ஆயுள், பிள்ளைகள், மனைவி, பிள்ளைகள் இவற்றால் சுகம் பெற்றவன். காரிய வெற்றி உடற் சோர்வு இவற்றை கொண்டவன்.

பதினொன்றாம் இடம் சுகிரனால் பார்க்கப் பட்டால் லாபம் பெருகும்.சுகம் செல்வம் உடையவன். கிராம அதிகாரியாவான். தன் உற்றான் உறவினர்களைக் காப்பாற்றுவான். முன்னோரின் தொழிலை காப்பதில் விருப்பமுள்ளவனாயிருப்பான்.

பதினொன்றாம் இடம் சனியால் பார்க்கப் பட்டால் கொடுரமான மூர்க்கர்கள் மூலம் தன லாபம் உண்டாகும். பிள்ளைகளிடத்தில் இருந்து சுகமும் கருமை நிறம் கொண்ட எள் போன்ற தான்ய லாபமும் கிட்டும்.


பன்னிரெண்டாம் பாவம்

பொருளின் நாசம், செலவு, அங்க குறைவு, படுக்குமிடம் இவற்றைப் பற்றிய விசயங்களை எடுத்து விளக்குவது சயன ஸ்தானம் அல்லது விரைய ஸ்தானம் என்றழைக்கப்படும்  பன்னிரெண்டாம் பாவம் ஆகும்.

மேஷம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் அதிகச் செலவினாலும், சரீர நல குறைவினாலும் பாதிக்கப் படுவான். அதிகமாக தூங்குபவனாகவும் ஆவான்.

ரிஷபம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் உயர்ந்த ஜாதிக் காளைகளினால் பொருளின் வரவும், பெண்களின் மூலம் பொருளின் லாபமும் ஏற்படும். நல்ல அறிவாற்றலினால் சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஈடுபாடும். ஏற்படும். பண்டிதர்களுடன் அறிவு பூர்வமான சர்ச்சை நடத்த எப்போதுமே தயாராக இருப்பார்.

மிதுனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் பெண்களினால் அதிகமான பொருளை இழப்பர். கெட்ட பழக்கம், கெட்ட நடத்தை  உடையவர். தகாத முறையில் பொருளை செலவழிப்பர்.

கடகம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் அந்தணர்கள், பெரியோர்கள், நற்காரியங்கள் ஆகியவற்றில்  ஈடுபாடுள்ளவன். மேலும் பெரியோர்களின் புகழ் பாடுவான்.

சிம்மம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் அதிகமான விரோதிகளால் தாக்கப்படுவர். உடல் நிலை பாதிப்பினால் பீடையை அடைவார். கெட்ட காரியத்திலும்  திருட்டுத் தொழிலும்  ஈடுபாடு உடையவர்.

கன்னி பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு உள்ளவன். சுப காரியத்தில் ஈடுபடுதலும், அழகுப் பொருள்களின் மூலமும், நல்லவர்களின் சேர்கை மூலமும் பொருளை இழப்பான்.

துலாம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் பெரியோர்களிடமும் நல்லவர்களிடமும் ஈடுபாடு உள்ளவன். சாஸ்திரத்தை காப்பாற்றுவான். புலனடகத்திலும் அதிகமான யாத்திரையிலும் ஈடுபடுவான்.

விருச்சிகம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகனுக்கு கவன குறைவினாலும் ஆடம்பர செலவினாலும் நஷ்டம் ஏற்படும். எதிரிகளின் எதிர்ப்புக்கு ஆளாவான்.

தனுசு பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகனுக்கு கேட்டவர்களாலும் ஏமாற்றுபவர்களாலும் செலவுன்டாகும். நன்றி மறப்பவர் மூலமும் பிறரை ஏமாற்றுவதன் மூலமும் பொருளை இழப்பர்,

மகரம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகர் அதிகமாக சாப்பிடுவார். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்பு கிட்டும். விரதம், உபவாசம் தான தர்மம் இவனது இலட்சியங்கள்.

கும்பம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் வனம் சென்று கடுமையான தவம் செய்யும் பேறு பெறுகின்றான். பெரியோர்களை உபசரித்து விருந்தோம்புதலில் அதிகமான பொருளை செலவளிப்பான்.

மீனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் கடல் கடந்து பிரயாணம் செய்வான். தரக்குறைவான சேர்க்கையினால் பாதிக்கப் படுவான்.அதிகமான பொருளையும் இழப்பான். பன்னிரெண்டுக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மேஷத்தில் இருந்தால் அதிகச் செலவும் உடல் நலப்பாதிப்பும் இருக்கும். தூக்கத்தில் பிரியமுள்ளவன். சுபன் இருந்தால் ஜாதகன் லாபம் பெற்றவன் ஆவான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் ரிஷபத்தில் இருந்தால் சிறந்த காளைகளினால் லாபமும், சிறந்த பெண்களால் லாபமும் உண்டு. சாஸ்திர சம்பதமான செய்திகளை பற்றி விவாதம் செய்வார். இதனால் வித்வான்களுடன் தொடர்பு வரும்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மிதுனத்தில் இருந்தால் பெண்களின் மீது ஆசை வைத்து அதனால் அதிகமான பணவிரயம் செய்வார். பேய் பிசாசு முதலியவற்றின் மூலமாகவோ, கெட்ட குணத்தின் மூலமாகவோ செலவழிக்க கூடியவனாகின்றான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் கடகத்தில் இருந்தால் பிராமணர்கள், தேவர்கள் ஆகியோர் வகையில் யாகம் முதலிய தர்ம காரியங்களை செய்வதாலும் செலவு ஏற்படும். நல்லவர்கள் இவரைப் பாராட்டிப் புகழ்வார்கள்.

பன்னிரெண்டுக்கு உடையவன் சிம்மத்தில் இருந்தால் அதிகமாக விரோதங்கள் வியாதியினால் உடல் நலம் பாதிப்பு, கெட்ட காரியத்தில் ஈடுபாடு இருக்கும். கல்வியால் செலவு ஏற்படும். திருடனாக மாறுவதும் உண்டு.

பன்னிரெண்டுக்கு உடையவன் கண்ணியில் இருந்தால் பெண்களோடு விசித்திரமான விளையாட்டுகளை விளையாடுபவன். கல்யாணம் முதலிய மங்களகரமான காரியத்தின் மூலமும், சோபையை தருகின்ற பொருளின் வழியிலும், சாதுகளின் வழியிலும் செலவு செய்பவனாயிருப்பன்.

பன்னிரெண்டுக்கு உடையவன் துலாத்தில் இருந்தால் பிராமணர்கள், தேவர்களுக்கு உறவினன் ஆவான். வேத சாஸ்திரப்படி விரதங்கள் திருப்பணிகள் நடக்க செலவு செய்வான். இந்திரியங்களை அடக்கி புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்து மிக்க புகழ் பெற்றவனாக விளங்குவான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் விருசிகத்தில் இருந்தால் கவன்குறையுள்ளவன், பிறரை அணுகுவான். ஆடம்பரத்திற்காக செலவு செய்பவன்,.தீய நண்பர்களின் உதவியால் நன்மை செய்தவர்களையே அதிகமாக நிந்திப்பான். ஏசுவான். திருடர்கள் சம்மன்ந்தபட்ட தொழிலை மேற்கொண்டு பொருளை செலவளிப்பான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் தனுசு இருந்தால் பலவிதமான விஞ்சனைகளாலும், கெட்டவரோடு சேர்வதாலும் செலவழிப்பன். செய்நன்றி மறந்தவன். பிறரை ஏமாறுபவன்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மகரத்தில் இருந்தால் குடி சாப்பாடு வகை செலவு செய்வான். தன் உறவினர்களை மதித்து வணங்காதவன். மிடமாக உண்பான். பிறரால் நிந்திக்கப் பட்டவன். பயிர் தொழில் அற்றவனாவான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் கும்பத்தில் இருந்தால் தேவர்கள், சித்த புருஷர்கள், பிராமணர்கள், தவம் செய்பவர்கள், தோத்திரம் செய்பவர்கள் இவர்களுக்காக செலவு செய்பவன். நல்லோர்களின் வழி நடப்பவன். சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்ட புண்ய கர்மங்களின் மூலமும் ஜாதகனுக்கு அதிக செலவுகள் உண்டாகும்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மீனமாக இருந்தால் கப்பல் யாத்திரையிலும் கெட்டவர்களின் நட்பாலும் விவகாரத்தாலும் செலவு உண்டாகும்.


Bakkianathan

Founder and Director https://exactpredictions.in/

One thought on “பனிரெண்டு பாவ பலன்கள்

  1. 🙏🙏🙏 அருமையான விளக்கம் வளர்க உமது தொண்டு 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!