தமிழ் ஜோதிடம்

யுகம்

பொதுவாக ஜோதிடம் பூமியின் இயக்கத்தை நான்கு யுகங்களாக பிரித்திருகின்றது. அவை பின்வருமாறு

க்ருதாயுகம் – 1728000 வருடங்கள்
த்ரேதாயுகம் – 1296000 வருடங்கள்
த்வாபரயுகம் – 864000 வருடங்கள்
கலியுகம் – 432000 வருடங்கள்

நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றோம்.

தமிழ் மாதங்கள்

தமிழ் ஜோதிடம் பணிரெண்டு தமிழ் மாதங்களை கொண்டது. முதல் தமிழ் மாதமானது சித்திரை என்று அழைக்கப் படுகின்றது. இந்த சித்திரை மாதம் ஏப்ரல் 14 ஆம் ஆங்கில தேதியில் பொதுவாக ஆரம்பிக்கும். பணிரெண்டு தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:

 • சித்திரை
 • வைகாசி
 • ஆணி
 • ஆடி
 • ஆவணி
 • புரட்டாசி
 • ஐப்பசி
 • கார்த்திகை
 • மார்கழி
 • தை
 • மாசி
 • பங்குனி

தமிழ் வருடங்கள்

சித்திரை தொடங்கி பங்குனி வரை முடியும் ஒவ்வொரு தமிழ் வருடத்தையும் ஒரு பெயர் சூட்டி அழைக்கின்றோம். மொத்தம் 6௦ வருடங்களின் பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வருடத்தின் பெயர் பிரபவ (1987-88). கடைசி வருடத்தின் பெயர் க்ஷய (2047-48). 6௦ வருடங்களின் சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் பிரபவ வருடத்தில் இருந்து சுழற்சி ஆரம்பிக்கும். 6௦ வருடங்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்படுள்ளது.

 • பிரபவ
 • விபவ
 • சுக்ல
 • ப்ரமோத
 • ப்ரஜோத்பத்தி
 • ஆங்கிரஸ
 • ஸ்ரீமுக
 • பவ
 • யுவ
 • தாத்ரு
 • ஈசுவர
 • பஹுதான்ய
 • ப்ரமாதி
 • விக்ரம
 • வ்ருஸ
 • சித்ரபானு
 • சுபானு
 • தாரண
 • பார்த்திவ
 • வ்யய
 • ஸர்வஜித்
 • ஸர்வதாரி
 • விரோதி
 • விக்ருதி
 • கர
 • நந்தன
 • விஜய
 • ஜய
 • மன்மத
 • துர்முக
 • ஹேமலம்ப
 • விளம்பி
 • விகாரி
 • ஸார்வரி
 • ப்லவ
 • சுபக்ருத
 • சோபக்ருத்
 • க்ரோதி
 • விசுவாவஸு
 • பராபவ
 • ப்லவங்க
 • கீலக
 • ஸௌம்ய
 • ஸாதாரண
 • விரோதக்ருத்
 • பரிதாவி
 • ப்ரமாதீச
 • ஆனந்த
 • ராக்ஷஸ
 • அநல
 • பிங்கல
 • காளயுக்த
 • ஸித்தார்த்த
 • ரௌத்ர
 • துர்மதி
 • துந்துபி
 • ருத்ரோத்காரி
 • ரக்தாக்ஷ
 • குரோதன
 • க்ஷய

தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ஒன்பது கோள்கள்

சூரியன் – Sun
சந்திரன் – Moon
குரு –  Jupitar
செவ்வாய் – Mars
புதன் – Mercury
சுக்ரன் – Venus
சனி – Saturn
ராகு – Raghu (ascending lunar node)
கேது – Kethu (descending lunar node)

மேற்சொன்ன ஒன்பது கிரகங்களையும் நாம் நவக்கிரகங்கள் என்றும் அழைக்க்கின்றோம். தமிழ் ஜோதிடம் யுரேனஸ், புளுட்டோ, நெப்டியூன் முதலான கிரகங்களைப் பயன் படுத்துவது இல்லை.

சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்தே, அதாவது வாண் மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களை சந்திரன் கடந்து செல்லும் கணக்கை வைத்தே  தமிழ் ஜோதிடம் கணிக்கப்படுகின்றது.

தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ராசிகள்

நமது பூமிக்கு மேல் இருக்கின்ற வானமண்டலத்தை ௦-36௦ டிகிரி கொண்ட ஒரு வட்டமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வட்டத்தை 3௦ டிகிரிகளாக (பாகைகள்) பிரித்தல் 12 பாகங்கள் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கின்ற ஒவ்வொரு பாகமும் ஒரு ராசி ஆகும். 12 ராசிகள் கொண்ட ராசி மண்டலத்தில் 1 ராசிக்கு = 3௦ பாகைகள் 3௦ x 6௦ = 1800 கலைகள் 30 x 60 x 60 = 108000 விகலைகள் 12 ராசிக்கு 108000 x 12 = 1296000 விகலைகள்

ஒரு ராசியில் 2¼ நட்சத்திரம் அடங்கியிருக்கும்

அதாவது ஒவ்வொரு ராசியிலும் 9 நட்சத்திர பாதங்கள் அடங்கியிருக்கும்.

ஒரு ராசிக்கு 3௦ பாகை அல்லது 1800 கலைகள்

ஒரு நட்சத்திரத்திற்கு 1800 / 2¼ = 800 கலைகள்

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்

ஒரு பாதத்திற்கு 2௦௦ கலைகள்

இனி எந்தெந்த ராசியில் எந்தெந்த நட்சத்திர பாதங்கள் அடங்கியிருகின்றது என்று பின்வரும் அட்டவணையில் காண்போம்.

Raasi NameSign
Mesham (மேஷம்) அசுவினி 1,2,3,4 பாரணி 1,2,3,4 கிருத்திகை 1 பாதங்கள் மேஷ ராசியை சார்ந்தது ஆகும். mesham
Rishabam (ரிஷபம்) கிருத்திகை 2,3,4 ரோகினி 1,2,3,4 மிருகசீரஷம் 1,2 பாதங்கள் ரிஷப ராசியை சார்ந்தது ஆகும். rishabam
Mithunam (மிதுனம்) மிருகசீரஷம் 3,4 திருவாதிரை 1,2,3,4 புனர்பூசம் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியை சார்ந்தது ஆகும். mithunam
Kadagam (கடகம்) புனர்பூசம் 4 பூசம் 1,2,3,4 ஆயில்யம் 1,2,3,4 பாதங்கள் கடக ராசியை சார்ந்தது ஆகும். kadagam
Simmam (சிம்மம்) மகம் 1,2,3,4 பூரம் 1,2,3,4 உத்திரம் 1 ஆம் பாதங்கள் சிம்ம ராசியை சாந்தது ஆகும். simmam
Kanni (கன்னி) உத்திரம் 2,3,4 ஹஸ்தம் 1,2,3,4 சித்திரை 1,2 பாதங்கள் கன்னி ராசியை சார்ந்தது ஆகும். kanni
Thulam (துலாம்) சித்திரை 3,4 சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3 ஆகிய பாதங்கள் துலாம் ராசியை சார்ந்தது ஆகும். thulam
Viruchigam (விருச்சிகம்) விசாகம் 4 அனுஷம் 1,2,3,4 கேட்டை 1,2,3,4 ஆகிய பாதங்கள் விருச்சிகம் ராசியை சார்ந்தது ஆகும். viruchigam
Dhanusu (தனுசு) மூலம் 1,2,3,4 பூராடம் 1,2,3,4 உத்திராடம் 1 ஆகிய பாதங்கள் தனுசு ராசியை சார்ந்தது ஆகும். dhanusu
Magaram (மகரம்) உத்திராடம் 2,3,4 திருவோணம் 1,2,3,4 அவிட்டம் 1,2 பாதங்கள் மகர ராசியை சார்ந்தது ஆகும். magaram
Kumbam (கும்பம்) அவிட்டம் 3,4 சதயம் 1,2,3,4 பூரட்டாதி 1,2,3 ஆகிய பாதங்கள் கும்ப ராசியை சார்ந்தது ஆகும். kumbam
Meenam (மீனம்) பூரட்டாதி 4 உத்திரட்டாதி 1,2,3,4 ரேவதி 1,2,3,4 ஆகிய பாதங்கள் மீன ராசியை சார்ந்தது ஆகும். meenam

27 நட்சத்திரங்களின் பெயர்கள்

மனிதன் பிறக்கும் பொழுது 27 நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் எதாவது ஒன்றில் தான் பிறக்கின்றான். மனிதன் எந்த நட்சத்திர பாதத்தில் பிரக்கின்றானோ அந்த பாதத்திற்க்குரிய எழுத்தில் தனது பெயரை வைத்துக் கொண்டால் அவன் வாழ்வு சிறக்கும். கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் நட்சத்திர பெயர்களும் அவற்றின் பாதங்களுக்கு உண்டான பெயர் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Star Name (நட்சத்திரம்)பாதம் (பெயர் முதல் எழுத்து பரிந்துரை)
Aswini (அசுவினி)1 சு 2 கே 3 சோ 4 ல
Bharani (பரணி)1 லி 2 லு 3 லே 4 லோ
Kiruthigai (கிருத்திகை)1 அ 2 இ 3 உ 4 எ
Rogini (ரோகினி)1 ஒ 2 வ 3 வி 4 வூ
Mirugaseerasam (மிருகசீர்ஷம்)1 வே 2 வோ 3 க் 4 கி
Thiruvaadhirai (திருவாதிரை)1 கு 2 த 3 ங் 4 ச
Punarpoosam (புனர்பூசம்)1 கே 2 கோ 3 ஹ 4 ஹி
Poosam (பூசம்)1 ஹூ 2 ஹே 3 ஹோ 4 ட
Aayilyam (ஆயில்யம்)1 டி 2 டு 3 டே 4 டோ
Magam (மகம்)1 ம 2 மி 3 மு 4 மே
Pooram (பூரம்)1 மோ 2 ட 3 டி 4 டு
Utthiram (உத்திரம்)1 டே 2 டோ 3 ப 4 பி
Hastham (ஹஸ்தம்)1 பு 2 ஷ 3 ண 4 ட
Chithirai (சித்திரை)1 பே 2 போ 3 ர 4 ரி
Suvathi (சுவாதி)1 ரு 2 ரே 3 ரோ 4 தா
Visaagam (விசாகம்)1 தி 2 து 3 தே 4 தோ
Anusam (அனுஷம்)1 க 2 நி 3 து 4 நே
Kettai (கேட்டை)1 நோ 2 யா 3 யீ 4 யு
Moolam (மூலம்)1 யே 2 யோ 3 ப 4 பி
Pooradam (பூராடம்)1 பு 2 த 3 ப 4 ட
Utthiradam (உத்திராடம்)1 பே 2 போ 3 ஜ 4 ஜி
Thiruvonam (திருவோணம்)1 கி 2 கு 3 கே 4 கோ
Avittam (அவிட்டம்)1 க 2 கி 3 கு 4 கே
Sadhayam (சதயம்)1 கோ 2 ஸ 3 ஸி 4 ஸே
Poorattadhi (பூரட்டாதி)1 ஸோ 2 ஸோ 3 த 4 தி
Utthirataadhi (உத்திரட்டாதி)1 து 2 ஸ்ரீ 3 ச 4 த
Revathi (ரேவதி)1 தே 2 தோ 3 ச 4 சி

3 யோகங்கள்

 • அமிர்தயோகம்
 • சித்தயோகம்
 • மரணயோகம்

27 உபயோகங்கள்

 • விஷ்கம்பம்
 • பரீதி
 • ஆயுஸ்மான்
 • சௌபாக்கியம்
 • சோபனம்
 • அதிகண்டம்
 • சகர்மம்
 • திரிதி
 • சூலம்
 • கண்டம்
 • விருத்தி
 • த்ருவம்
 • வியகாதம்
 • ஹர்ஷணம்
 • வச்சிரம்
 • கித்தி
 • விதிபாதம்
 • வரியான்
 • பரிகம்
 • சிவம்
 • சித்தம்
 • ஸாயம்
 • சுபம்
 • சுப்ரம்
 • பிரமம்
 • மகேந்திரம்
 • வைகிருதி

11 கரணங்கள்

 • பவம்
 • பாலவம்
 • கௌலவம்
 • தைதுனை
 • கரசை
 • வணிசை
 • பந்திரை
 • சகுனி
 • சதுஷ் பாதம்
 • நாகவம்
 • கிம்துஷ்கினம்

ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் சஞ்சரிக்கும் காலம்

சூரியன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்

சந்திரன் ஒரு ராசியில் நிற்பது 2¼ நாள்

செவ்வாய் ஒரு ராசியில் நிற்பது 1½ மாதம்

புதன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்

குரு ஒரு ராசியில் நிற்பது 1 வருஷம்

சுக்கிரன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்

சனி ஒரு ராசியில் நிற்பது 2½ வருஷம்

ராகு ஒரு ராசியில் நிற்பது 1½ வருஷம்

கேது ஒரு ராசியில் நிற்பது 1½ வருஷம்

2 – பக்ஷங்கள்

சுக்கிலபக்ஷம – வளர்பிறை – அமாவாசை கழித்த மறுநாள் முதல் பௌர்ணமி வரையில் உள்ள 15 நாட்கள் வளர்பிறை

கிருஷ்ணபக்ஷம் – தேய்பிறை – பௌர்ணமி கழித்த மறுநாள் முதல் அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் தேய்பிறை

திதிகள்

திதி என்றால் நாள் அல்லது தினம் என்பது ஆகும்.

பிரதமை
துவிதியை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரயோதசி
சதுர்த்தசி
பௌர்ணமி / அமாவாசை

இவற்றில் திவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி இவை எட்டும் வளர்பிறையில் சுப திதிகள்.

தேய்பிறையில் பிரதமை, துவிதியை, திரிதியை, பஞ்சமி இவை நாலும் சுபம் ஆகும். மற்ற திதிகள் அசுப திதிகள் ஆகும்.

தமிழ் ஜோதிடதில் பயன்படுத்தப்படும் கால அளவைகள்

1 கண்ணிமை2 விகற்பரை
6௦ விகற்பரை அல்லது 3௦ கண்ணிமை1 தற்பரை
2½ தற்பரை1 செகிண்டு
4 செகிண்டு1 கலை
6 கலை1 வினாடி
2½ வினாடி1 நிமிடம்
4 நிமிடம்1 பாகை அல்லது டிகிரி
6 பாகை1 நாழிகை
2½ நாழிகை1 மணி அல்லது ஹோரை
2 மணி1 ராசி
3¾ நாழிகை1 முகூர்த்தம்
7½ நாழிகை1 ஜாமம்
8 ஜாமம் (24 மணி)1 நாள்
7 நாள்1 வாரம்
15 நாள்1 பக்ஷம்
2 பக்ஷம்1 மாதம்
2 மாதம்1 ருது
2 அயனம்1 வருஷம்

ராசிகளும் தொடர்புகளும்

பொருள்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னி
சமூகப் பிரிவுக்ஷத்திரியர்வியாபாரிதொழிலாளிபூசாரிக்ஷத்திரியர்வியாபாரி
பாலினம்ஆண்பெண்ஆண்பெண்ஆண்பெண்
இயக்கம்நகரகூடியதுநிலையானதுபொதுவானதுநகரகூடியதுநிலையானதுபொதுவானது
இரவு/பகல்இரவுஇரவுஇரவுஇரவுபகல்பகல்
ஊனம்குருடுசெவிடுஊமைகுருடுசெவிடுநொண்டி
அளவுகொஞ்சம்சமம்அதிகம்அதிகம்கொஞ்சம்கொஞ்சம்
வெப்பநிலைசூடுசூடு\ & குளிர்சூடுகுளிர்சூடுசூடு
உடல்தலைமுகம்மார்புஇதயம்வயிறுஇடுப்பு
குணம்ரஜஸ்ரஜஸ்ரஜஸ்சாத்வீகம்சாத்வீகம்தாமஸம்
அதிபதிசெவ்வாய்வெள்ளிபுதன்சந்திரன்சூரியன்புதன்
நிறம்ரத்தச்சிவப்புவெள்ளைபச்சைவெள்ளைவயலேட்பன்நிறம்
இயல்புகொடூரம்இதம்கொடூரம்இதம்கொடூரம்இதம்
இனம்செம்மறியாடுகாளைஆண்-பெண்நண்டுசிங்கம்கன்னி
பொருள்துலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்
சமூகப் பிரிவுதொழிலாளிபூசாரிக்ஷத்திரியர்வியாபாரிதொழிலாளிபூசாரி
பாலினம்ஆண்பெண்ஆண்பெண்ஆண்பெண்
இயக்கம்நகரகூடியதுநிலையானதுபொதுவானதுநகரகூடியதுநிலையானதுபொதுவானது
இரவு/பகல்பகல்பகல்இரவுஇரவுபகல்இரவு, பகல்
ஊனம்ஊமைநொண்டிகுருடுசெவிடுஊமைநொண்டி
அளவுஅதிகம்சமம்சமம்சமம்சமம்அதிகம்
வெப்பநிலைசூடுகுளிர்சூடுசூடுசூடுகுளிர்
உடல்தொப்புள்பிறப்பு உறுப்புதொடைமுழங்கால்கணுக்கால்கால்
குணம்ராஜசம்ராஜசம்சாத்வீகம்தாமஸம்தாமஸம்சாத்வீகம்
அதிபதிவெள்ளிசெவ்வாய்வியாழன்சனிசனிவியாழன்
நிறம்நீலம்தங்கநிறம்சாம்பல்நிறம்வெள்ளைகருமைபச்சை
இயல்புகொடூரம்இதம்கொடூரம்இதம்கொடூரம்இதம்
இனம்துலாம்தேள்குதிரை-மனிதன்முதலைநீர்க்குடம்மீன்

கிரகங்களும் தொடர்புகளும்

பொருள்சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
சமுகப்பிரிவுக்ஷத்திரியன்வியாபாரிக்ஷத்திரியன்தொழிலாளி
பாலினம்ஆண்பெண்ஆண்அலி
நிறம்சிவப்பு-நீலம்வெள்ளைசிவப்பு-வெள்ளைபச்சை
குணம்சாத்வீகம்சாத்வீகம்தாமஸம்ராஜசம்
தொழில்அரசர்அரசர்சேனாபதிஇளவரசர்
அதிதேவதைஅக்னிஈஸ்வரர்சுப்பிரமணியர்விஷ்ணு
ப்ரத்யதிதேவதைருத்ரர்கௌரிபூமிபுருஷோத்தமர்
திசைகிழக்குவடமேற்குதெற்குவடக்கு
வித்யாசமஸ்கிருதம்தமிழ்மந்திரம்ஜோதிடம்
வாகனம்இரதம்முத்துவானூர்திஅன்னம்குதிரை
சுவைகசப்பு, காரம்உப்புகசப்புஅறுசுவைகள்
இயல்புகொடூரம்இடமானதுகொடூரம்இடமானது
உச்சநிலைமேஷம்ரிஷபம்மகரம்கன்னி
நீச்சநிலைதுலாம்விருசிகம்கடகம்மீனம்
சொந்தவீடுசிம்மம்கடகம்மேஷம், விருச்சிகம்மிதுனம், கன்னி
பார்வை774,7,87
நண்பன்சந்திரன், செவ்வாய், வியாழன்சூரியன், புதன்சூரியன், சந்திரன், வியாழன்சூரியன், வெள்ளி
தான்யம்கோதுமைநெல்துவரம் பருப்புபச்சைப்பயிறு
சமித்துஎருக்குபலாசுநூக்கமரம்நாயுருவி
புஷ்பம்சிவப்புதாமரைவெள்ளை, லில்லிசெண்பகப்பூவெண்பூ
உலோகம்தாமிரம்வெண்கலம்தாமிரகூட்டு உலோகம்பித்தளை
மணிக்கற்கள்மாணிக்கம்முத்துபவளம்மரகதம்
துணிசிவப்புப்பட்டுவெண்பட்டுசிவப்புப்பட்டுபச்சைப்பட்டு
இருப்பிடம்எண்கோணம்சதுரம்முக்கோணம்அம்பு உருவம்
தரம்அசுபன்அசுபன்அசுபன்சுபன்
பொருள்குருசுக்ரன்சனிராகுகேது
சமுகப்பிரிவுஆசாரியார்ஆசாரியார்சண்டாளன்நீசன்நீசன்
பாலினம்ஆண்பெண்அலிஅலிஅலி
நிறம்மஞ்சள்வெள்ளைகருமைகருமைபல நிறம்
குணம்சாத்வீகம்ராஜசம்தாமஸம்தாமஸம்தாமஸம்
தொழில்மந்திரிமந்திரிபணியாள்சமையற்காரர்சமையற்காரர்
அதிதேவதைஇந்திரன்இந்திரன்யமன்காலன்பிரம்மா
ப்ரத்யதிதேவதைபிரம்மாஇந்திராணிபிரஜாபதிசர்ப்பராஜாசித்ரகுப்தன்
திசைவடகிழக்குதென்கிழக்குமேற்குதென்மேற்கு
வித்யாசமஸ்கிருதம்சமஸ்கிருதம்நீசபாஷைநீசபாஷைநீசபாஷை
வாகனம்யானைபருந்துகாகம்ஆடுசிங்கம்
சுவைஇனிப்புபுளிப்புபுளிப்புபுளிப்புபுளிப்பு
இயல்புஇதம்இதம்கொடூரம்கொடூரம்கொடூரம்
உச்சநிலைகடகம்மீனம்துலாம்விருச்சிகம்விருச்சிகம்
நீச்சநிலைமகரம்கன்னிமேஷம்ரிஷபம்ரிஷபம்
சொந்தவீடுதனுசு, மீனம்ரிஷபம், துலாம்மகரம், கும்பம்கன்னிமீனம்
பார்வை5,7,973,7,1௦77
நண்பன்சூரியன், சந்திரன், செவ்வாய்புதன், சனிபுதன், சந்திரன்
தான்யம்கடலைஅவரைஎள்ளுஉளுந்துகொள்ளு
சமித்துஅரசமரம்அத்திவன்னிஅருகம்புல்குசப்ப்புல்
புஷ்பம்மல்லிகைவெண்தாமரைகருநீலலில்லிமந்தாரைசிவப்புலில்லி
உலோகம்தங்கம்முத்துகள்இரும்புகருங்கல்உலோகத்தாது
மணிக்கற்கள்புஸ்பராகம்வைரம்நீலக்கல்கண்ணாடிக்கல்வைடூரியம்
துணிமஞ்சள்பட்டுவெண்பட்டுநீலப்பட்டுகரும்பட்டுசிவப்புபட்டு
இருப்பிடம்நீள்சதுரம்ஐங்கோனம்குப்பைஇருள்பொந்து
தரம்சுபன்அசுபன்அசுபன்அசுபன்அசுபன்

Bakkianathan

Founder and Director https://exactpredictions.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!